""""ஒருவன் - TopicsExpress



          

""""ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின""(2 கொரிந்தியர் 5:17) பிரியமானவர்களே! பாவியான ஒரு பெண், இயேசு விருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த வீட்டில் பிரவேசித்தாள் (மாற்கு 14:3, லூக்கா 7:37, யோவான் 12:3). இயேசுவை விருந்துக்கு அழைத்தவன் அவளைப் பார்த்ததும், """"இவள் பாவியாயிருக்கிறாளே! இவர் பாவியை அல்லவா, உள்ளே அனுமதித்து விட்டார்"" என்றான். ஆனால், அந்த பெண்ணோ, தன் பாவங்களுக்காக அழுது கண்ணீர் சிந்த ஆரம்பித்தாள். விலையுயர்ந்த பரிமள தைலத்தை எடுத்துக்கொண்டுவந்து, இயேசுவை அந்த தைலத்தினால் கனம்பண்ணினாள். தன்னிடமிருந்த பணத்தை எல்லாம் வைத்து அந்த விலையுயர்ந்த தைலத்தை வாங்கி, அதினால் அவருடைய சரீரத்தை அலங்கரித்தாள், நறுமணம் வீசச்செய்தாள். இயேசுவை விருந்துக்கு அழைத்த சீமோன், """"இந்த பாவியாகிய பெண் தன்னைத் தொடுவதற்கு அனுமதித்துவிட்டாரே"" என்று சொன்னான். ஆனால், இயேசு, நான் அவளை சகலவிதத்திலும் புதிதாக்கியிருக்கிறேன். நான் அவளுக்கு என்னை நேசிக்கும் புது இருதயத்தைக் கொடுத்திருக்கிறேன். ஏனென்றால், அவள் என்னிடத்தில் மிகவும் அன்பு கூர்ந்தாள். சீமோனே, நீ என் காலைக்கழுவக்கூட தண்ணீர் கொடுக்கவில்லை. ஆனால், இவளோ, விலையுயர்ந்த நறுமண தைலத்தை என் சரீரத்தில் ஊற்றிவிட்டாள். தன் கண்ணீரினால் என் பாதங்களை கழுவிவிட்டாள். நான் இவளுக்கு புதிய இருதயத்தைக் கொடுக்கிறேன் என்றார். ஆம், உலகத்திற்கு, உலகப்பொருளுக்கு, உலகப்புகழுக்கு, உலக இச்சைகளுக்கு பின்பாக போய்க்கொண்டிருந்த அந்த இருதயத்தை, இயேசுவை உயிரைப்போல் நேசிக்கும் இருதயமாக மாற்றிவிட்டார். அதோடுகூட அவர் சொன்னார்:""""இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்"" (மாற்கு 14:9). ஏனென்றால், இன்னம் கொஞ்சம் நாட்களில் என்னை சிலுவையில் அறையப்போகிறார்கள். ஆனால், அந்த நாளில் என் காயங்களை ஆற்றுவதற்கு யாருமே முன்வரமாட்டார்கள். மரித்துப்போனபின்தான் எல்லாரும் தைலம் பூசுவார்கள். அனால், நான் காயப்படும்போது தைலம் பூச யாருமே வரமாட்டார்கள். என்னுடைய சீஷர்கள் தூங்குவார்கள். ஒருவன் மறுதலிப்பான், அந்த நேரத்தில் எல்லாரும் போய் கதவை மூடிக்கொள்வார்கள். என்னை பராமரித்தவர்கள் எல்லாரும் அப்படியே செய்வார்கள். ஆனால், இந்த பெண்ணோ, அவர்கள் எல்லாருக்கும் முன்பதாக என் காயங்களுக்கு தைலம் பூச முந்திக்கொண்டாள். ஆகவே, புது இருதயத்தைப் பெற்ற இவளைக் குறித்து உலகமெல்லாம் சொல்லப்படும். இந்த வீட்டில், இவளைப் பாவி என்று நீ சொல்லுகிறாய், ஆனால், இவளுக்கு புது வாழ்க்கையை நான் கொடுக்கிறேன். உலகமெங்கும் ஆண்டவரின் காயங்களை ஆற்றிய பெண், ஆண்டவரை மகிமைப்படுத்திய பெண் என்று இவளை எல்லாரும் சொல்லும்படி செய்வேன். அதற்காகவே இவளுக்கு புதிய இருதயத்தைக் கொடுக்கிறேன் என்றார். பிரியமானவர்களே! இன்று ஆண்டவர் பாவம் நீங்கின புதிய வாழ்க்கையை உங்களுக்கும் கொடுக்கிறார். வாழ்க்கை நெறிகளில் தவறில்லாமல் உத்தமமாக வாழ்ந்து, சுத்த பாஷையை கொடுக்கிறார். அதோடுகூட, அவரை உயிரைப்போல நேசித்து யாருக்கும் பயப்படாமல் அவரை கனப்படுத்துவதற்கான, அன்புகூருவதற்கான புதிய