ஓ மை காட்..! – கதை, திரைகதை, - TopicsExpress



          

ஓ மை காட்..! – கதை, திரைகதை, வசனம் – மு.கருணாநிதி நானும் எத்தனையோ கதைகளை கேட்டுருக்கேன். ஆனால் இதுபோல ஒரு கதை இதுவரை கேட்டதில்லை, கேட்கவும் முடியாது. முழு உலகத்தையும் சோற்றில் மறைக்கும் கற்பனை முயற்சி. இதை படித்தவுடன் உங்களுக்கு கண்ணை கட்டலாம், மயக்கம் வரலாம், தற்கொலை எண்ணம் கூட வரலாம். இதயம் பலவீனமானவர்கள் இதை படிக்க வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன். தினமலரில் நேற்று வந்த கதை . இணையத்தில் நான் படித்ததிலேயே இந்த தினமலர் கட்டுரைக்கு வந்த பின்னூட்டம் தான் கிளாஸ் என்பேன். ——————–தினமலர்——————–சென்னை : “கோபாலபுரம் வீட்டைத் தவிர வேறு பெரிய வீடுகளையோ, தோட்டங்களையோ, எஸ்டேட்களையோ விலைக்கு வாங்கவில்லை’ என, முதல்வர் கருணாநிதி தனது சொத்துக் கணக்கை அறிவித்துள்ளார். அவரது அறிக்கை: ஜெயலலிதா துவங்கி அ.தி.மு.க., தொண்டர்கள் வரையிலும், சில கட்சிகளின் நண்பர்கள் சிலரும், நான் ஏதோ சல்லிக்காசு கூட கையிலே இல்லாமல் சென்னைக்கு வந்ததைப் போலவும், இன்றைக்கு ஆசியாவிலேயே முதலாவது பணக்காரனாக இருப்பதாகவும், என் பெயரில் ஏராளமான சொத்துக்களையும், எஸ்டேட்களையும் வாங்கிக் குவித்திருப்தைப் போலவும் பேசி வருகிறார்கள்; எழுதி வருகிறார்கள். நான் சிறு பருவத்திலே இருந்தபோதே, திருடர்கள் வீடு புகுந்து திருட வருகின்ற அளவிற்கும், உயர்நிலைப் பள்ளியில் படிக்கவே திருவாரூரில் கொண்டு போய் சேர்க்கக் கூடிய அளவிற்கும் ஓரளவு வசதியுள்ள குடும்பம் தான் என்னுடையது. கடந்த 1949ம் ஆண்டு சேலம் மாடர்ன் தியேட்டர்சில் எழுத்தாளர் பணியிலே அமர்ந்தேன். அந்தக் காலத்திலேயே மாத ஊதியமாக 500 ரூபாய் பெற்றேன். அதே ஆண்டு ராபின்சன் பூங்காவில் தி.மு.க., துவக்கப்பட்ட போது அந்தக் கூட்டத்திலே கலந்து கொண்டேன். அந்தக் கூட்டத்திற்கு வந்த போது, விருதுநகர் நாடார் லாட்ஜில் தான் தங்கினேன். என், “மந்திரிகுமாரி’ நாடகம் சேலம் மாடர்ன் தியேட்டர்சால் திரைப்படமாக எடுக்கப்பட்ட போது, எங்கள் குடும்ப வாழ்க்கை சேலத்தில் துவங்கியது. அப்போது சேலம் வந்த என்.எஸ்.கிருஷ்ணன் என்னைச் சந்தித்து அவருடைய “மணமகள்’ திரைப்படத்திற்கு நான் தான் திரைக்கதை வசனம் எழுத வேண்டும் என கேட்டார்; ஒப்புதல் அளித்தேன். அந்தக் காலத்திலேயே 10 ஆயிரம் ரூபாய் ஊதியமாகப் பெற்றேன். அதுபோலவே, “இருவர் உள்ளம்’ திரைப்படத்திற்காக வசனம் எழுதிய போது, அந்தப் படம் நூறு நாளைத் தாண்டி ஓடியதால், தயாரிப்பளர் எல்.வி.பிரசாத் என் வீட்டிற்கு வந்து முதலில் கொடுத்த 10 ஆயிரம் ரூபாயைத் தவிர்த்து, மேலும் 10 ஆயிரம் ரூபாயை என்னிடம் அளித்தார். நான் அந்தக் தொகையைக் கொண்டு திருக்குவளையில் என் பெற்றோர் பெயரால் ஒரு தாய்சேய் நல விடுதி கட்டி, அதை அன்றைய முதல்வர் பக்தவத்சலத்தை அழைத்துச் சென்று திறந்து வைத்தேன். அந்தக் காலகட்டத்தில் சென்னை தி.