இன்னும் 12 நாட்களே உள்ளன - - TopicsExpress



          

இன்னும் 12 நாட்களே உள்ளன - திருவையாற்றில் அப்பர் கயிலாயக்காட்சி விழா-2013 (06/08/2013) (Just 12 days is there for) Appar’s Kailaya Katchi Festival in Thiruvaiyaru on Adi Amavasi dated 6th August 2013. (Pls. share this) Appar Swamigal Kailasha dharshan at Thiruvaiyaru Temple தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருவையாறு அருள்மிகு அறம் வளர்த்தநாயகி உடனுறை ஐயாறப்பர் கோவிலில் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஆடி அமாவாசையில் அப்பர் கயிலாயக்காட்சி விழாவில் அன்பர்கள் கலந்துகொண்டு திருக்கயிலைக் காட்சியை தரிசித்து திருவருளையும் குருவருளையும் பெற்றுத் திகழ்ந்திட விரும்புகின்றோம். திருவையாற்றில் கயிலைக் காட்சி கண்டால் கயிலாயம் தரிசித்த புண்ணியம் பெறலாம். மேலும் திருக்கயிலைக்கு யாத்திரை மேற்கொண்டவர்கள் திருவையாற்றுக்கு வந்து தரிசித்தால் கயிலையை தரிசித்த தன் புண்ணியம் கிடைக்கும்.திருவையாற்றில் ஆடி அமாவாசையில் அப்பர் கயிலாயக்காட்சி விழா ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்று முழுவதும் இடையறாது திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடக்கும். காலை 7 மணி அளவில் சிவ பூஜையும், பகல் 12 மணி அளவில் காவிரியில் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரியும், அபீஷ்டவரத மகாகணபதி சந்நிதிக்கு எதிரில் இருக்கும் திருக்குளத்தில் (உப்பங்கோட்டை) அப்பர் எழுந்தருளிதீர்த்த வாரியும், இரவு 9 மணிஅளவில் ஐயாறு ஆலயத்தில் அப்பர்பெருமானுக்கு திருக்கயிலாயக் காட்சி கொடுத்தருளுதலும் நடைபெறும். அதற்கு முன் சந்நிதியின் மண்டபத்தில் 200க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் கூடி அப்பரின் பதிகங்களான கூற்றாயினவாறு, சொற்றுணைவேதயன், தலையேநீவணங்காய், வேற்றாகிவிண்ணாகி, மாதர்பலிறைக்கண்ணியினை ஆகிய ஐந்து பதிகங்களை பக்கவாத்தியத்துடன் இசைத்து ஆராதனை செய்வார்கள். "யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது' என்ற அப்பரின் திருவாக்கின் படி நாமும் இந்நாளில் திருவையாறு சென்று திருக்கயிலைக் காட்சியைக் காண்போம். மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப் போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன் யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன். தென்னாடு உடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!! ஆரூர் அமர்ந்த அரசே போற்றி சீரார் திருவையார போற்றி போற்றி!!!
Posted on: Thu, 25 Jul 2013 18:31:23 +0000

Trending Topics



="stbody" style="min-height:30px;">
#18 of 20+ skills our children should know: ∙ Practical Skill

Recently Viewed Topics




© 2015