அந்தப் பையனுக்கு - TopicsExpress



          

அந்தப் பையனுக்கு ஞாயிற்றுக் கிழமை வரை காத்திருக்க முடியவில்லை என்று சொல்லிக் கொண்டு காலையிலேயே வந்துவிட்டான் சார் Fundamental Rights ஒவ்வொன்னா சொல்றேன்னு சொன்னீங்களே ஷரத்து 12 ஐ முதலில் பார்ப்போம் In this Part, unless the context otherwise requires, “the State’’ includes the Government and Parliament of India and the Government and the Legislature of each of the States and all local or other authorities within the territory of India or under the control of the Government of India இந்த ஷரத்து State என்றால் அரசும் அரசு சார்ந்த அமைப்புகளும் என்பதனை விளக்க அடிப்படை உரிமைகளை அரசு குடிமக்களுக்கு உத்திரவாதமாய் வழங்க வேண்டும் என்று அடிப்படை உரிமைகளுக்கான ஷரத்துகளில் சொல்லப்பட்டுள்ளது. ”அரசு” என்ற பதம் தரும் பொருள் என்ன என்பதனை இந்த ஷரத்து 12 விளக்குகிறது அடிப்படை உரிமைகள் அரசால் மறுக்கப்படும் நிலையிலேயே உயர் நீதி மன்றம் அல்லது உச்ச நீதி மன்றத்தின் ரிட் மனு மூலம் நிவாரணம் தேட இயலும். இன்னும் சொல்ல வேண்டுமெனில் இந்திய அரசமைப்பு சட்டம் பகுதி 3 ல் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமகள் அரசால் மறுக்கப் படும் போதே அவை அடிப்படை உரிமை மறூப்பாகிறது. தனி நபரால் அல்லது தனியார் நிறுவனத்தால் மறுக்கப்படும் போது அது Legal Right Violation என்றே கருதப்படும். அதற்கு சாதாரண வழக்கு மூலமே நிவாரணம் தேட வேண்ட்டும். அரசு என்பது மக்கள் அமைத்துக் கொள்வது. அரசியல் அமைப்புச் சட்டம் மக்க்ள் தாங்களே இயற்றி ( தங்களின் பிரதிநிதிகள் வாயிலாக) தங்களுக்கு வழங்கிக் கொளவது. அதற்கான நிதி மக்களே செலுத்தும் வரி. ஆக மக்கள் தாங்களே அமைத்துக் கொண்ட அரசிடமிருந்து எதிர் நோக்குவது அடிப்படை உரிமை இதில் வரும் Other Authorities என்ற சொற்றொடர் தரும் Constitutional / Legal Meaning குறித்து பல வழக்குகள் அரசு நிறுவனங்களாயினும் எவ்வகை தன்மை கொண்டிருந்தால் அவை இந்த ஷரத்தின் கீழ் அரசாகவே கருதப்படும் ... இப்படி. Instrumentality of State என்று அரசின் அங்கமான அமைப்புகள் அவற்றின் தன்மை கொண்டு இந்த ஷரத்தின் கீழ் வருமா என்பதற்கு பல parameters உள்ளன உதாரணமாக Boards, Corporations ( கழகங்கள்), கூட்டுறவு சங்கங்கள் போன்ற அமைப்புகள் வெளிப்பார்வைக்கு அரசு சார்ந்த அமைப்புகள் போலத் தோன்றினாலும் இந்த ஷரத்தில் சொல்லப்பட்ட ”அரசின் கட்டுப்பாட்டில் உள்ள” என்ற பொருளில் வருமா என்பதனை உறுதி செய்து கொள்ள பல நியதிகள் உள்ளன "சார் எனக்கு ஒரு சந்தேகம்" "சொல்லுப்பா" "யுனிவர்சிட்டியெல்லாம் எந்த மாதிரி.. அரசு கட்டுப்பாடு வகையிலே வருமா" பல்கலைக்கழகங்கள் பெரும்பாலும் அரசு என்ற வரையறையில் அடங்கும் ஆனாலும் அரசின் கட்டுப்பாட்டில் இயங்குதல் என்ற வகையில் Pervasive Control of the Govt என்பதை நிர்ணயம் செய்ய உச்ச நீதி மன்றம் Ajay Hasia Etc. VS. Khalid Mujib Sehravardi என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பில் சொல்லிய நியதிகளுக்குள் அந்த பல்கலைக்கழகம் வருகிறதா என நோக்க வேண்டும் இது அரசு நிதி உதவியில் இயங்கும் கல்வி நிறுவனங்களுக்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் பொருந்தும் அரசின் நிதி உதவி மட்டுமே அந்த நிறுவனம் அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்பதனை நிர்ணயிக்கும் அளவுகோலல்ல என உச்ச நீதி மன்றம் தீர்ப்பில் சொல்லியுள்ளது. இன்று பல தனியார் கல்வி நிறுவனங்கள் அவை இயங்கும் தன்மையால் பல்கலைக்கழக அந்தஸ்த்தை அடைகின்றன. அரசிடமிருந்து மான்யம் மற்றும் இதர நிதி உதவிகளையும் பெறுகின்றன. சில சந்தர்ப்பங்களில் பல்கலைக் கழக் மான்யக் குழுவிடமிருந்தும் நிதி