ஊழலுக்கு எதிராக பக்கம் - TopicsExpress



          

ஊழலுக்கு எதிராக பக்கம் பக்கமாக பேசுகிறோம் .... அருகிலே ஒரு மாநிலம் இருக்கிறது. சோலார் பேனல் ஊழல் நடந்திருக்கிறது. தமிழகத்தின் அரசியல்வாதிகள், காங்கிரஸ் கூட்டோடு செய்ததாக கருதப்படும் ஸ்பெக்ட்ரம் ஊழலாக இருந்தாலும், மருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி கொடுத்த விவகாரமாக இருந்தாலும் - வேறு எந்த முறைகேடாக இருந்தாலும், சோலார் பேனல் ஊழல் சிறியதுதான். ஆனால், அந்த முறைகேட்டுக்கு எதிராக - சுமார் ஒரு லட்சம் பேர் கேரள சட்டமன்றத்தை முற்றுகையிடுகிறார்கள். ஒரு வாரம் முன்பிருந்தே, முற்றுகைப் போராட்டத்தின் போது சமைத்து சாப்பிட காய்கறிகள் சேகரிக்கப்பட்டன. மத்திய படைகளை வரவழைப்போம் என காங்கிரஸ் கொக்கரித்தது. வரச் சொல், மக்கள் சக்திக்கு முன் எது பெரியதென பார்ப்போம் என்று சொல்லும், நா வன்மையும், கை சுத்தமும் தோழர்களுக்கு இருந்தது. ஓட்டுக்கு போட்டி போட்டுக் கொண்டு பணம் கொடுக்கும் தமிழகச் சூழல் - அந்த வகையில் வேறுபட்டதுதான். வாக்காளனை ஊழல்வாதியாக்கும் நடவடிக்கை - எதிர்கால ஊழல்களுக்காக அவர்களை தயார்ப் படுத்தும் செயல். ஊழலை இனி ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்ற மனநிலையோடு மக்களை வைத்திருப்பதில் - அரசியல்வாதிகளின் பங்கு முக்கியமானது. # அரசியலை விரும்பும் தோழமைகள் சிந்திக்க...
Posted on: Mon, 12 Aug 2013 06:22:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015