அஸ்ஸலாமு அழைக்கும் - TopicsExpress



          

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ். பகிரங்க சவால் கீழை ஜகாங்கீர் மற்றும் சகோதரருக்கு, கீழக்கரை நசிருதீன் எழுதுவது. sjahangeerh328@gmail dramraini@gmail> இந்த இருவரின் ஆக்கங்களை கீழே கொடுத்து இருக்கிறேன். அவர்களின் வாதங்கள் எப்படி தவறு என்பதையும், அதை சவாலாக ஏற்று விவாத அழைப்புக்கு வரவும் அழைத்து இருக்கிறேன். இதைக்கானும் முக நூல் நண்பர்கள், நான் மேலே கொடுத்து இருக்கும் மெயில்லுக்கு இதையே சவாலாக எழுதி அனுப்புமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். அதே சமயம் அவர்களின் விவாத தேதிய குறித்து, கேட்டோ அல்லது முக நூலிலோ பதில் தரலாம். துவாசலாம் S.L.நசிருதீன் =========================== கீழை ஜகாங்கிர் அவர்களுக்கு, நீங்கள் "எழுத்தாக்க கருத்துக்களின் விவாதம்" என்று எழுதி மக்களை குழப்பவேண்டாம். தங்களுக்கு மார்க்க உண்மை தெரியவேண்டும் என்றால்! எழுத்து விவாதத்தினால் முடியாது. குரானை அனைவரும் தொடலாம் மற்றும் படிக்கலாம் என்ற அடிப்படையில் இதை எழுதுகிறேன். அதற்க்கு காரணம் நீங்கள் கொடுத்த வசன எண் 56 : 79 என்ற வசனத்தை மட்டும் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அது மட்டும் குரானை தொடக்கூடாது என்ற அர்த்தம் இல்லை. அதற்க்கு முந்திய வசனமான 56 : 77 மற்றும் 56 : 78 மற்றும் 56 : 81 இவை மூன்றும் என்ன சொல்லுகிறது என்று பார்க்கவும். இதை (77, 78, 79, 80, 81) சேர்த்து வாசியுங்கள் உங்கள் சந்தேகம் தீர்ந்துவிடும். "இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குரானாகும்" 56 : 77, 78 "தூய்மையான (வான) வர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தீண்ட மாட்டார்கள்" 56 : 79 "அகிலத்தின் இறைவனிடமிருந்து (இது) அருளப்பட்டது" 56 : 80 "இந்தச் செய்தியையா அலட்சியம் செய்கிறீர்கள்?" 56 : 81 இதுதான் சாராம்சம். இதை வைத்துகொண்டு எப்படி ஒளுவில்லாமல் தொடக்கூடாது என்று கணக்கு போடுகிறீர்கள்? பாதுகாக்கப்பட்ட பதிவேடு என்பதை நபியவர்களுக்கு அல்லாஹ் வஹீயோடு சொல்லுகிறான். "பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும்" என்று வேறு சொல்லுகிறான். அப்படிஎன்றால்! முன்பு பேசிய (56 : 77, 78) வசனப்படி இங்கில்லை என்பதை மிக எளிதாக அறிந்துகொள்ள முடிகிறது. அப்படிஎன்றால்! அல்லாஹ் சொல்லிய பதிவேடு எங்கு இருக்கிறது என்று அறிவு உள்ளவர்கள் சிந்தித்தோமேயானால்! நிச்சயமாக அந்த பதிவேடு அல்லாஹ்விடத்தில் தான் இருக்கும். அதை தூய்மையான வானவர்கள் மட்டும் தான் தொடமுடியும் என்று விளங்க முடிகிறது, அதே சமயம், உங்கள் கருத்துப்படியோ அல்லது கூற்றின்படியோ வைத்துக்கொண்டால்! நபியவர்கள் காலத்தில் முதன் முதலில் சொல்லும் போது குரான் முழு வடிவம் பெறவில்லையே! பகுதி பகுதியாகத்தானே வந்தது. வஹீயை நபியவர்கள் வாயால் மொழிந்து தான் மக்கத்து காபிர்களுக்கு எத்தி வைத்தார்கள். அப்படி எத்தி வைக்கும்போது மக்கத்து காபிர்கள் என்ன ஒளுவோடு இருந்தார்களா? ஓலியின் ஓசையில் சொலும் செவிப்புலன்கள் கேட்கத்தான் செய்யும். ஓதிக்காட்டி ஓசையில் சொல்லுவதும் குரான் தான், புத்தகமாக கையில் வைத்து ஓதுவது குரான் தான். அப்படிஎன்றால்! அதை