இன்றும் கேட்போம் - TopicsExpress



          

இன்றும் கேட்போம் இறைவாக்கு! (Good News in Tamil) நல்வாழ்த்து: காத்திருக்கும் அடியவரின் கவலையெல்லாம் போக்கி, பூத்திருக்கும் மலராக்கும், புனிதா, உமைப் போற்றி! பாத்திரமாய்ப் பயன்தரவே, பாவி என்னை நோக்கி, ஆத்திரமாய் வந்தருளும் ஆண்டவரே போற்றி! நல்வாக்கு: மத்தேயு/Matthew 18:18. " மண்ணுலகில் நீங்கள் தடைசெய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடைசெய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ("Amen, I say to you, whatever you bind on earth shall be bound in heaven, and whatever you loose on earth shall be loosed in heaven.") நல்வாழ்வு: கட்டுண்டவராய்க் கண்ணீர் சிந்தும், கவலை கொண்ட தமிழினத்தை, விட்டுச் செல்ல விருப்பம் இல்லை. விண்ணின் அரசே, அவிழ்க்கின்றோம். தொட்டுத் தடவ உம்மை நோக்கும், தோல்வி யுற்ற இவ்வினத்தை, கிட்ட வந்து தூக்கியெடுக்க, கிறித்துவே, உம்மை அழைக்கின்றோம்! ஆமென்.
Posted on: Mon, 22 Jul 2013 06:52:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015