இருதயத்தையும் கொடுக்கிறார். """"…ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின"" (2 கொரிந்தியர் 5:17). இந்த புதிய வாழ்க்கையை இயேசு மட்டுமே கொடுக்க முடியும். இன்று அதை ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கப்போகிறார். இன்றிலிருந்து அதைப் பெற்றுக்கொள்ளப்போகிறீர்கள். ஆண்டவருடைய கரங்களில் உங்கள் இருதயத்தை ஒப்புக்கொடுங்கள், தேவ ஆசீர்வாதம் பெறுங்கள். ஜெபம்: அன்பு தெய்வமே! நீர் சிலுவையிலே சம்பாதித்துக் கொடுத்த """"இரட்சிப்பு"" எத்தனையாய் வாழ்வை மாற்றுகிறது என்று அறிந்துகொண்டேன். என் வாழ்விலும் இந்த ஜீவன் பிரவாகித்து ஓட, நானும் உண்மையான கிறிஸ்துவை உடையவனாக வாழ்ந்து காண்பிக்க எனக்கும் அருள்தாரும். நீர் அப்படியே செய்கிறதற்காக உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம். என் வாழ்வை இன்றுமுதல் உமக்கு சொந்தமாக அர்ப்பணிக்கிறேன். நீர் என்னிலும் நான் உம்மிலும் நிலைத்திருக்கும் பாக்கியமான வாழ்வை எனக்கு தந்தருளும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே, ஆமென்! Therefore, if anyone is in Christ, he is a new creation; the old has gone, the new has come! (2 Corinthians 5:17) Dearly beloved, A sinful woman entered into the house where Lord Jesus was dining (Mark 14:9, Luke 7:37, John 12:3). She began to shed tears for her sins. She brought a costly oil of spikenard and honoured Lord Jesus with that oil. When the Pharisee who had invited him saw this, he said to himself that she was a sinner. Lord Jesus told him that when He came into his house, he did not give Him any water for His feet, but she wet His feet with her tears and wiped them with her hair. He did not put oil on His head, but she had poured perfume on His feet. Therefore, her many sins have been forgiven--for she loved Him much. Further He said, “"Assuredly, I say to you, wherever this gospel is preached in the whole world, what this woman has done will also be told as a memorial to her." (Mark 14:9). Yes, Lord Jesus changed that heart. Dearly beloved, even today, the Lord desires to give you such a new life devoid of sin. He will enable you to live a faithful and spotless life. Besides, He will give you a new heart. The Bible says, “Therefore, if anyone is in Christ, he is a new creation; the old has gone, the new has come” (2 Corinthians 5:17). When you love the Lord with all your heart, He shall forgive the sins of your past and give you a new heart. He will transform you into a new creation. Prayer: Loving Lord Jesus, I love You and honour You with all my heart. I seek your forgiveness and shed tears of repentance. Please grant me your forgiveness through your precious blood. Transform me into a new creation and give me the grace to lead a blameless life. In Your matchless name I pray. Amen.
Posted on: Mon, 07 Oct 2013 13:02:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015