என் நண்பன் ஒருத்தன் ஒரு - TopicsExpress



          

என் நண்பன் ஒருத்தன் ஒரு நாள் 2nd show சினிமா பாத்துட்டு பைக்குல வரும் போது ஒரு அழகான பொண்ணு லிப்ட் கேட்டா. சரி Untime-மா இருக்கேனு இவனும் அவளைஏத்திக்கிட்டு வரான். கொஞ்ச தூரம் வந்தோன இவன் எதேச்சையா rear view mirror-ல பாத்தா அவ புடவை சிவப்பு கலர்ல தெரியுது. இவனுக்கு லைட்டா ஒரு டவுட்டு. ஏன்னா இவன் அந்த பொண்ண பைக்குல ஏத்தும் போது அது பச்சைக் கலரா இருந்த மாதிரி இருக்கு. சரினு இவனும் எதுவும் கண்டுக்கல. திரும்பவும் கொஞ்ச தூரம் வந்துட்டுப் பார்த்தா அவ புடவை மஞ்சள் கலர்ல இருக்கு. இவனுக்கு ஒண்ணும் புரியல. கொஞ்சம் கையும் காலும் நடுங்க ஆரம்பிச்சுருச்சு. இருந்தாலும் ஒரு தைரியத்த வரவழைச்சுகிட்டுவண்டி ஓட்டறான். அதுக்கு அப்புறம் ஒரு 10 நிமிஷத்துல அந்த பொண்ணு, தான் இறங்க வேண்டிய இடம் இதுதான்னு சொல்லி வண்டிய நிறுத்தச் சொன்னா.சரினு இவனும் வண்டிய நிறுத்திட்டு திரும்பிப் பார்த்தா அவ நல்ல வெள்ளைக் கலர் புடவை கட்டிக்கிட்டு நிக்கிறா. இவனுக்கா அல்லு இல்ல. இருந்தாலும் கொஞ்சம் தைரியத்த வரவழைச்சிக்கிட்டு அந்த பொண்ணுகிட்ட................. "நான் உங்ககிட்ட ஒண்ணு கேட்டா கோபிக்க மாட்டீங்களே........." "சொல்லுங்க" "இல்ல நீங்க என் வண்டியில ஏறும் போது பச்சைக்கலர் புடவை கட்டியிருந்தீங்க. ஆனா இப்பொ எப்படி அது வெள்ளைக் கலர்ல?" அதுக்கு அவ சொன்னத கேட்டு என் நண்பன் அங்கயே மூர்ச்சையாயிட்டான். அப்படி அவ என்ன சொன்னானா............ . . . . . . . . . . . . . . . . . . "நான் இப்பொ உஜாலாவுக்கு மாறிட்டேன்"
Posted on: Mon, 22 Jul 2013 18:06:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015