Pmd Boopathi மனிதனை விழுங்கும் - TopicsExpress



          

Pmd Boopathi மனிதனை விழுங்கும் கணினியும், மனிதநேயத்தை விழுங்கும் கார்பரேட்டுகளும், மழை நீரை சேமிக்காத மானுடமும், விவசாயியை மதிக்காத நகரத்தாரும்: People been continuously affected by Artificial Disaster created by Multi-National Corporations for looting wealth of Poor Farmers who are been serving the last mile production of all the eateries consumed in the city but most of the youths are not been taught or brought in a way so as to look out of box and care for the rights of people whom they are bound to show their respect. Instead everything is been shrinked by the useless educating system of hunting for marks as this kind of action arrived because of Western Education system which has spoiled everything and none is provided with the capability to think of raising voice for the havens. Its very sad that none of us, especially people from city are not concerned about saving the rain water for the next coming years as there is no security that we would be getting water all the time. And also, our mentality has shrinked to a level that our youths who are masters of collecting information about the cars, computers, electronic gazettes being released into market are not interested to know anything about the environment, down stream process where their food comes from and their responsibility to care for the people who feed them which for me is unfit for anything. As like Thomasmur told, England is a typical country where Humans are been swallowed by Sheeps and like that here we could see Computers started eating up people and their humanity. மலைநிலம் போனால் என்ன? விளைநிலம் போனால் என்ன? கார்ப்பரேட்டுகள் ஆற்றையும், மலையையும், காட்டையும் கொள்ளையடித்தாலென்ன? கொலை செய்தாலென்ன? அந்த கார்பரேட்டால் இயங்கும் கூத்தாடிகள்(நான் நடிகர் வசையை சொல்லலீங்கோ) அதற்கு எதிராக நடித்தால் அவனை உண்மையென போற்றுவதென்ன?? இயற்கையாலான தன்னையும் ஒரு நல்ல விலைக்கு எடுத்துக் கொண்டால் போதும், அதற்கேற்ற ஒரு சிலை நிலமாய் நான் கிடக்கத் தயார் என்ற இயற்கைக்கு விரோதமான மனிதனாகவும், மறுகாலனிய சிந்தனை மனிதனை மாற்றியிருப்பதுதான் ஆகப்பெரிய கொடூரம். உலகமயமாக்கல் என்ற பெயரினாலும், ஆதீத மருவிபோன சிந்தைகளாலும், வளர்ச்சியின் ஊடாக ஸ்காட்லாந்தில் 15,000 பழங்குடி மக்கள் வாழ்விடத்தை 1,31,000 ஆடுகள் பிடித்துக்கொண்டன என்று எழுதிய ‘கற்பனா உலகம்’ என்ற நூலின் ஆசிரியர் தாமஸ்மூர் “இங்கிலாந்து ஒரு விநோதமான பூமி, அங்கு செம்மறியாடுகள் மனிதர்களை விழுங்குகின்றன” என்றார். அதனை போல வேளாண்மை தலைசிறந்து விளங்கிய பூமியான நமது நாட்டில் சேவைத்துறை ‘வளர்ச்சியில்’ கணினிகள் மனிதர்களை விழுங்குவதை நாம் எங்கும் பார்க்காமல் இல்லை. ஒரு பட்டதாரி பையனிடம் கரும்பு எங்கிருந்து வெட்டுவார்கள் என்று கேட்டதற்கு, “மரத்திலிருந்து” என்றார். மறுகாலனிய அடிமைத்தனக் கல்வி நம்மிடமிருந்து மண்ணை மட்டுமல்ல, மனிதத் தேடலையே பறித்துவிட்டது. “நான் பாக்குற வேலைக்கு இந்த அறிவு போதும், நான் சம்பாதிக்கறதுக்கு இந்த வேலை ஓ.கே.” என்பதோடு அவனுடைய சமூகத் தொடர்பை அறுத்துவிடுகிறது. இயற்கையை ஊடுருவி உணரும் திறனும், அதை நமக்கு உணர்த்தும் திறனும், இத்தனை நுணுக்கமாக இயற்கை வளங்களை, பன்முகங்களை அறிந்து விளங்கச் செய்யும் அந்தக் காலத்து மனிதர்களின் அறிவில் ஒரு சதவிதமாவது இயற்கையைப் பற்றியதில் இன்று நமக்கு உண்டா? விதவிதமான கார்களின் பெயரும், செல்போன்களின் பெயரும், கணினிகளின் பெயரும் தெரிந்த நம் பிள்ளைகளுக்கு நம்மைச் சுற்றியிலுள்ள இயற்கையின் வகைகளை எந்த அளவுக்கு அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை அறியும் போது மனம் மிகவும் பதைபதைக்கிறது.. மந்தையில் நின்று, சுய சிந்தையை தொலைத்த இளைஞா மைக்ரோசாப்ட் கணினியும், மெக்டோனல்ட்ஸ் பர்கரும், கனேடியன் பிசாவும் மட்டுமே வாழ்க்கை அல்ல இவை அனைத்தையும் தாண்டி ஒரு நீர் ஓட்டம் மிக்க ஒரு அழகிய வாழ்க்கை உள்ளது.. அது தான் என்றும் உன்னை நிலைபெற செய்து, வாழ்வில் அனைத்தையும் பெற்ற செல்வந்தனாக உன்னை வழிநடத்தும். M M Roadways
Posted on: Thu, 30 Oct 2014 07:33:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015