Sanction of fund for Adi Dravidar and Tribal Welfare Department - TopicsExpress



          

Sanction of fund for Adi Dravidar and Tribal Welfare Department (07/10/2013): ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் தொடக்க வேளாண்மை சங்கங்களிடமிருந்து விவசாயக்கடன் பெற ஏதுவாக வட்டியில்லா பங்கு மூலதனக் கடன் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. வட்டியில்லா பங்கு மூலதனக் கடன்கள் வழங்குவதன் மூலம் இவர்களது கடன் வாங்கும் திறன் அதிகரிக்கப்படுகிறது. இந்த அடிப்படையில் வழங்கப்பட்டு வரும் பங்கு மூலதனத் தொகை, அதிக அளவு கடனுதவி பெறுவதற்கு போதுமானதாக இல்லாததைக் கருத்தில் கொண்டு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின உறுப்பினர்களில் 40,000 பேர் பயன் பெறும் வகையில், பங்கு மூலதனத்தை 250 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாக உயர்த்தியும், அதனை மானியமாக வழங்கவும் முதலமைச்சர் ஜெயலலிதா சென்ற ஆண்டு உத்தரவிட்டார். இதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் உத்தரவிட்டார். அரசின் இந்த நடவடிக்கையால் அவர்கள் அதிகபட்சமாக 50,000 ரூபாய் வரை கடன் பெற வழிவகை செய்யப்பட்டது. அதேபோன்று, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் நகர கூட்டுறவு வங்கிகளிலிருந்து சிறுதொழில், பண்ணை சாரா மற்றும் வணிகக் கடன் பெற ஏதுவாக ஆண்டுதோறும் 1,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின உறுப்பினர்களுக்கென தலா 500 ரூபாய் வீதம் பங்கு மூலதனமாக வட்டியில்லா கடனாக 5 லட்சம் ரூபாய் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது வழங்கப்பட்டு வரும் பங்கு மூலதனத் தொகை, அதிக அளவு கடனுதவி பெறுவதற்கு போதுமானதாக இல்லாததைக் கருத்தில் கொண்டு, நகர கூட்டுறவு வங்கிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின உறுப்பினர்களின் பங்கு மூலதனத்தை 500 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாக உயர்த்தியும், அதனை மானியமாக வழங்கவும், முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக 2 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 10,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின உறுப்பினர்கள் பயன் பெறுவர். அரசின் இந்த நடவடிக்கை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதார நிலையை உயர்த்த துணை புரியும்.
Posted on: Mon, 07 Oct 2013 07:35:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015