""""ஒருவன் எனக்கு - TopicsExpress



          

""""ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்""(யோவான் 12:26) பிரியமானவர்களே! ஆண்டவரோடு இணைந்திருக்கிற உங்கள் வாழ்வில் அவர் பெரிய காரியங்களைச் செய்யப்போகிறார். நாம் அவர் வார்த்தைக்கு கீழ்ப்படியும்பொழுது, அவர் நம்மில் எதிர்பார்க்கும் கிரியைகளை நாம் நிறைவேற்றும்பொழுது, அவரை சந்தோஷப்படுத்தும்பொழுது, அவர் நமக்கு, அருளிச்செய்யும் ஆசீர்வாதங்களை பதிவேட்டில் பதிவு செய்யக்கூட முடியாத அளவுக்கு அதிகமாய் இருக்கப்போகிறது. """"கடற்கரை மணலைப்போல பெருகப்பண்ணுவேன்"" என்று அவர் கூறும் அளவிட முடியாத வாக்குத்தத்தத்தை கேட்கும் பொழுதே நம் உள்ளம் சந்தோஷத்தினால் நிறைந்து பூரிப்படைகிறதல்லவா! இன்றைக்கு இந்தக் காரியம் எப்படி நடக்கப்போகிறதோ என்று நாம் ஆச்சரியத்தோடு காத்திருக்கலாம். ஆனால், வருங்காலத்தில் இது நடக்கத்தான் போகிறது. எருசலேமில் ஒரு கோபுரத்தை அமைக்கும்படி தேவன் நம்மிடம் கூறியிருக்கிறார். இதை எப்படி நடப்பிக்கப்போகிறோம் என்று மிகப்பெரிய ஆச்சரியத்தோடு காத்திருக்கிறோம். அதனுடைய தேவைகளை நினைத்து கலங்கிக்கொண்டிருக்கிறோம். ஆனாலும், கர்த்தர் என்னிடம் சொன்னார்: """"நான் யோசேப்போடுகூட இருந்ததுபோலவே, உன்னோடும் இருப்பேன். யோசேப்பு செய்ததையெல்லாம் செழிக்கும்படி செய்து, எப்படி நான் அவனுக்கு வெற்றியைக் கொடுத்தேனோ, அதைப்போலவே நீயும் வெற்றியைக் காண்பாய்"" பிதாவானவர் நமக்குக் கொடுக்கும் ஆசீர்வாதங்களை சேமிக்கையில் அது அளவுக்கு அதிகமாயும், அளவிடமுடியாததாயும் இருக்கிறது. ஏனென்றால், கர்த்தருடைய ஊழியத்தைச் செய்கிற நம்மை அவர் அவ்வளவாய் கனம்பண்ணுவார். """"ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்"" (யோவான் 12:26). ஒருவேளை சிலர் இன்று தேவனுடைய ஊழியத்தைச் செய்கிற நம்மைப் பார்த்து பரிகாசம் செய்யலாம். ஆனாலும், அவர்களுடைய பரிகாசத்தின் மத்தியிலும் தேவன் நம்மை அதிகமதிகமாய் ஆசீர்வதிக்கப்போகிறார். இவையெல்லாவற்றின் மத்தியிலும், எவ்வளவுக்கதிகமாய் நாம் தேசத்திற்குள் பிரவேசித்து அவரது ஊழியத்தை செய்கிறோமோ அவ்வளவுக்கதிகமாய் கர்த்தர் நம்மை கடற்கரை மணலத்தனையாய் ஆசீர்வதிக்கப்போகிறார். ஜெபம்: அன்பின் தேவனே, என் வாழ்க்கையில் அநேக நாட்களை அர்த்தமில்லாமல் கழித்திருக்கிறேன். என்னை மன்னித்தருளும். உம்மையே என் இரட்சகராக ஏற்றுக்கொண்டேன். சிருஷ்டிக்கர்த்தரே உம்முடைய கரத்தில் என்னை ஒப்படைக்கிறேன், உமக்குள் வாழக்கூடிய சிறப்பான வாழ்வை எனக்குத் தந்தருளும். என் வாழ்க்கை காற்றிலசையும் நாணலை போல் இல்லாமல், குறிக்கோளோடு வாழக்கூடிய பயனுள்ள வாழ்வை எனக்குத்தாரும் மேற்கண்ட வசனத்தின்படி கனிகொடுக்கும் ஜீவியத்தை தந்த என்னை ஆசீர்வதியும்! இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, ஆமென்! Whoever serves me must follow me; and where I am, my servant also will be. My Father will honor the one who serves me. (John 12:26) Dearly beloved, The Lord has commanded us to establish a Prayer Tower in Jerusalem. We are anxiously waiting for this to happen. At the same time, we are rather worried as to how we are going to do it. But the Lord clearly told me, “I will be with you as I was with Joseph. Just as I prospered all that Joseph did and granted him victory, I will grant you great success.” When God showers His blessings upon you, you will not be able to count them, because He loves those who do His ministry. The Bible says, “Whoever serves me must follow me; and where I am, my servant also will be. My Father will honor the one who serves me” (John 12:26). Those who choose to serve Lord Jesus must obey His commandments and follow His footsteps. They must submit themselves to carry out His will. Then God will certainly reward them for their faithfulness. Dearly beloved, you are the chosen vessel of God. Fear the Lord and serve Him faithfully with all your heart. Then He will make your way prosperous and you will have success. He will certainly lift you up in honour. Be assured that the Lord will bless you in an abundant measure. The more you do the Lord’s ministry in the nation, the more He will bless you.
Posted on: Sat, 22 Jun 2013 07:26:26 +0000

Trending Topics



MY INTERNET RADIO SHOW - Like It Or Not With Michael Lane
Memang dari dulu lagi Malaysia patut beratkan tentang ini, macam
Suddenly ppl who js has a paper qualification n earns a decent
How To Be Successful On Written Assessment Exercises For Police

Recently Viewed Topics




© 2015