" குறும்படம், பெரிய படம், - TopicsExpress



          

" குறும்படம், பெரிய படம், ஆவணப்படம் என்று திரைப்படத்தின் எந்த வகையானாலும் அதில் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை. ஒன்று வடிவம் (Form) இன்னொன்று உள்ளடக்கம்(Content) எதை சொல்கிறோம் என்பதை வடிவம் என்றும் எப்படி சொல்லப்போகிறோம் என்பதை உள்ளடக்கம் என்றும் பொருள் பிரித்துக் கொள்ளலாம்". இப்படியொரு கட்டுரையை ஆரம்பித்து நான் எழுதியிருந்தால் எனக்கு இலக்கிய விமரிசனத்தைக் கற்றுத் தந்த பேராசிரியர்கள் அதற்கு மேல் வாசிக்காமல் பூஜ்யம் மதிப்பெண் வழங்கி விட்டுப் போய் விடுவார்கள். இதுவே என்னிடம் மதிப்பீடு செய்வதற்காக வரும் ஆய்வேட்டில் இருந்தால் ஆய்வேட்டைத் ’திருத்தி எழுத வேண்டும்’ எனச் சொல்வதோடு வழிகாட்டியாக இருந்த ஆசிரியரையும் ’கண்டித்து’க் குறிப்பு எழுதி அனுப்பியிருப்பேன். ” எப்படிச் சொல்லப்பட்டுள்ளது என்பதுதான் வடிவத்தைத் தீர்மானிக்கிறது” என்றும் ”என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதுதான் ஒரு படைப்பின் உள்ளடக்கம் “ என்றும் பல தடவை வகுப்பில் பாடம் சொல்லிய பின்பும் தவறாக எழுதினால் பாடம் நடத்திய ஆசிரியருக்குக் கோபம் வருவது நியாயம் தானே. இதையே இலக்கியப் பத்திரிகை என அடையாளப்படுத்திக் கொண்ட பத்திரிகைகளில் எழுதி அச்சிட்டால் யாரும் கேட்க முடியாது; தவறு எனச் சுட்டிக் காட்டினால் பேராசிரியர்களுக்கு வேறு வேலை இல்லை எனக் கோபம் கொள்வார்கள். நமக்கெதற்கு இந்த வீண் வேலையெல்லாம் என்று சும்மா தான் இருந்தேன். ஆனாலும் இந்த முகநூல் என்னைச் சும்மா இருக்க விடவில்லை. ’ஒவ்வொரு நாளும் எதையாவது எழுது’ எனத் தூண்டிக் கொண்டே இருக்கிறது. எனவே இன்றைய நிலைக்குறிப்பாக எதுவும் கிடைக்காததால் இந்த மாத உயிர்மை(ப.70)யில் இருக்கும் அந்த வரிகளையே நிலைக் குறிப்பாகத் தந்து விடுகிறேன். இந்த வரிகளை எழுதிய அருண்மோவையோ, அச்சிட்டு வாசகர்களுக்குத் தந்துள்ள உயிர்மையின் ஆசிரியர் மனுஷ்யபுத்திரனையே குற்றம் குறை எதுவும் சொல்லவில்லை என்றும் சொல்லிக் கொள்கிறேன் : " குறும்படம், பெரிய படம், ஆவணப்படம் என்று திரைப்படத்தின் எந்த வகையானாலும் அதில் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை. ஒன்று வடிவம் (Form) இன்னொன்று உள்ளடக்கம் (Content) எதை சொல்கிறோம் என்பதை வடிவம் என்றும் எப்படி சொல்லப்போகிறோம் என்பதை உள்ளடக்கம் என்றும் பொருள் பிரித்துக் கொள்ளலாம்".
Posted on: Sun, 08 Sep 2013 04:29:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015