Assalamu alaikkum varahmathullah சவூதி - TopicsExpress



          

Assalamu alaikkum varahmathullah சவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு, அஸ்ஸலாமு அலைக்கும். சவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,வரக்குடிய நவம்பர் மாதம் 3ஆம் தேதியுடன் அரசாங்கம் நமக்கு கொடுத்த கால அவகாசம் முடிவடைகிறது.என் BOSS-ன் சகலை CID பிரிவில் ஒரு பொறுப்பான பதவியில் இருக்கிறார்.அவர் எனக்கு தந்த தகவலின்படி.. 3 ஆம் தேதி இரவே அவர்களுடைய வேட்டை தொடங்கிவிடுமாம்.அவர்களின் நோக்கம் நம்மையெல்லாம் விரட்டி அடிக்க வேண்டும் என்பதல்ல.இருக்கக் கூடியவர்கள் முறையான ஆவணத்துடன் இருக்க வேண்டும் என்பதுதான்.ஒரு SPONSOR பெயரில் பல நிறுவனங்கள் இருக்கலாம். ஒவ்வொரு நிறுவனத்துக்கும் சவூதி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் இருக்கும்.அந்தந்த வேலைகளில்தான் இனிவரும் காலங்களில் நாம் தம் பணிகளைத் தொடர முடியும்.நம் கஃபீல் பெயரில் ஒரு பெரிய சூப்பர்மார்க்கெட்டோ அல்லது ஹோட்டலோ அல்லது எலக்ட்ரானிக் கடையோ எதுவாக இருந்தாலும் நம் இகாமா வில் என்ன PROFESSION உள்ளதோ அந்த வேலையை அந்த நிறுவனத்தில் மட்டும் தான் இனி நாம் செய்ய வேண்டும்.நம் கஃபீல் நிறுவனம் தானே என்று அங்கும் இங்கும் மாறி மாறி வேலை செய்ய இனி அனுமதி இல்லை.அது மட்டுமல்லாமல் இங்குள்ள LABOUR OFFICE – ல் நாம் எந்த நிறுவனத்துக்கு என்ன வேலைக்காக வந்தோம் என்கிற எல்லா விபரங்களும் தெள்ளத்தெளிவாக இருக்கும். ஆகவே நாம் யாரையும் எளிதில் ஏமாற்றி விட முடியாது.அதுபோல் இனிமேல் நம்மையெல்லாம் விரட்டிப்பிடிக்கும் அதிகாரம் பாஸ்போர்ட் துறைக்கு (JAWASATH) கிடையாது.எல்லா பொறுப்புகளும் காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. இது வரை சாதுவாக இருந்த அதிகாரிகளெல்லாம் இனி அரக்கர்களாக மாறும் அபாயமும் உண்டு. இதுவரை நம்முடன் அன்போடு பழகிய நல்ல இதயமுள்ள அதிகாரிகளெல்லாம் பல்வேறு இடங்களுக்கு பணிஇட மாற்றம் செய்யப்படுகிறார்கள். அது மட்டுமல்லாமல் முறையான ஆவணங்கள் இல்லாதவர்களை ரியாத் ஜித்தா போன்ற பெரு நகரங்களுக்கு கொண்டு செல்வதற்குரிய பெரிய வாகனங்களும் ஆங்காங்கே தயார் நிலையில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.ஆகவே அன்பார்ந்த சகோதரர்களே..உங்களுடைய இகாமா வில் என்ன PROFESSION உள்ளதோ அந்த வேலையை மட்டுமே செய்யுங்கள்.நீங்கள் பார்க்கும் வேலைக்கும் இகாமா வில் உள்ள PROFESSION க்கும் சம்பந்தமில்லை என்றால் உடனடியாக PROFESSION CHANGE பண்ணி விடுங்கள். இதற்கு எவ்வித கட்டணமும் கிடையாது.இன்னும் 5 நாட்களே உள்ளன.ஒரு வேளை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உங்களைப் பிடித்தால் உடனடியாக உங்கள் SPONSOR க்கு ஃபோன் செய்து விபரத்தை தெரிவித்து விடுங்கள். பிடிபட்டவர்களை 24 மணி நேரம் உள்ளூர் ஸ்டேஷனில்தான் வைத்திருப்பார்களாம்.அதற்டையில் உங்கள் SPONSOR வந்து சில விஷயங்களுக்கு பொறுப்பேற்று உங்களை அழைத்துச்சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.24 மணிநேரம் கழிந்து விட்டால் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனால் மட்டுமே உங்களைக் காப்பாற்ற முடியும். நன்றி ..... S.A.SHAIK MOHAMED.
Posted on: Tue, 29 Oct 2013 17:08:53 +0000

Trending Topics



argin-left:0px; min-height:30px;"> 360 tomato genomes and not a lot of sequence variation. So,

Recently Viewed Topics




© 2015