என் நாமத்தினாலே நீங்கள் - TopicsExpress



          

என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்(யோவான் 14:14) அன்பானவர்களே! …வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது... நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என் ஆத்துமா திருப்தியாகும்; என் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் உம்மைப்n பாற்றும் (சங்கீதம் 63:1,5) என்று பக்தன் சொல்லுகிறான். இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் (மத்தேயு 12:34) பரிசுத்த ஆவியானவர் உங்கள் இருதயத்தை நிரப்பும்பொழுது, தானாக உங்கள் வாய் அந்நியபாஷைகளை, பரலோக பாஷைகளைப் பேசும். ஆனந்தக் களிப்புள்ள உதடுகளினால் ஆண்டவரை போற்றும். அதே ஆசீர்வாதத்தை பெற்றக்கொண்ட சகோதரன் கதிரேசனின் சாட்சியை கீழே தந்திருக்கிறேன். நான் ஈரோடு மாவட்டத்தில் வசிக்கிறேன். வீட்டில் அம்மா, அப்பா, பாட்டி, இரண்டு தம்பிகள் என நாங்கள் 6 பேர். 2008-ம் வருடம் இயேசுவை தெரிந்துகொண்டு, கடமைக்காய் ஆலயத்திற்கு சென்று வந்தேன். 2010-ம் வருடத்தில் எனக்கு பயங்கரமான முதுகுவலி வந்தது. மருத்துவரிடம் சென்று பரிசோதித்தபோது, இதற்கு வைத்தியம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். ஒரு சிறு பொருளை தூக்கினால்கூட மூச்சத்திணறும். அப்படிப்பட்ட தாங்க முடியாத வலியினால் பத்து மாதங்கள் தவித்தேன். அந்த நாட்களில் திருப்பூர் பிரார்த்தனைக் கூட்டங்களைக் குறித்த விளம்பரத்தை டி.வி.யில் பார்த்தேன். அந்த கூட்டத்திற்குப் போக வேண்டும் என்ற வாஞ்சை எனக்குள் வந்தது. மிகுந்த வேதனையோடு அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். வலியோடு செய்தியை கேட்டுக்கொண்டிருந்தேன். செய்தி முடிந்தபின், சுகவீனமாயிருக்கிறவர்கள் எழும்பி நில்லுங்கள், நான் அப்படிப்பட்டவர்களுக்காக ஜெபிக்கப்போகிறேன் என்று கூறி அவர்கள் ஜெபித்தபொழுது, திடீரென நான் ஆச்சரியப்படத்தக்க விதத்தில், முதுகுவலியினால் வேதனைப்படுகிறவர்களுக்காய் ஜெபித்துவிட்டு, பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். இதற்கு முன் அந்நியபாஷையில் நிரம்பி ஜெபிப்பவர்களை நான் பார்க்கும்பொழுது, இவர்களாகவே இப்படி பேசுகிறார்களா? இப்படித்தான் ஜெபிக்கவேண்டும் என்று கட்டாயமா?என்று எனக்குள் கேலி செய்வேன். ஆனால் அன்று திடீரென அவர்கள் ஜெபிக்கும்போது, வலியிருக்கிற இடத்தில் கை வைத்து ஜெபியுங்கள் என்று கூறின அதே நேரத்தில், நான் என் முதுகுப் பகுதியில் கை வைத்து ஜெபித்தேன். என்ன அற்புதம்! சில நிமிடத்தில், பரிசுத்த ஆவியானவர் வல்லமையாய் என்மேல் இறங்கினார். நான் எங்கிருக்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை. நான் ஜெபம் முடிந்து எழுந்தபோது, முதுகு வலியிலிருந்து முற்றிலும் விடுபட்டிருந்தேன். அன்றிலிருந்து இன்றுவரை அந்த வலியே எனக்கு இல்லை. நற்சுகத்தோடிருக்கிறேன். ஆவியில் நிரம்பி அந்நிய பாஷையில் பேசி ஆனந்தக்களிப்புடன் ஆண்டவரை மகிமைப்படுத்துகிறேன். இயேசுவுக்கே மகிமை எனக்கு அருமையானவர்களே, கர்த்தர் எவ்வளவு நல்லவர், அவரைத் தேடி ஓடி வந்த அன்பு மகனுக்கு பரிசுத்த ஆவியின் நிறைவைக் கொடுத்த பொழுது, அவன் அற்புத சுகத்தையும் பெற்றுக்கொண்டான். இதே ஆசீர்வாதம் இன்றைக்கு உங்கள்மீதும் இறங்குகிறது. நீங்களும், ஆண்டவரே, நான் அரைகுறையான ஆசீர்வாதங்களோடு வாழக்கூடாது, எனக்குத் திருப்தியான ஆசீர்வாதம் வேண்டும், நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல கன்மலையின் தேனினால் என்னை திருப்தியாக்கும்; நீர் எனக்கு வேண்டும், உம்முடைய பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம், உன்னத அனுபவம் எனக்கு வேண்டும் என்று கேளுங்கள். என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன் (யோவான் 14:14) என்று ஆண்டவர் வாக்கருளியிருக்கிறார். அவர் பூமிக்குரிய ஆசீர்வாதங்களை மாத்திரமல்ல, வானத்திற்குரிய ஆசீர்வாதங்களையும் உங்களுக்கு அருளிச்செய்வார். நீங்கள் முற்றிலும் வேறுபட்டவர்களாக மாறுவீர்கள். கிடைத்தற்கரிய உன்னதமான ஆசீர்வாதங்களினால், கன்மலையின் தேனினால் உங்களை நிரப்பி திருப்தியாக்குவார். ஜெபம்: என் அன்பிற்குரிய தகப்பனே, உம்முடைய நாமத்தினால் உண்டாகும் ஆசீர்வாதங்களை