நகரில் ஒரு வாடகை வீட்டில் குடும்பம் நடத்தினேன். அப்போது ஒரு நாள், கலைவாணர் என்னிடம் ஒரு பந்தயம் கட்டி, அதிலே 5,000 ரூபாய் எனக்கு லாபம் கிடைத்தது. அது கண்டு வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்த கலைவாணர் அதற்கு மேல் தேவையான பணத்தைத் தானே போட்டு, எனக்கு ஒரு கார் வாங்கித் தந்தார். அந்த காரில் என்னை உட்கார வைத்து கலைவாணரே ஸ்டூடியோவிற்கு அழைத்துச் சென்றார். தொடர்ந்து இன்று வரை 75 படங்களுக்கு மேல் நான் திரைக்கதை, வசனம் எழுதி ஊதியம் பெற்றுள்ளேன். பொதுப்பணித்துறை அமைச்சராகவும், ஐந்து முறை முதல்வராகவும் இருந்திருக்கிறேன். எல்லா முதல்வர்களின் வீடுகளையும் விட வசதி குறைவான எளிமையான வீட்டிலே தான் நான் வாழ்ந்து வருகிறேன் என்பதை, வெளிநாட்டிலிருந்து வந்த முக்கிய பிரமுகர்களே நேரில் கண்டு வியப்பு தெரிவித்துள்ளனர். இந்த வீடு கூட நான் அமைச்சராவதற்கு முன் 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய வீடு தான். நான் இத்தனை பொறுப்புகளையும் என் 87 வயதிற்குள் பார்த்திருக்கிறேன் என்ற போதிலும், சென்னையில் உள்ள இந்த ஒரு வீட்டைத் தவிர வேறு பெரிய வீடுகளையோ, தோட்டங்களையோ, எஸ்டேட்களையோ விலைக்கு வாங்கியதும் இல்லை. அரசு நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டதும் இல்லை. குறைந்த விலைக்கு பெற்றுக் கொண்டதும் இல்லை. இறுதியாக தற்போது என் கணக்கிலே எவ்வளவு இருப்பு உள்ளது என்பதையும் நான் தெரிவிக்க விரும்புகிறேன். தற்போது வைப்பு நிதியாக ஐந்து கோடியே 65 லட்சத்து 92 ஆயிரத்து 134 ரூபாயும், சேமிப்பு கணக்கில் 35 லட்சத்து 90 ஆயிரத்து 86 ஆயிரம் ரூபாயும் இன்றைய தேதியில் உள்ளது. நான் வசிக்கிற இந்த வீட்டைக் கூட மருத்துவமனை அமைப்பதற்காக எழுதிக் கொடுத்துள்ளேன். இந்த வீட்டைத் தவிர என் பெயரில் நான் எந்தச் சொத்தையும் வாங்கவில்லை. இதை வைத்துத்தான் நான் ஆசியாவிலேயே முதல் கோடீஸ்வரன் என்கிறார்கள். லஞ்சம், ஊழல் விஷயத்தில் என் உதவியாளர்கள் கூறுவது போல நான் ஒரு நெருப்பு மாதிரி. நான் முதல் முறையாக முதல்வராக இருந்த போது, தஞ்சாவூர் கூட்டுறவு நிறுவனம் ஒன்றில் எனக்கு மிகவும் வேண்டிய உயிர் நண்பர் வக்கீல் தவறு செய்த போது அவர் மீது நடவடிக்கை எடுத்தேன். என் வாழ்க்கை திறந்த புத்தகம் என்பதை அவர்களுக்கெல்லாம் தெளிவாக்கவும், என் மீது இன்னும் குறை காண்கின்ற ஒரு சிலரும் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும். கண்ணுடையோர் காண்பதற்காக. முகத்தில் இரண்டு புண்ணுடையோர்க்கல்ல. இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். —————–நான் ரசித்த பின்னூட்டம்————————————- ஷம்கீன் துபாய் – துபாய்,ஐக்கிய அரபு நாடுகள் 2010-12-02 03:09:18 IST சரி….. நீங்க சொன்னத நாங்க ஏத்துகிட்டோம்….