பெறுகின்றன. ஆயினும் இவ்வகை நிதி உதவிகள் அந்த பல்கலைக்கழகங்களின் நிர்வாக நடவடிக்கைகளில் அரசின் தலையீடோ அல்லது அரசின் கட்டுபாட்டையோ ஏற்படுத்துகிறதா என ஆராய வேண்டும். அப்படியே கட்டுப்பாடு உண்டாயினும் அது எந்த அளவில் இருக்கிறது என்பதனையும் ஆராய வேண்டும். இதனையே Pervasive Control of the Govt என சட்டம் சொல்கிறது அரசு தனக்குள்ள கொள்கை வகுக்கும் அதிகாரத்தின் கீழ் பல்கலைக்கழக்ங்களை தோற்றுவிக்கிறது. நிதி மான்யம் என நிதி ஆதாரங்களை வழங்குவது மட்டுமல்ல அவ்வகை பல்கலைக்கழகங்க்ளின் நிர்வாக நெறிமுறைகளிலும் கட்டுப்பாடு செலுத்தவும் செய்கிறது. இவ்வகை பல்கலைக்க்ழகங்களோடு போன பத்தியில் குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களை ஒப்பிட முடியாது. ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அரசு சார்ந்த நிறுவனமா இல்லையா என்பதை ஆராய்ந்த உச்ச நீதி மன்றம் பல வழக்குகளில் அளவுகோல்கள் நிர்ணயம் செய்துள்ளது Anadhi Muktha Trust என்ற வழக்கில் உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு மிகவும் குறிப்பிடத் தக்கது. An authority even though not a public authority but has a public duty imposed by a legal statute that duty is making him a public authority என்ற பொருளில் தீர்ப்பு வழங்கியது இந்த பொருள் இன்றளவிலும் விவாவத்தில் இருக்கிறது. புதிய புதிய கண்ணோட்டங்கள் பிறந்த வண்ணமிருக்கின்றன ஆனால் உச்சநீதி மன்றம் Ajay Hasia Etc. VS. Khalid Mujib Sehravardi வழக்கில் சொன்ன அளவு கோல்கள் இந்தப் பொருளில் வழி நடத்துகிறது இந்த தீர்ப்பில் மாண்புமிகு நீதிபதிகள் ”The expression "other authorities", in Article 12 must be given an interpretation where constitutional fundamentals vital to the maintenance of human rights are at stake, functional realism and not facial cosmetics must be the diagnostic tool, for constitutional law must seek the substance and not the form. The Government may act through the instrumentality or agency of juridical persons to carry out its functions, since, with the advent of the welfare State its new task have increased manifold” என சொல்லியுள்ளதனை கருத்தில் கொள்ள வேண்டும் அதாவது மனித உரிமை பிரதானமாக கருதப்பட வேண்டும் என்பதில் உச்சநீதி மன்றம் பிரதானமாக இருப்பது புரியும். அரசு தன் திட்ட நோக்கங்களுக்காக புதிய அமைப்புகளை தோற்றுவிப்பது தவிர்க்க இயலாது. இந்த கருத்தையும் நீதி மன்றம் அப்சர்வ் செய்துள்ளது Anadhi Muktha Trust வழக்கில் , “வெறும் சட்டத்தை மட்டுமே பேசி ஒருவரின் உரிமை கேலிக் கூத்து ஆகிவிடக் கூடாது “ என்றும் நீதிமன்றம் சொல்லியுள்ளது "சார் இப்ப யுனிவெர்சிட்டிக்கு சான்ஸ்லர் கவர்னர் தானே சார்.. அப்படி பார்த்தா.. அது அரசு பொறுப்புல தானே இருக்கு" அரசு நிறுவனங்களுக்கு சேர்மன் மற்றும் போர்டு உறுப்பினர்களை அரசு நியமிக்கும் அதிகாரம் பெற்றிருந்தாலும் அந்த நிறுவனங்களை அரசு கட்டுப்பாடு செய்வதாக அமையாது என சட்டம் சொல்கிறது அந்த நிறுவனங்களின் அன்றாட நடவடிக்கைகளில் அரசின் கட்டுப்பாடு, பணியாளர்களின் பணி தொடர்பான விதிகள், அவ்விதிகளை இயற்றுதல்/ மாற்றுதல் அந்த நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட நோக்கம் ... இன்னும் பல என ஒரு பெரிய பட்டியலே இருக்குப்பா" "சார் நாளைக்கும் லீவு தானே.. வந்த செக்‌ஷன் 13 ஐப் பார்க்கலாமா" "லீவு தான்.. காலைலேயே வந்துடு.. அது செக்‌ஷன்னு சொல்லப்பிடாது ஆர்ட்டிக்கிள் அப்படினு சொல்லனும்"
Posted on: Fri, 09 Aug 2013 03:17:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015