1,66,021 ஃபோர்டு ஃபிகோ - TopicsExpress



          

1,66,021 ஃபோர்டு ஃபிகோ மற்றும் கிளாஸிக் கார்களை ரீகால் செய்கிறது ஃபோர்டு! Ford recalls 1.66 Lakh Units Of Figo, Classic - Problems with rear twist beam and power steering hose! 1,66,021 ஃபிகோ மற்றும் கிளாஸிக் கார்களை திரும்ப அழைத்திருக்கிறது ஃபோர்டு நிறுவனம். இந்திய ஆட்டொமொபைல் வரலாற்றிலேயே இதுதான் மிகப்பெரிய ரீகால். 2011 ஜனவரி மாதம் முதல் 2012 ஜூன் மாதம் வரை தயாரிக்கப்பட்ட 1,09,569 ஃபோர்டு ஃபிகோ கார்களும், 22,453 கிளாஸிக் செடான் கார்களும் rear twist beam பாகத்தில் இருக்கக்கூடிய பிரச்னைகளுக்காக திரும்ப அழைக்கப்படுகிறது. 2010 ஜனவரி முதல் 2010 ஆகஸ்டு வரை மற்றும் 2011 மார்ச் முதல் 2011 நவம்பர் வரை தயாரிக்கப்பட்ட 30,681 ஃபிகோ கார்களும், 3418 கிளாஸிக் செடான் கார்களும் power steering hose பாகத்தில் இருக்கக்கூடிய பிரச்னைகளுக்காக திரும்ப அழைக்கப்படுகிறது. திரும்ப அழைக்கப்படும் அனைத்து கார்களிலும் பிரச்னை இருக்க வாய்ப்பில்லை எனவும், பிரச்னை இருக்கும் கார்களில் மட்டும் தேவையான ரிப்பேர் வேலைகள் செய்யப்படும் என ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. நீங்கள் ஃபோர்டு ஃபிகோ அல்லது கிளாஸிக் வைத்திருக்கிறீர்களா? உங்கள் வாகனத்தில் பிரச்னை உள்ளதா என்று தெரிந்துகொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள் india. ford/ ford-service/ field- service-action
Posted on: Thu, 19 Sep 2013 03:06:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015