இந்நேரத்தில் நான் பெற்றுக்கொள்ளும்படி அருள்புரிந்தருளும். எந்நேரமும், எல்லாவற்றிலும் ‘இயேசு’ என்னும் உம்முடைய நாமத்தை உச்சரிப்பதற்கு கிருபை செய்தருளும். என் ஆபத்தில் என்னை இரட்சிக்கிறவர் நீரே. உம்மைத் துதிக்கிறேன். கல்வாரி சிலுவையில் நீர் எனக்கென்று சம்பாதித்து வைத்திருக்கிற ஆசீர்வாதங்கள் இப்போதே எனக்கு உரித்தாகட்டும். இந்த மாதம் முழுவதிலும் நீரே என்னை வழிநடத்தி உம்முடைய வார்த்தையின்படியே ஆசீர்வதியும். துதி, கனம், மகிமை யாவையும் உமக்கே செலுத்துகிறேன், ஆமென்! You may ask me for anything in my name, and I will do it. (John 14:14) Dearly beloved, The Psalmist says, “My soul thirsts for you…My soul will be satisfied as with the richest of foods; with singing lips my mouth will praise you” (Psalm 63:1,5). Lord Jesus said, “For out of the overflow of the heart the mouth speaks” (Matthew 12:34). When the Holy Spirit fills your heart, you will speak in tongues and in the language of heaven. Your mouth shall praise Him with joyful lips. I am giving below the testimony of Bro. Kathirasen who received this blessing in his life: “I am living in Erode. We are 6 members in our family – father, mother, grandmother and we three sons. In 2008, I accepted Lord Jesus and started going to church just as a duty. In 2010, I started suffering from severe back pain. The doctors said that there was no cure. I could not even carry a small object, because if I did so I would gasp for breath. I suffered a lot for ten days. During that time, I saw the advertisement for the Jesus Calls meetings in Tirupur. With great desire, I went to the meeting despite my acute pain. With great difficulty, I was listening to a message. At the time of prayer, she said, Those of you who are sick please stand up. I am going to pray for you. So saying, she began to pray. Surprisingly, she prayed for those who suffered from back pain and asked such people to receive the Holy Spirit. Earlier, I used to mock at those who prayed in tongues saying, Are they talking so by themselves? Is it necessary that they should pray like this? But when Sister said, Those who have pain place your hands on that spot and pray,’ I did so. What a wonder! Within a few minutes, the Holy Spirit came down on me mightily and I did not know where I was. After the prayer, I realized that the pain had completely gone. Since then, there is no pain. I am doing fine. I glorify the Lord joyously in tongues, filled with the Spirit. Glory to Jesus.” Dear ones, how good is our God! When He gave him, the anointing of the Holy Spirit, he received a miraculous healing. Today, the same blessing comes upon you. You should also ask Him, “Lord, I should not live with partial blessings; I need satisfactory blessings. Satisfy me with the honey from the rock as with marrow and fatness; I need You. I need the anointing of the Holy Spirit and the heavenly experiences.” The Lord has promised, “You may ask me for anything in my name, and I will do it” (John 14:14). He will give you not only the blessings of the earth, but also the blessings of heaven above. You shall totally become a different person. He will satisfy you with the rarest blessings from above, the honey from the rock. Prayer: Loving Lord Jesus, You have promised to give whatever I ask in your name. I trust in You and ask You to grant me your divine blessings. Please heed my prayers and perform miracles for me. Satisfy me with your richest blessings. May I lack nothing good in life. In Your matchless name I pray. Amen.
Posted on: Sun, 03 Nov 2013 08:33:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015