திணிக்கப்பட்ட - TopicsExpress



          

திணிக்கப்பட்ட ஒருமைப்பாடு திணிக்கப்பட்ட ஒருமைப்பாட்டை ஏற்றுக்கொண்டு, நாட்டுக்காகப் போராடி இருக்கின்றார்கள். இந்த வேளையில், உத்தரகாண்டில், கேதார்நாத் பள்ளத்தாக்கில், இன்னமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் மரணத்தின் பிடியில் சிக்கித் தவிக்கின்றார்கள். அங்கும் எங்கள் தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர்கள், தங்கள் உயிர்களைத் துச்சமாகக் கருதி மீட்புப் பணிகளில் ஈடுபட்டு இருக்கின்றார்கள். ஆனால், கொள்ளிக்கட்டையைக் கொண்டு வந்து எங்கள் நெஞ்சில் திணிப்பதைப் போல, சிங்களவர்களைக் கொண்டு வந்து இங்கே பயிற்சி கொடுக்கின்றாய். இந்திய இராணுவத்தை ஒன்றும் நாங்கள் வெறுக்கவில்லை. எங்கள் மக்களைக் கொன்றவனுக்குப் பயிற்சி கொடுப்பதைத்தான் எதிர்க்கின்றோம். கூட்டுக் குற்றவாளி இந்தியா அவனை இங்கே அழைத்து வருவதற்கு என்ன காரணம்? அந்தப் படுகொலைகளுக்கு இந்திய அரசும் உடந்தையான கூட்டுக் குற்றவாளி. அதுதான் காரணம். இவர்கள்தாம் ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தார்கள்; ஆயிரம் கோடிப் பணம் கொடுத்தார்கள்; கொத்துக்குண்டுகளை வீசுவதற்கு உடந்தையாக இருந்தார்கள்; உலகம் தடை செய்த ஆயுதங்களைப் பயன்படுத்தினார்கள். இந்திய இராணுவ அதிகாரிகளை அனுப்பி போரை இயக்கினார்கள். Read more at: tamil.oneindia.in/news/2013/06/25/tamilnadu-vaiko-warns-centre-over-training-sri-lanka-177875.html
Posted on: Tue, 25 Jun 2013 16:09:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015