உரிமைக்குப் பேசுவதாக - TopicsExpress



          

உரிமைக்குப் பேசுவதாக மக்களை ஏமாற்றிவரும் ஆசாத்சாலி சமூகப் பிரச்சினைகள் சார்பாக விவாதிக்க தயாரா? : ஜவாஹிர் சாலி உண்மையாகவே இந்த ஆசாத்சாலி முஸ்லிம்களுக்காக பேசுபவராக இருந்தால், முஸ்லிம்களை ஏமாற்றவில்லை என்பதை தைரியமாக சொல்பவராக இருந்தால் ஏற்கனவே அவரிடம் விட்ட சவாலை மீண்டும் விடுகிறேன், இப்போது கண்டியில் அவரும் வேட்பாளர்தான், நானும் வேட்பாளர்தான், முஸ்லிம்கள் நிரம்பிய ஒரு பொது மேடையில் என்னோடு சமூகப் பிரச்சினைகள் சார்பாக விவாதிக்க தயாரா? பொய்யான சாக்குகளைச் சொல்லி ஒதுங்கிக் கொள்ளாமல் உங்களை நம்பி ஏமாறுபவர்கள் சார்பாக என் சவாலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன், இடம், நேரம் எல்லாவற்றையும் அவரே தீர்மானிக்கலாம். என மத்திய மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் ஜவாஹிர் சாலி தெரிவித்தார். அக்குறனையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர் முஸ்லிம்களின் உரிமைக்குப் பேசுவதாக மக்களை ஏமாற்றிவரும் ஆசாத் சாலியும் இத்தேர்தலில் ஐ.தே. கட்சி சார்பாக போட்டியிடுகிறார்,இவரது சுயரூபத்தையும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் பொதுவாக ஆளும் கட்சியில் இருக்கும் முஸ்லிம்கள் அபிவிருத்தியை செய்வார்கள் ஆனால் உரிமை பற்றி பேச மாட்டார்கள்,எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் அபிவிருத்தியில் ஈடுபடாவிட்டாலும் உரிமை விடயத்தில் போராடுவார்கள். ஆனால் ஐ.தே. கட்சியில் இருப்பவர்கள் உரிமை பற்றி வாய் திறப்பதுமில்லை,அபிவிருத்தி செய்வதுமில்லை. ஆனால் உரிமையை சாதுரியமாகப் பெற்று அபிவிருத்தியையும் செய்து வரும் ஒரே கட்சி முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே. தேர்தல் காலத்தில் மாத்திரம் முஸ்லிம்களின் விடயங்கள் பற்றி ஐ.தே. கட்சி பேசுகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவர்களது பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்கபோவதாக சொல்கிறார்கள்இ ஆனால் மக்கள் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்இ கடந்த 2009ம் ஆண்டு கண்டி மாவட்டத் தேர்தலில் இ ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் இ ஐ.தே. கட்சியுடன் சேர்ந்து அத்தேர்தலில் போட்டியிட்டதுஇ அதில் ஐ.தே. கட்சி சார்பாக 3 முஸ்லிம் வேட்பாளர்களும் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் சார்பாக 2 வேட்பாளர்களும் போட்டியிட்டு அதில் நான்கு பேர் வெற்றி பெற்றனர்இ தற்போது நிலைமை வேறுஇ கடந்த தேர்தலில் 30 உறுப்பினர்களாக இருந்த கண்டி மாவட்ட உறுப்பினர் தொகை இப்போது 29இ மேலும் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் இ இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இ சரத் பொன்சேகாவின் கட்சியும் தனியாக போட்டியிடுகின்றன இதன்படி கடந்த தேர்தலில் போல் ஐ.ம.சு.கூட்டமைப்பு 18 உறுப்பினர்களையும் 12 உறுப்பினர்களையும் பெறவே முடியாதுஇ நிச்சயமாக அவ்வாறு நடக்க வாய்ப்பே இல்லை. ஐ.தே. கட்சியைப் பொறுத்தவரை கடந்த தேர்தலில் சேர்ந்து போட்டியிட்ட ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதால் அவர்கள் 03 அல்லது 04 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தால் முஸ்லிம் வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு அக்கட்சியில் நம்பிக்கையாக இருந்திருக்கும். ஆனால் இம்முறை அவர்கள் 5 ஐ 3 அல்லது 4 ஆக குறைப்பதற்கு பதிலாக 07 ஆக முஸ்லிம் வேட்பாளர்களை அதிகரித்து முஸ்லிம் வேட்பாளர்களின் தெரிவை இல்லாமல் செய்யும் வேலையே கட்சித்தலைமைகள் செய்துள்ளன. மேலும் முஸ்லிம்களின் உரிமைக்குப் பேசுவதாக மக்களை ஏமாற்றிவரும் ஆசாத் சாலியும் இத்தேர்தலில் ஐ.தே. கட்சி சார்பாக போட்டியிடுகிறார்இ இவரது சுயரூபத்தையும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்இ ஐ.தே. கட்சியில் கொழும்பு மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்காததால் ஐ.ம.சு.கூட்டமைப்புடன் சேர்ந்து ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு வசைபாடி விட்டு அதிமேதகு ஜனாதிபதியுடன் கைகோர்த்துத் திரிந்தவர் இ அக்காலத்திலேதான் கல்வியமைச்சருடன் சேர்ந்து காலா காலமாக முஸ்லிம் தலைவர்கள் கேட்டுப்பெற்றிருந்த முஸ்லிம் பாடசாலைகளுக்கான நோன்புகால விடுமுறை தேவையில்லை என்று சொன்னவர்தான் இவர்இ அது மாத்திரமல்ல ஹஜ் குழு அங்கத்தவராக இருந்தபோது இவர் செய்த ஊழல்களால்தான் இவர் ஐ.ம.சு.கூட்டமைப்பிலிருந்து விரட்டப்பட்டார்இ அதன் பின்பே அவருக்கு ஜனாதிபதி மேல் வெறுப்பு வந்ததே தவிர முஸ்லிம்களின் உரிமைப் பிரச்சினைகளுக்காக அல்ல. இதற்குப்பிறகு ஸ்ரீ.ல.மு.காங்கிரசுடன் சேர்ந்து கிழக்கு மாகான சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறாத நிலையிலும் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் இ தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து மாகாண ஆட்சியைப் பிடிக்கவைப்பதற்கான சர்வதேச கொந்தராத்தை நிறைவேற்ற முடியாத நிலையில் முஸ்லிம் காங்கிரசுக்கும் தலைவருக்கும் எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்இ அவருக்கு எப்படியாவது ஐ.தே. கட்சியில் அங்கத்துவமும் கண்டியில் வேட்பாளராகவும் கிடைக்க வேண்டும்இ ஐ.தே. கட்சிக்கு கண்டியில் முஸ்லிம் உறுப்பினர்களை குறைக்க வேண்டும்இ இதுதான் அங்கே நடக்கிறது எனவூம் அவா; மேலும் தொpவித்தா.
Posted on: Sat, 07 Sep 2013 17:51:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015