ஓணான் பார்வை ஒரு செய்தி - TopicsExpress



          

ஓணான் பார்வை ஒரு செய்தி (?) 84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு -------------------------------------------------- ஒரு சின்ன குட்டி நாடு. மொத்தமே ஒன்றரை கோடிதான் மக்கள் தொகை. ஆனால் உலகத்தையே அவர்கள்தான் மறைமுகமாக ஆள்கிறார்கள். உலகத்தில் உள்ள அனைத்து சிறுவர் கார்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள்தான். அவர்கள் நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை. அங்கு அது தடைசெய்யப்பட்டுள்ளது. உலகத்தில் முதன் முதலாக தற்பொழுது வங்கிகளில் கடன் கொடுக்கும் கடன் வாங்கும் விதத்தை உலகத்துக்கு கற்றுக்கொடுத்தது இவர்கள்தான். உலகத்தில் அதிகம் நோபல் பரிசு வென்றவர்கள் இந்த நாட்டில் தான் மொத்தம் 84 பேர். அந்த நாடு தான் யூதர்களின் இஸ்ரேல். மீள்பார்வை 20.09.2013 ---------------------------------------- முதலில் ?????????? !!!!!!!!!! உங்க அறிவ கண்டு வியக்கேன். "உலகத்தில் உள்ள அனைத்து சிறுவர் கார்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள்தான்." இத எந்த வெப் பேஜ்ல இருந்து சுட்டிங்கப்பா? இல்லாட்டி ஏதும் பேஸ்புக் முகமூடிகள் ஷேயார் செஞ்சத எடுத்து போட்டீங்களா? அபத்தம். உலகில் எத்தனையோ நாடுகள் பல்வேறு மொழிகளில் திரைப்படங்களை தயாரித்து வழங்கிக் கொண்டிருக்க. அதிலும் குறிப்பாக சிறுவர்களுக்கென்றே (அப்படி அடக்கிவிட முடியாது. அனைத்து தரப்பினரும் பார்க்கக் கூடிய) கார்டூன்களை ஏராளமாக காண்கிறோம். அது சிறுவர்களின் உலகம். சிறுவர்களுக்கான திரைப்படங்களை யாரும் வழங்குவதில்லை. (ஈரானிய சினிமாக்களை சிறுவர்களுக்கான சினிமா என்று சொல்லிக் கொண்டு இங்கே வந்தால் - மவனே வெட்டியே போடுவேன்) இன்றைய தேதியில் சிறுவர்களுக்கென்று தயாராகும் படங்களில் முக்கால்வாசிக்கும் மேல் தயாராவதென்னவோ அமெரிக்காவில்தான். இதை மறுக்கவோ புறந்தள்ளவோ முடியாது. Pixar (Wall-E, Up, Finding Nemo, Brave), DreamWorks Animation (Kungfu Panda, Shrek), Blue Sky (Epic, Ice Age), Illumination Entertainment (Despicable Me)... இன்னும் பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். மறுபக்கத்தில் Hayao Miyazaki யின் அற்புதமான காவியங்களையும் நாம் பார்க்கலாம். அந்த நாட்டில் இப்படியான சினிமாக்கள் மறுக்கப்பட்டால் அது அநியாயம் அக்கிரமம். நீங்க என்ன சொல்ல வர்றீங்க? நானே அதுக்கு பதில சொல்றேன். இஸ்லாமிய சினிமா என்று நீங்கள் கருதும் ஈரானிய பலூன்களை சிறுவர்களுக்கும் கொடுக்கலாம் என்று நினைக்கின்றீர்கள். அது ஒரு போதும் நடவாது. சிறுவர் சினிமா அவர்களின் உலகம்... இன்னும் பெரியவர்களால் (எமது) புரிந்து கொள்ளப்படாமல் நசுக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. ஒரு சிறுவனுக்கு Ice Age பிடிக்கும் இன்னொருவனுக்கு Lord of the Rings பிடிக்கும். இதை அளவிட முடியாது... அவர்களின் உலகம் அபாரமான கற்பனைத் திறத்துடன் பென்டஸிகள் நிரம்பியதாக இருக்கும். நாம் அந்த இறக்கைகளை ஒடித்துவிட்டு பாடப்புத்தகச் சுமைகளை ஏற்றுகிறோம். இவ்வாறு உருவான எமது சமூகம் இன்று இலக்கியம், சினிமா, இசை, கலை அழகியல் உணர்வற்று எதையும் ரசிக்க முடியாமல் இறுகிப் போய் இருக்கின்றது. இப்படி பொய்ச் செய்திகளை ஒரு பத்திரிகை பரப்புவது. எந்த அரசியலோ? சமீப நாட்களாக கேட்டுவரும் சிறுவர் கார்டூன்கள் பற்றிய சிலபல மொன்னைத்தனமான பயான்கள் (தப்லீக், தவ்ஹீத்) அமைப்புகள் நடாத்தி காதில் இரத்தம் வந்தது போக இப்போது நீங்களும் ஆரம்பித்து விட்டீர்களா? நடுநிலை சிந்தனை, முற்போக்காளர்கள் என்ற பிம்பம் எங்கே. டக்குனு எடுத்து மாட்டிக் கொண்டு வாங்க. கடைசியாக "ஆனால் உலகத்தையே அவர்கள்தான் மறைமுகமாக ஆள்கிறார்கள்." அஸ்தஹ்பிருல்லாஹ்... இறைவனின் இடத்தில் நீங்கள் இஸ்ரேலை வைக்கின்றீர்கள். இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை. Lafees Shaheed Ramzeen Nizam
Posted on: Sat, 28 Sep 2013 17:17:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015