சென்னை I I T யில் - TopicsExpress



          

சென்னை I I T யில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வரும் குரு ப்ரகாஷ், சந்தோஷ் குமார், கவின் கார்த்திக் எனும் மூன்று மாணவர்கள் கூகிள் நிறுவனத்தால் ஒவ்வொருவருக்கும் ஆண்டு ஊதியம் ரூ 92 லட்சத்தில் (அதாவது கிட்டத் தட்ட மாத ஊதியம் 8 லட்சம் ரூ) வேலைக்குத் தேர்வு. செய்யப்பட்டுள்ளனர் என்கிற செய்திதான் அது. அப்பா, பெரிய தொகை… நமது சென்னை மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திறமையால் வென்றுள்ளனர். முதலில் அம் மாணவர்கள் மூவருக்கும் நம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம். அம் மாணவர்களில் ஒருவர் கார்த்திக். முன்னாள் கோபாலபுரம் D A V பள்ளி மாணவர். கூகிளின் ‘பணிப் பண்பாடு” (work culture) குறித்து இப்படிச் சொல்லியுள்ளார்: ” கூகிள்ல ‘நன்றி ஆண்டவனே, இது வெள்ளிக்கிழமை’ அப்டீன்னு ஒன்னு இருக்கு. வெள்ளிக் கிழமைகள்ல மதிய சாப்பாட்டுக்குப் பின் யாரும் வேலை செய்ய வேண்டியதில்ல. அங்கே விளையாட்டுகள் உண்டு, regular outings உண்டு. உல்லாசப் பயணங்கள் உண்டு. ஒரு நிறுவனம் உங்களுக்கு இவ்வளவு செய்றப்போ, வேலை செய்றவுங்க அவுங்க முழுத் திறமையையும் காட்டுவாங்க இல்லியா?” தம்பி கார்பொரேட் கலாச்சாரம் குறித்து சரியாகத்தான் சொல்லியுள்ளார். இதெல்லாம் உண்டுதான்.’கை நிறையச் சம்பளம்’, கார்பொரேட்டே திட்டமிட்ட உல்லாசங்கள், வெளி நாட்டுப் பயணங்கள்.. ஆனால் கார்பொரேட்டின் கொள்கைகள் எதையும் நீங்கள் கண்டு கொள்ளக் கூடாது. விமர்சிக்கக் கூடாது. அவர்கள் எதையாவாது ஒட்டுக் கேட்கச் சொன்னால் ஒட்டுக் கேட்கணும். பக்கத்து சீட்டில் அமர்ந்திருப்பவனுக்கு என்ன ஊதியம், அவனுக்கு என்ன பிரச்சினை என்று உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை, அவனை எந்தக் காரணமும் இல்லாமல் வேலையை விட்டு நீக்கினால் ‘அது தப்பு’ன்னு நீங்க வாயைத் திறக்க முடியாது. யூனியன், உரிமைகள்….சீ, எந்தக் காலத்திலடா நீயிருக்கிறாய்? .. இதெல்லாம் எதற்கு? இவற்றால்தானே இந்த நாடு கெட்டுப் போச்சு எனப் பின்னூட்டமிட இதோ சில கார்பொரேட் அடிவருடிகள் காத்திருக்கின்றனர்… மனிதர்களாக இருப்பதற்குத் தானே இதெல்லாம் வேண்டும்? எதற்கு நீ மனிதனாக இருக்க வேணும்? வெள்ளிக் கிழமை மாலை வேலை இல்லையே அது போதாதா உனக்கு? அழகான மனைவி, சொகுசான வீடு, என்னடா உனக்கு அப்புறம்.. தொழிலாளி வர்க்கத்திலிருந்து இப்படி ஒரு labour aristocracy யத் தேர்வு செய்து தொழிலாளி வர்க்கத்திற்கு எதிராக நிறுத்தியதும் இன்று முதலாளியம் கம்யூனிசத்தை “வென்றதன்’ காரணங்களில் ஒன்றாக உள்ளதை நாம் மறந்துவிடலாகாது. ஒரு நூற்றாண்டுகட்கு முன் எழுதப்பட்டதுதான் G K Chesterton ன் The Crime of the Communist எனும் கதை. முதலாளியத்தின் ஊதியக் கொள்கை குறித்து அதில் ஒரு முதலாளிய எடுபிடி சொல்வான்: ” You must remember I am a very vulgar person. I’am not a thinker. I’am only a businessman. think it is aal bosh. You cannot make men as equal and it’s damned bad business to pay them equal; especially a lot of them not worth paying for at all. Whatever it is, you’ve got to take the practical way out. It’s not our fault, because it’s the only way out. it’s not our fault if nature made everything a scramble…” “கடமை அறியோம்… தொழில் அறியோம்.. கட்டென்பதை வெட்டென்போம்…” என்றெல்லாம் உளறினானே அந்தப் பாரதி எத்தனை பெரிய …………………………… நன்றி. மார்க்ஸ் அந்தோனி சாமி.
Posted on: Sat, 28 Sep 2013 16:45:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015