Facebook என்ன - TopicsExpress



          

Facebook என்ன இளிச்சவாயா?! கொஞ்ச நாள் முன்னாடி ஒரு Blog ல ஒரு தத்துவம் படிச்சேன் " நன்றி - முகநூல் "-னு போட்டு இருந்தது... நானும் சரி முகநூல்னா அது ஏதோ அகநானூறு, புறநானூறு மாதிரி சங்க இலக்கிய நூல் போலன்னு கம்முன்னு விட்டுட்டேன். நேத்து தான் என் Friend சொன்னான் முகநூல் = Facebook-னு அடப்பாவிகளா..! " Facebook is a Social Network..! " அதாவது அது ஒரு சமூக தளம், Facebook-ங்கறது அதோட பெயர். பெயரை கூடவா மொழி பெயர்பீங்க? (தமிழ் வளர்க்குறாங்களாமாம்... புல்லரிக்குதுப்பா!) இப்ப இங்கிலாந்து கிரிக்கெட்கேப்டன் பேரு " Mr. Cook " அப்ப அவரை இங்கிலாந்து அணி தலைவர் " திரு. சமையல்காரர்னு " தான் சொல்லுவீங்களா.?! நமக்கு இங்கிலீஷ்காரன்/ அமேரிக்கா காரன் கண்டுபிடிச்ச பொருள் வேணும். - ஆனா அதுக்கு அவன் வெச்ச பேரு மட்டும் வேணாம்.! என்னா நியாயம் சார் இது..? இனிமேலாச்சும் யாரோ கண்டுபிடிச்ச பொருளுக்கு தமிழ்ல பெயர் வெக்கறதை விட்டுட்டு நாமளா எதாவது கண்டுபிடிச்சி, அதுக்கு நல்ல தமிழ் பெயரா வெக்கலாம். அப்புறமா "நாங்க தமிழன் "னு..! சட்டை காலரை தூக்கிவிட்டுக்கலாம். ( ஆமா.. " காலர் "-க்கு தமிழ்ல என்ன..? ) இதுவரைக்கும் நிறைய பேர் இது பத்தி தெரியாம " முகநூல்" னு சொல்லியிருப்பீங்க. பரவாயில்ல இனிமே திருத்திக்கோங்க..! ஆனா அதை விட்டுட்டு... " நான் Facebook-ஐ முகநூல்னு தான் சொல்லுவேன் " னு அடம்பிடிச்சீங்க அவ்ளோதான்... பின்ன அதென்ன சார்.. Facebook மட்டும்தான் இளிச்சவாயா.? அப்ப இந்த ORKUT, GOOGLE, PICASA, TWITTER, YAHOO, APPLE, iPhone, Sim Card இதுக்கெல்லாம் தமிழ்ல என்னான்னு சொல்லிட்டுபோங்க... ஆங் மறந்துட்டேனே.. அப்படியே KARATE, Kung-Fu-க்கும் என்னன்னு சொல்லிடுங்க.. ( ஜப்பான், சைனீஸ் மொழி மட்டும் விதிவிலக்கா என்ன..?!!) # இது சுட்டது தான். ஆனால் ஏதோ ஒரு விதமான நியாயம் இருப்பதால் சுவற்றில் பதிவிடுகிறேன்.! நாட்டாமை காரங்க வந்து தீர்ப்பு சொல்லுங்கப்பு
Posted on: Thu, 25 Jul 2013 05:27:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015