நீங்கள் எப்படி விளங்குவீர்கள்? தொடக்கூடாது என்று விளங்குவீர்கள்களா? அல்லது ஒளுவில்லாமல் செவிமடுத்து கேட்கக்கூடாது என்று விளங்குவீர்களா?. நீங்கள் சொல்லுவதில் எந்த ஒரு லாஜிகுமே இல்லை. அதே சமயம் இன்று உலகலாவியவர்கள் குரானை ஒளுவில்லாமல் தொட்டு, அதை அவர்களுடைய மொழியில் விளங்கி இஸ்லாத்தை கூட்டம் கூட்டமாக தலுவுகிரார்களே! அது எப்படி? ஒளுவோடு தொடுவதற்கு முன்னாள்! அவர்கள் இஸ்லாத்தை ஏற்றல்லவா? இருக்கவேண்டும். ஆனால்! அதற்க்கு மாற்றமாக ஒழுவிலாமல் தொட்டு படித்துவிட்டு இஸ்லாத்திற்குள் நுழைகிறார்கள். அப்படித்தான் அந்தக்காலத்து மக்களும் ஓதுவதை செவிமடுத்து கேட்டு இஸ்லாத்தை ஏற்று இருக்கிறார்கள். இன்று மாற்றுமதத்து சகோதரர்கள் குரானை ஓதுவதைவைத்து "வேத விற்ப்பனர்கள்" என்று பட்டம் சூட்டுவது அறிவுக்கு பொருந்தாது. மேலும், உங்களுக்கு புரியுமாறு இன்னொருவசனமும் அதற்க்கு சாட்சி பகருகிறது. "(முஹம்மதே) உமக்கு ஒதிகாட்டுவோம். நீர் மறக்க மாட்டீர். அல்லாஹ் நாடியதைத் தவிர. அவன் பகிரங்கமானதையும், வெளிப்படையானதையும் அறிகிறான். 87 : 6, 7 இதில் என்ன விளங்குகிறது? அல்லாஹ் குரானை ஒதித்துதான் காட்டுகிறான். புத்தகமாக (இன்று நம் கைகளில் உள்ளது போல்) கொடுக்கவில்லை என்பதை மிக தெளிவாக தெரிந்து கொள்ளலாம். மேலும் இதைப்பற்றி இன்னும் சந்தேகம் இருந்தால்! யாரெல்லாம் ஒளுவோடு தான் தொடவேண்டும் என்று ஒருமித்த குரலோடு பறைசாற்றிக்கொண்டு திரிகிரார்களோ! அவர்களுக்கு நான் விடும் சவாலாகவே இதை ஏற்றுக்கொள்ளலாம். இந்த இணையதளத்தின் மூலம் பதில் என்ற பெயரில் பித்துப் பிடித்து பிதற்றிக் கொண்டு தெரிந்து இஷ்டத்திற்கு எழுதுபவர்கள் தைரியம் இருந்தால்! எனது விவாத அழைப்பை ஏற்று ஒரு வாரத்திற்குள் கீழ்க்கண்ட அலை பேசிக்கோ அல்லது மெயில்லுக்கோ தொடர்பு கொள்ளலாம். அதைவிட்டுவிட்டு எழுத்தில் விவாதம் என்று கிறுக்குத்தனமாக சொல்லுவது யாருக்கும் பயன்தராது. அதே சமயம் இந்த விவாதமானது ஒரு சிலருக்காக இருக்கக்கூடாது. கூடியமட்டிலும் மக்கள் விளங்கும் விதமாக விவாதம் இருக்க வேண்டும். மேலும் விவாதம் செய்ய தயார் என்றால்! யாரும் பொருளாதாரத்தைப்பற்றி பயப்படத்தேவை இல்லை. அதை நாங்களே பார்த்துக்கொள்கிறோம். அதே சமயம், "விவாதம் தயார்" என்றால்! எனது மெயில்லுக்கும், இதே இணையதளத்திற்கும் தெரியப்படுத்தி பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளவேண்டும் S.L.நசிருதீன் கீழக்கரை 98424 92960 / 90039 29809 ndnazeer31@gmail ========================================= 2013/7/4 nasir deen dear brother DR A. MOHAMED Ali please answer his challenge. >>> அதேப்போல சுத்தமில்லாமல் தொடலாம்,ஓதலாம் என சொல்பவர்களும் அதற்கான இறைவசன ஆதாரத்தை கொடுக்க வேண்டும் என்பதுதான் நடுநிலையாளர்களின் கோரிக்கை! >>> 2013/7/3 DR A. MOHAMED Ali My dear Br. கீழை ஜஹாங்கீர் அரூஸி - தம்மாம். Assalamu Alaikkum (wrwb). Your introduction for free discussion about the topic: ஒளுவின்றி குர் ஆனை தொடலாமா? seemed biased. Before starting the discussion you have concluded and attacked as: அதாவது நமது கரங்களில் தவழும் இறைவேத நூலை ஒளுவில்லாமல்,குளிப்பு கடமையான நிலையிலும்,பெண்கள் தங்களது