எங்கள் குலக் கொடிகளைக் - TopicsExpress



          

எங்கள் குலக் கொடிகளைக் கொன்றவர்களை, பச்சிளம் குழந்தைகளைப் படுகொலை செய்தவர்களை, அந்தச் சிங்கள இராணுவத்தில் இடம் பெற்று இருக்கின்றவர்களை, ஈழத் தமிழ் இனத்தைக் கூண்டோடு கரு அறுக்கத் திட்டமிட்ட கொடியவன் இராஜபக்சே நடத்திய இனப்படுகொலையில், கூட்டுக் குற்றவாளியாக இருக்கின்ற இந்திய அரசு, தமிழகத்துக்கு அழைத்து வந்து பயிற்சி கொடுப்பதை, இவ்வளவு காலம் எதிர்த்ததை, கண்டனம் தெரிவித்ததை, முற்றுகைப் போராட்டங்கள் நடத்தியதை, துச்சமாகக் கருதி இந்தப் பயிற்சியை நீ தொடர்ந்தாய். மே 27 ஆம் தேதி, அந்தச் சிங்கள இராணுவ அதிகாரிகள் இங்கே அழைத்து வரப்பட்டார்கள். அந்தச் செய்தி, இந்த மாதம் 9 ஆம் தேதி வரையிலும் வெளியில் தெரியாமல் ரகசியமாகத்தான் இருந்தது. Read more at: tamil.oneindia.in/news/2013/06/25/tamilnadu-vaiko-warns-centre-over-training-sri-lanka-177875.html
Posted on: Tue, 25 Jun 2013 16:06:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015