இந்தியா பிரடேர்னிட்டி - TopicsExpress



          

இந்தியா பிரடேர்னிட்டி பாரம்(IFF), ரியாத் ....................................................................... INDIA FRADERNITY FORUM-Volundeers distributing food and water in thargeel riyadh that those who are waiting for get exit on their passport. ..................................................................................................... சவூதி அரேபியா நிதாகத் இல் பாதிக்கப்பட்டவர்கள் பல நாட்டவர்களும் ரியாத் தர்ஹீளில் தினமும் பலமனிநேரங்கள் சுடும் வெயிலில் தங்களது பாஸ்போர்ட் அல்லது ஈ சி யில் எக்ஸ்சிட் அடித்து பெறுவதற்காக அதிகாலை முதலே வரிசையில் நின்று வாடுகின்றனர் இவர்களுக்கு உதவிபுரியும் நோக்கில் பல இந்திய இயக்கத்தவர்களும் நல்லுள்ளம் படைத்த சவுதிகளும் குடிநீர், ஜுஸ் போன்றவைகளும் பலர் உணவுப்பொட்டலங்களும் வினியோகிக்கின்றனர் ஆனால் வரிசையில் நிற்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இவைகள் போதுமானவையாக இல்லை இதனை கருத்தில் கொண்டு நாம் இந்தியா பிரடேர்னிட்டி பாரம், ரியாத் தமிழ் பிரிவு நமது வாலண்டியர்கள் மூலம் 15-06-2013 முதல் தினமும் உணவு விநியோகம் செய்யப்படுகிறது. இதன் தொடக்கமாக ஒருசில தமிழ் சகோதரர்கள் பண உதவி செய்ய முன்வந்துள்ளனர் தொடக்கமாக நேற்று 15-06-2013 அன்று நூறு உணவுப்பைகள் விநியோகம் செய்யப்பட்டது நமது பணியரிந்து சமூக சேவகர்கள் சகோ.சிக்கந்தர் அவர்களும், தலப்பாக்கட்டு சகோ. பாரிஸ் அவர்களும் அவர்களின் சார்பில் 355 உணவுப்பைகள் விநியோகிக்கும்படி நம்மை கேட்டுக்கொண்டனர் ஆக மொத்தம் 455 உணவுப்பைகள் (குஸ்கா சோறு முட்டையுடன், தாளிச்சா மற்றும் தண்ணீர் பாட்டில்) நேற்று iff உறுப்பினர் சகோ. ஜாகிர் ஹுசைன் அவர்கள் தலைமையில் விநியோகிக்கப்பட்டது இன்ஷா அல்லாஹ் இன்றும் விநியோகம் செய்யப்படுகிறது. தினமும் காலைமுதல் மாலைவரை இருபது ஐ எப் எப் வாலண்டியர்கள் (பல மொழிகளிலும்) தர்கீளில் தூதரக அதிகாரிகளுக்கு உதவி செய்துவருகின்றனர் என்பதையும் அறியத்தருகிறோம். தர்கீளில் உணவு வழங்குவதற்கு பொருளாதார உதவி செய்ய விருப்பமுள்ளவர்கள் ஐ எப் எப் பத்தா கிளை தலைவர் சகோ. ஜாகிர் ஹுசைன் மொபைல் 0501871680 அவர்களை தொடர்புகொள்ளவும்.
Posted on: Thu, 20 Jun 2013 14:08:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015