அதே மாதிரி நாங்க சத்தியமா உங்களுக்கு இனிமே ஓட்டு போடவே மாட்டோம்….இத நீங்க ஏத்துக்கிடனும்……..இந்த கோட்ட தாண்டி நீங்களும் வரக்கூடாது……. நாங்களும் வர மாட்டோம்….பேச்சு பேச்சாவே இருக்கணும்……. செல்வம் – chennai,இந்தியா 2010-12-02 02:23:30 IST கே.ராஜசேகரன் – chennai,இந்தியா உங்களின் கருத்து அருமையோ அருமை…..(கருணாநிதியின் குடும்பத்தில் யாருக்கும் எந்த சொத்தும் கிடையாது.கருணாநிதி ஹை கோர்ட் வக்கீலிடம் குமாஸ்தாவாக இருக்கிறார்.அழகிரி மதுரையில் கூலி வேலை செய்கிறார்.ஸ்டாலின் சென்னையில் மீன்பாடி வண்டி ஓட்டுகிறார்.கனிமொழி துணி கடையில் வேலை செய்கிறார்.மாறன் சகோதரர்கள் வேலையில்லாமல் ஊரை சுற்றுகிறார்கள்.மற்ற பேரன்கள் பஸ் ஸ்டாண்டில் பிச்சையெடுத்து கொண்டு இருக்கிறார்கள்.தயவுசெய்து அனைவரும் நம்புங்கள்.இல்லாவிட்டால் சிங்கப்பூர் ஜோபெட்க்கு கோபம் வந்து ஜெயலலிதாவை தரக்குறைவாக திட்ட ஆரம்பித்து விடுவார்…. )உங்களின் கருத்து போல் தன்னுடைய குடும்ப உறுபினர்களை பற்றி கருணாநிதியே இன்னும் கொஞ்ச நாளில் இப்படி சொன்னாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை….. தன்னுடைய கடைசி காலத்திலும் மக்களை ஏமாற்றி பிழைக்க பார்க்கிறார் கருணாநிதி… சந்தோஷ்.g – vellore,இந்தியா 2010-12-02 02:05:40 IST அய்யா உங்கள் சொத்து மதிப்பை கேட்டால் ஒரு லட்சம் கோடி, இரண்டு லட்சம் கோடி, மூன்று லட்சம் கோடி ரூபாய் என்று பெருமையாக சொல்லுங்கள், நீங்கள் என்னோட சொத்து இரண்டு கோடி ரூபாய் என்று கூரியுள்ளீரே, உங்களுக்கு அன்றாடம் சமைத்து போடும் சமையல் காரன் கைப்புள்ள சொத்து இரண்டு கோடி ரூபாய் இருக்கும். வந்த இரண்டு மாதத்தில் கைப்புள்ள உங்களுக்கு சமைத்து போட்டு இரண்டு கோடி ரூபாய் சொத்து சேர்த்துவிட்டார். நீங்கள் கொள்ளையடித்து ஆசியாவிலே பணக்கரார், உலகத்திலேயே பணக்கரார் இடத்தை பிடிக்கபோகிரீர் என்று நாங்கள் எல்லாம் பெருமை பட்டோம், ஆனால் நீங்கள் என் சொத்து இது தான் என்று வாய் கூசாமல் பொய் கூறுகிறீரே? நியாயமா? அய்யா ஒரு வேண்டுகோள், எனக்கும் கைப்புள்ள மாதிரி கோடி ரூபாய் பார்க்கவேண்டும், எத்தனை காலத்திற்கு லட்சத்தில் சம்பாதிப்பது, உங்கள் கொள்ளு பேரனுக்கு டியூஷன் சொல்லி கொடுத்து நானும் இரண்டு மாதத்தில் இரண்டு கோடி சம்பாதிக்க வேண்டும், தயவு செய்து என்னை வாத்தியாராக உங்கள் கொள்ளு பேரனுக்கு நியமியுங்கள்…. முரளி – vienna,யூ.எஸ்.