SDPI கட்சியின் 5 ஆம் ஆண்டு - TopicsExpress



          

SDPI கட்சியின் 5 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு வட சென்னை மாவட்டம் ராயபுரம் தொகுதியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி 28.06.2013 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தொகுதி தலைவர் கோல்ட் ரபீக் தலைமை தாங்கினர். மாநில செயலாளர் அமீர் ஹம்சா,மாவட்ட தலைவர் முஹம்மது ரஷீத் ,மாவட்ட பொது செயலாளர் A .K .அப்துல் கரீம் ,பொருளாளர் கேப்டன் முன்னா,செயலாளர்கள் காஜா,துணை தலைவர் ஜாகிர் மற்றும் தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். SDPI கட்சியின் மாநில பொது செயலாளர் நிஜாம் அவர்கள் நலத்திட்ட உதவியை வழங்கி துவக்கிவைத்தார். இந்த பொதுக்கூட்டத்தில் SDPI கட்சியின் மாநில தலைவர் KKSM தெஹ்லான் பாகவி,மாநில பொது செயலாளர் நெல்லை முபாரக்,மாநில செயலாளர் ரத்தினம்,மாநில செயற்குழு உறுப்பினர் K செய்யது இப்ராகிம் மற்றும் மத்திய சென்னை மாவட்ட தலைவர் நாஜிம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 12 தையல் மெசின்,2 நடமாடும் இஸ்திரி பெட்டிகளுடன் கூடிய வண்டி,சுய தொழில் செய்வதற்கான தள்ளுவண்டி,200 பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களுடன் கூடிய பேக்,5 முதியோர்களுக்கு மூக்கு கண்ணாடி,சுய தொழில் செய்வதற்கான உதவி தொகை,60 பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை,2 மாற்றுதிரனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம்,10 மற்றும் 12 ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசு ஆகியவை வழங்கப்பட்டன.இதனுடைய மொத்த மதிப்பு சுமார் 3,50000 லட்சம் ஆகும். இந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு கட்சிகளை சார்ந்த 100 க்கும் மேற்பட்டவர்கள் SDPI கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டதின் ஆரம்பமாக UAPA என்ற கருப்பு சட்டத்தை பற்றிய ஒரு விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. கூட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரத்தும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். by - SDPI MEDIA sdpitnhqmedia@gmail SDPI party foundation day 5th year Celebration, by North Chennai ,Royapuram constituency Conducts Grand Public meeting and welfare assistance and Highest mark school peoples awarding on 28.06.2013. This event led by Royapuram constituency leader Gold Rafique. And This event led presence by State Secretary Amir Hamza, Muhammad Rashid District President, District General Secretary A. K. Abdul Karim, Captain Munna Distr.Treasurer, Dist.Secretary Kaja , Dist.vice president Zakir. SDPI state general secretary of the party Nizam mohaideen Started the welfare assistance. In the Meeting Special speech by SDPI state president KKSM Thehalan bakavi, state general secretary Nellai Mubarak ,state executive member Syed Ibrahim and Central Chennai district president of Mohammed Nazim. The welfare assistance function 12 Sewing Machine, 2 mobile ironing boxes with a Vehicle, 2 self-employment Vehicle , educational equipment with bag for 200 school students, 5 spectacles for Old people, scholarships for self-employment, scholarships for 60 school students ,three Wheeler Cycle for 2 handicaps, Memorial Prizes for those who received the highest scores in 10th Standard and 12standard .,and its total value for the welfare assistance is approximately 3.50000 lakh. More than 100 persons of other political attaching themselves to the SDPI party in front of sdpi leaders In the beginning of the meeting an awareness stage drama of UAPA black law presented. In the pouring rain, regardless of which more than a thousand people attended the meeting. by - SDPI MEDIA,Tamilnadu sdpitnhqmedia@gmail
Posted on: Sat, 29 Jun 2013 12:14:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015