அன்பான உள்ளங்களுக்கு - TopicsExpress



          

அன்பான உள்ளங்களுக்கு முகநூல் வழியாக ஒரு வேண்டுகோள். குறிப்பாக பெண்களுக்கு. என்னுடைய சகோதரிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எனக்கு தெரிந்த நண்பரின் தங்கை நம்முடைய முகநூலில் தன்னுடைய (FACEBOOK WALL) முழு புகைப்படத்தை போட்டு விட்டாள். இந்த பெண்ணிற்கு பிடிக்காத யாரோ ஒருவர் இந்த பெண்ணின் புகைப்படத்தை (EDIT) செய்து ஆபாசமான இணையதளத்தில் போட்டு விட்டார். ஒரு நாள் என்னுடைய நண்பர் அவருடைய அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு நண்பரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது அங்கு என்னுடைய நண்பரின் நண்பர் தன்னுடைய செல்போன்இல் ஒரு இணையதளத்தை பார்த்து கொண்டு இருந்தார். அந்த இணையதளத்தில் என்னுடைய நண்பரின் தங்கை புகைப்படம் மிகவும் ஆபாசமாக யாரோ வெளியிட்டு இருந்தார்கள். அந்த புகைப்படத்தை என்னுடைய நண்பர் பார்த்து விட்டு தன்னுடைய வீட்டிற்கு வந்ததும் அவருடைய தங்கையை நன்றாக அடித்து விட்டார். இதனால் இந்த பெண்ணின் வாழ்க்கை மிகவும் பெரிய போராட்டமாக ஆனது. ஆதலால் என்னுடைய முகநூல் சகோதரிகளுக்கு (குறிப்பாக பெண்களுக்கு) நான் சொல்லுவது என்னவென்றால் என்னுடைய அன்பான சகோதரிகளே நீங்கள் அனைவரும் உங்களுடைய முழு புகைப்படங்களை இந்த முகநூலில் (FACEBOOK WALL) தயவு செய்து என்றும் எப்போதும் போடவேண்டாம் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். ஓம் சாய்ராம்
Posted on: Sat, 09 Nov 2013 15:52:25 +0000

Trending Topics




© 2015