ஏ 2010-12-02 01:55:38 IST Yesterday, I saw Mr.Karunanidhi was standing in the ration queue to buy One KG One Rs rice and oil for his family(s). He is poor enough to get the monthly old age pension from the government. Very honest fellow. From now on, Mr.Karunanidhi should be fondly called as “Fire Karunanidhi”. (Please don’t read this as to fire Karunandhi from his post). He never got any ill gotten wealth. He never accepted any bribe from anybody. His family members are very honest too. His daughter KaniMozhi’s ECR property belongs to Somebody. They are struggling with hand to mouth. May GoD bless them to make some money through their legal ventures…. கே.கைப்புள்ள – nj,இந்தியா 2010-12-02 01:34:01 IST எல்லோரும் நல்லா கேட்டுகோங்கப்பா, இவரோட வாழ்க்கை தொறந்த புத்தகமாம்பா. இந்த புத்தகத்த உலக நூலகத்துலதான் வெக்கணும். பின்னாடி வரும் சந்ததிங்க எல்லாம் பாத்து படிச்சு பயன்பெறுவாங்க. ஆமா அது என்ன புத்தகம்? புத்தகத்தோட தலைப்பு என்ன? விஞ்ஞான முறையில் ஊழல் செய்வது எப்படி? மக்களை கிறுக்கு பிடிக்கும் படி பேசி குழப்புவது எப்படி? மக்களை திசை திருப்பி குழப்பி முட்டாளாக்கி ஓட்டு வாங்கி ஜெயிப்பது எப்படி? குடும்பத்துக்கும் சொந்தபந்தங்களுக்கும் சொத்து சேர்ப்பது எப்படி? சொம்படிச்சான் குஞ்சுகளை ஏமாற்றி பேசி தனது குடும்ப நலனுக்கு சொம்படிக்க வைப்பது எப்படி? இப்படி பல புத்தகம். எல்லாமே தொரந்துதான் கெடக்கு. ஆனா நமக்கெல்லாம் ஒன்னும் தெரியாது. அந்த புத்தகத்தை எல்லாம் அவரோட குடும்ப உறுப்பினர்கள்தான் படிக்க முடியும். மத்தவங்களுக்கு வெறும் அட்டைதான் கண்ணுக்கு தெரியும். இந்த புத்தகத்த காயலான் கடைல போட்டா அவன் கூட கெட்டு போய்டுவான்…. கே.கைப்புள்ள – nj,இந்தியா 2010-12-02 01:11:15 IST நான் இத படிக்க உடனே இங்கிலீஷ்காரன் வடிவேல் காமடி பார்த்தேன். சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்திடிச்சு. தீப்பொறி திருமுகம் வந்துதான்யா இந்த கற்பூரத்த பத்த வெக்கணும். பாஸ் நீங்க நடந்தா நெருப்பு பறக்குது, அருவாள எடுத்தா அனல் பறக்குது, எப்படி பாஸ்? எல்லாமே ஒரு பில்ட் அப். பாஸ் இவ்வளவு கேவலமான பில்ட் அப் தேவையா பாஸ்? பில்ட் அப் பன்றன்னோ, பீலா விடுறனோ அது நமக்கு தேவை இல்ல. நாம எது பண்ணினாலும் இந்த உலகம் நம்மள உடனே உத்து பாக்கணும். நாதாரி தனம் பண்ணினாலும் நாசூக்கா பண்ணனும். ஆனா நாம பண்றது நாலு பேருக்கு புரியபடாது, தெரியபடாது, இல்லேனா ஒரே வீட்ல 15 வருசமா இருந்துக்கிட்டு ஏமாத்திக்கிட்டு தின்னுகிட்டு வாழ முடியுமா? அவ்வளவுக்கும் கிரெய்ன்டா கிரெய்ன். பாஸ் நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ். என்னோட மூஞ்சிக்கு முன்னாடி புகலாத… எனக்கு புடிக்காது. பாஸ் நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ். புடு… புடு… புடு… புடு… புடு… நீங்களும் வேணா இந்த காமடிய பாத்து சிரிங்க. youtube englishkaaran comedy. செம ஜாலியா இருக்கும்….
Posted on: Mon, 29 Jul 2013 19:12:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015