கிரிக்கெட்டில் பெற்ற - TopicsExpress



          

கிரிக்கெட்டில் பெற்ற தங்க பேட்டை உத்தரகாண்டில் பலியானோர்களுக்கு அர்ப்பணித்தார் ஷிகர் தவான்: ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா மீண்டும் சாம்பியன் ஆனாது. இந்த கிரிக்கெட் தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி 363 ரன்கள் எடுத்தற்காக ஷிகர் தவானுக்கு தங்க பேட் விருது வழங்கப்பட்டது. பின்னர் நன்றி தெரிவித்த ஷிகார் தவான், தனது திறமைக்காக வழங்கப்பட்ட இந்த தங்க பேட் விருதை உத்தரகாண்ட் வெள்ளத்தில் உயிரிழந்தோருக்கு சமர்பிப்பதாக அறிவித்தார். மேலும் அங்கு தவிக்கவிடப்பட்டுள்ளவர்கள் விரைவில் வீடு திரும்ப வேண்டி நான் பிரார்த்திக்கிறேன் என்று கூறினார். இந்த அறிவிப்பை அடுத்து ஷிகர் தவான் மக்கள் மனதில் தனியொரு இடத்தை பிடித்துவிட்டார். முன்னதாக இதுபோன்று யுவராஜ் சிங், தனக்கு வழங்கப்பட்ட விருதை டெல்லியில் பேருந்தில் கடத்தி கற்பழிக்கப்பட்டு உயிரிழந்த கல்லூரி மாணவிக்காக அரிப்பணித்தார். மனோஜ் திவாரியும் கொல்கத்தா மருத்துவமனை தீவிபத்தில் இறந்தோருக்கு தனது விருதை வழங்கினார்.
Posted on: Mon, 24 Jun 2013 03:21:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015