love EXPORT BUSINESS!!The Reason is பதிவு - TopicsExpress



          

love EXPORT BUSINESS!!The Reason is பதிவு செய்த நாள் : Jul 10 | 11:13 pm மும்பை தொடர்ந்து இரண்டாவது தினமாக புதன்கிழமை அன்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு உயர்ந்தது. நேற்று ரூபாய் மதிப்பு 49 காசுகள் அதிகரித்து 59.66–ல் நிலைபெற்றது. இரண்டு தினங்களில் ரூபாய் மதிப்பு 96 காசுகள் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டாலர் உயர்ந்தது திங்கள்கிழமை அன்று எப்போதும் இல்லாத அளவிற்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 61.21–ஆக குறைந்து இருந்தது. அதாவது, டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது. எனவே, டாலர் பயன்பாட்டை குறைக்க வேண்டியது அவசியமாகும். எண்ணெயை சந்தைப்படுத்தும் பொதுத்துறை நிறுவனங்கள்தான் அதிக அளவில் டாலர்களை வாங்குகின்றன. எனவே, டாலர் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் இந்நிறுவனங்கள் டாலர்களை ஒரே வங்கி மூலம்தான் வாங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது. மேலும், கரன்சி வர்த்தகத்தில் வங்கிகள் ஈடுபடக்கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. உள்நாட்டில் டாலர்–ரூபாய் முன்பேர வர்த்தகத்திற்கான வரம்பு தொகையை ‘செபி’ இரண்டு மடங்கு உயர்த்தியது. இந்த நடவடிக்கைகளுக்கு வெற்றி கிடைக்க தொடங்கியுள்ளது. அன்னியச் செலாவணி செலவினத்திற்கும், வருவாய்க்கும் இடையில் உள்ள வித்தியாசமான நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகமாக உள்ளதால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இவ்வார தொடக்கத்தில் வரலாறு காணாத அளவிற்கு சரிந்தது. நியூயார்க் சந்தையில்... அமெரிக்க நியூயார்க் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 14 மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில், ரூபாய் மதிப்பும் சரிந்தால் இதன் இறக்குமதி செலவினம் அதிகரித்து பொருளாதாரத்தில் கடும் பாதிப்பு ஏற்படும் என யூகோ வங்கியின் கரன்சி டீலர் உதய்பாத் தெரிவித்துள்ளார். ரூபாய் மதிப்பு சரிவு சங்கித் தொடர் போன்று பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, இதன் சரிவை கட்டுப்படுத்த வேண்டியது மிக அவசியமாகும். so Register free go4worldbusiness
Posted on: Thu, 11 Jul 2013 06:41:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015