மாதவிடாய் காலத்திலும் எவ்வித சுத்தமும் இல்லாமல் கூட திருக்குர் ஆனை தொடலாமென்றும், ஓதலாமென்றும், நவீன காலத்து வேத விற்பனர்கள் கருத்துரை பரப்பிக்கொண்டிருக்கும் சூழலில் எமது விவாதம் துவங்கியுள்ளது. What do you mean by the "நவீன காலத்து வேத விற்பனர்கள் கருத்துரை பரப்பிக் கொண்டிருக்கும் சூழலில்" ? It seems that you are trying to impose your pre-conceived views by any ways. So, I am sorry to comment that your discussion will not fetch actual truth. Wassalam. On 7/2/13, Khaleel Baaqavee, K-Tic wrote: > ஒளுவின்றி குர் ஆனை தொடலாமா? > கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம். > > எனதருமை முஸ்லிம் சமுதாயமே! > > எனது கேள்விக்கான பதிலை எதிர்பார்க்கும் வகையில் இந்த எழுத்தாக்க விவாதத்தை > துவக்கியுள்ளேன், > > உங்களது கருத்தையும் பதிவு செய்யுங்கள் இறைவன் நாடினால் நம் எல்லோருக்கும் ஒரு > தெளிவான அறிவு கிடைக்கட்டும். > > நீண்ட காலமாக நமக்குள் இருந்து வரும் திருக்குர் ஆன் தொடர்பான பிரச்சினைகளில் > இது மிகவும் முக்கியமானது. > > அதாவது நமது கரங்களில் தவழும் இறைவேத நூலை ஒளுவில்லாமல்,குளிப்பு கடமையான > நிலையிலும்,பெண்கள் தங்களது மாதவிடாய் காலத்திலும் எவ்வித சுத்தமும் இல்லாமல் > கூட திருக்குர் ஆனை தொடலாமென்றும்,ஓதலாமென்றும், நவீன காலத்து வேத விற்பனர்கள் > கருத்துரை பரப்பிக்கொண்டிருக்கும் சூழலில் எமது விவாதம் துவங்கியுள்ளது > அல்ஹம்துலில்லாஹ்.. > > சுத்தமில்லாமல் குர் ஆனை தொடக்கூடாது,ஓதக்கூடாது என்றால் மாற்றுச்சமுதாய மக்கள் > எப்படி இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ளமுடியும்? அவர்களிடம் குர் ஆனை கொடுத்து > படிக்க சொன்னால் தானே அதை படித்து அவர்கள் நேர்வழியின் பக்கம் வரமுடியும் > என்பது தான் குர் ஆனை ஒளுவில்லாமல் தொடலாம்,ஓதலாம் என்பவர்களின் வாதமாகும். > > திருக்குர் ஆன் விசயத்தில் முதலில் முஸ்லிம்களுக்குள் ஒரு தெளிவான நிலைபாடு > இருந்தால் தான் மற்ற சமுதாய மக்களுக்கு மத்தியில் மார்க்கத்தை தெளிவாக சொல்ல > முடியும். > > திருக்குர் ஆனை சுத்தமில்லாமல் தொடக்கூடாது,ஓதக்கூடாது எனச்சொல்லும் மார்க்க > பேணிக்கையாளர்கள் கீழ்க்கண்ட வசனத்தை ஆதாரமாக தருகின்றனர். > > பரிசுத்தமானவர்களைத் தவிர > (மற்றெவரும்)இதனைத்தொடமாட்டார்கள்.(அத்தியாயம்-56,வசனம்-79) > > பரிசுத்தமானவர்கள் மட்டுமே தொடக்கூடியதுதான் திருக்குர் ஆனாகும் என அல்லாஹ்வே > சொல்லிவிட்ட பிறகு சுத்தமில்லாமல் தொடலாம் என்பது இறைவசனத்திற்கு மாற்றமானது என > விளக்கமும் கொடுக்கிறார்கள். > > சுத்தமில்லாமல் திருக்குர் ஆனை தொடக்கூடாது என்பதற்கு எப்படி இறைமறை வசன ஆதாரம் > தரப்பட்டிருக்கிறதோ? > > அதேப்போல சுத்தமில்லாமல் தொடலாம்,ஓதலாம் என சொல்பவர்களும் அதற்கான இறைவசன > ஆதாரத்தை கொடுக்க வேண்டும் என்பதுதான் நடுநிலையாளர்களின் கோரிக்கை! > > விவாதம் தொடரும் இன்ஷா அல்லாஹ்.... > > உங்களின் மேலான கருத்துக்களை sjahangeerh328@gmailஎன்ற மின்னஞசலுக்கு > அனுப்பவும். > ---------- > Parangi Pettai > Khaleel Baaqavee > Kuwait
Posted on: Sat, 06 Jul 2013 15:14:54 +0000

Trending Topics




© 2015