6 (மெழுகுவர்த்திகள்) - - TopicsExpress



          

6 (மெழுகுவர்த்திகள்) - திருப்புமுனை ஆகா வேண்டும் தற்பொழுதைய தமிழ் திரைஉலகில் எந்தவொரு வித்தியாசமான படைப்பையும் எளிதாக எடுக்கவும் முடியவில்லை , அப்படியே வெளியே வந்தாலும் , ஆதரவும் விமர்சனமும் ஒன்றாகவே இருந்தும் அந்த படத்தை முற்றிலும் ஒழிக்கவே படு படுகின்றனர் . இவைகளை தாண்டியும் பெரும்பான்மை மக்கள் வெற்றியும் பெற வைக்கின்றனர் அதற்க்கு சாட்சி ஆதலால் காதல் செய்வீர் & தங்கமீன்கள்.ஒரு படைப்பாளி தன்னுடைய முயற்சியை சிறிதும் குறைத்துக்கொள்ளாமல் சொல்ல விரும்பியதை சொல்லி அவர்களுக்கு என்று பெரிய ரசிகர்களை உருவாக்கிவிட்டனர் ராம் மற்றும் சுசீந்திரன் . இவர்களை போலவே இயக்குனர் துரை நீண்டகாலமாக தன்னுடைய முயற்சியை ஆணித்தரமாக பதிக்க விரும்புகிறார் , இவருடைய முதல் படம் முகவரி தொடர்ந்து நேபாளி வரை , இவருடைய படங்கள் என்னை மிகவும் கவர்ந்தது (காதல் சடுகுடு தவிர ). ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய வித்தியாசமான அணுகுமுறையில் கவர வைத்தவர். முதல் முயற்சி என்று அவ்வளவு எளிதாக எவரும் தோற்று போகும் வாழ்கையை பதிவு செய்ய விரும்ப மாட்டார்கள் , ஆனால் அதையே துணிந்து செய்தவர் இயக்குனர் துரை . முகவரி , தொட்டிஜெயா & நேபாளி இந்த மூன்று திரைப்படமும் முக்கியமான திரைப்படமே. அது மேக்கிங் , கதை , திரைக்கதை என்று மூன்று படத்திலும் ஒவ்வொன்று சிறப்பு. அதே போல வேறு வேறு தளங்களில் பயணிக்க அவர் விரும்புவதையும் காட்டுகிறது. 6 திரைப்படத்தின் முன்னோட்டம் கீழே உள்ள லிங்கை காணுங்கள் https://youtube/watch?v=T29LjEw8g84 https://youtube/watch?v=QngNcKvrGSQ இப்பொழுது நான்கு வருடங்களாக கடினமாக உழைத்து , வெளியிட்டுக்கு கொண்டு வந்துவிட்டார் 6 மெழுகுவர்த்திகள் திரைப்படத்தை. இந்தபடத்தின் முன்னோட்டம் பார்க்கையில் நம்மகி பலவிதமான செய்திகளை நினைவில் கொண்டு வருகிறது , ஏதோ பழிவாங்கல் கதை என்று மட்டும் யூகிக்க முடிகிறது. ஆனால் துரை மீது உள்ள நம்பிக்கை முகவரி கதையும் தொட்டிஜெயா திரைக்கதையும் நேபாளி மேகிங்கும். இப்பொழுது சேர்ந்து இந்த படத்தில் இருக்கும். நம்மை சுவாரசியமாக கொண்டு செல்லும் என்றே நம்புகிறேன். இயக்குனராக தனக்கு வாழ்வா சாவா என்றே இந்த படம் அவருக்கு இருந்து இருக்கும் , ஆகையினால் இந்த படம் அவரை என்னை போல நம்பி கொண்டு இருப்போருக்கும் மிக ஆர்வத்தை கூட்டியுள்ளது. ஜெயமோகன் வசனம் மிகபெரிய ஆர்வத்தை இன்னும் அதிக படுத்தி உள்ளது (எனக்கு அவரின் வசனங்கள் நான் கடவுள், அங்காடிதெரு , நீர்பறவை , கடல் படங்களில் பிடிக்கும் ). அவைகள் கதைக்கு மிக உறுதுணையாக இருக்கும் என்று நம்பலாம். ஷாம் தோல்வியை மட்டுமே இதுவரையில் கண்டு வந்த நாயகன் , அதை இப்படம் மாற்றி அமைக்க வேண்டும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இப்படத்திருக்கு முகவரியே ஷாம்மின் உழைப்பை காட்டிய அந்த புகைப்படங்கள் தான் மிரள வைத்தது. இப்படியும் ஒரு கலைஞன் தன்னை வருத்திக்கொண்டு இருப்பனா என்று ஆச்சிரிய படாமல் இருக்க முடியவில்லை. நிச்சயம் அவருக்கு இது திருப்புமுனையாக அமைய வேண்டும். இத்திரைப்படத்தின் மேல் மிக பெரிய நம்பிக்கையை இயக்குனர் மற்றும் ஷாம் இவர்களை போலவே நாமும் நம்பிக்கொண்டு இருக்கின்றோம்.மக்களின் வரவேற்ப்பை பெற்று மிக பெரிய வெற்றி பெற வேண்டும் 6 மெழுகுவர்த்திகள். - Nazar Ali (VP, Studio 9) Nazar Ali RK Suresh https://youtube/watch?v=T29LjEw8g84
Posted on: Sat, 07 Sep 2013 16:11:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015