கட்டாயம் வைத்திருக்க - TopicsExpress



          

கட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்: மென்பொருட்கள் இல்லாமல் நாம் கணினியை பயன்படுத்தவே முடியாது. நம்முடைய அத்தனை செயல்களும் ஏதோ ஒரு மென்பொருளை சார்ந்தே இருக்கும். இதில் நிறைய மென்பொருட்கள் நமக்கு இலவசமாகவே கிடைக்கின்றன. அதில் சில நமக்கு கட்டாயம் தேவைப்படும் அவற்றைப் பற்றி பார்ப்போம். Browser ப்ரௌசர் என்பது இல்லாமல் நீங்கள் இப்போது இந்த பதிவை படிக்க முடியாது. இணையத்தில் நாம் செயல்பட ப்ரௌசர் ஒரு கட்டாய தேவை. இதில் சிறந்த இரண்டு. 1. Chrome - goo.gl/j11of 2. Firefox - goo.gl/7ICv2 Antivirus அடிக்கடி பென்டிரைவ் அல்லது இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் போது நம் கணினியில் வைரஸ் வர வாய்ப்பு உள்ளது. அம்மாதிரியான தருணங்களில் அவற்றை தடுக்கவோ அல்லது தவிர்க்கவோ ஒரு ஆண்டி வைரஸ் மென்பொருள் தேவை. அவற்றில் சிறந்த இரண்டு. 1. Avast - goo.gl/8Br5g 2. Microsoft Security Essentials - goo.gl/YDpJ7 File Compression Software File Compression Software என்பது நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று. இதில் winzip மற்றும் winrar போன்றவை கட்டண மென்பொருட்கள். இதை செய்ய சிறந்த இலவச மென்பொருட்கள். 1. 7-Zip - goo.gl/CHqRw 2. Zip2Fix - goo.gl/y1m9E Image/Graphics editor, paint program, and picture organizer இமேஜ் எடிட்டர் என்பது நமக்கு அடிக்கடி தேவைப்படும் ஒன்று. இதில் பெரும்பாலான மென்பொருட்கள் நமக்கு இலவசமாக கிடைப்பது இல்லை. ஆனால் சில நமக்கு இலவசமாக பல வசதிகளை தருகின்றன. அவற்றில் சிறந்தவை. 1. Gimpshop - goo.gl/UK9s 2. Paint.NET - goo.gl/59FB 3. IrfanView - goo.gl/59FB 4. Inkscape - goo.gl/q6Sh Multimedia கணினியில் ஓய்வு நேரங்களில் நாம் செய்வது பாடல்கள் கேட்பது மற்றும் படங்கள் பார்ப்பது. அத்தோடு Video Editor, Video Converter போன்றவை தொழில்ரீதியாக உள்ள Multimedia Tools. இதில் சிறந்த இலவச மென்பொருட்கள். 1. VLC media player - goo.gl/oRNqK 2. KM Player - goo.gl/VMzX7 3. Audacity – Free Audio Editor - goo.gl/ARs0 4. Avidemux – Free Video Editor - goo.gl/Uzr2n 5. DVD Video Soft - goo.gl/w6Hhj 6. Free Make Video Converter - goo.gl/Hyb9J Office Tools MS Office க்கு மாற்றாக பல இலவச மென்பொருட்கள் உள்ளன. அவற்றில் சிறந்தவை. 1. MS Officeக்கு மாற்றாக சில இலவச மென்பொருட்கள் - goo.gl/XuiAM
Posted on: Mon, 16 Sep 2013 06:37:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015