சூப்பர் - TopicsExpress



          

சூப்பர் சமாளிபிகேஷன்: இண்டர் காலேஜ் பெஸ்டிவல் நடக்குது. இதை நடத்துற காலேஜ் பசங்க பாஞ்சாலி சபதம் நாடகம் போடறதா முடிவு பண்ணி அதுக்கு ஒத்திகையும் பாக்கிறாங்க. இது பாய்ஸ் காலேஜ் ஆனதால பாஞ்சாலியா நடிக்கறதும் ஒரு பையந்தான். துச்சாதனன் துகில் உரியற காட்சியில துச்சாதனனா நடிக்கிறப் பையன் சிவப்பு கலர் சாரி வர வரைக்கும் தான் புடவையை இழுக்கணும். அதுக்கு அப்புறம் வெறும் ஆக் ஷன் மட்டும் காமிச்சா போதும். இதுதான் அவங்களுக்குள்ள இருக்கிற அட்ஜஸ்ட்மெண்ட். இந்த பெஸ்டிவல் நடக்கறதுக்கு ஒரு நாள் முன்னால துச்சாதனனா நடிக்கிற பையனுக்கும் பாஞ்சாலியா நடிக்கிற பையனுக்கும் சின்ன சண்டை. அப்பொ துச்சாதனனா நடிக்கிற பையன் மனசுக்குள்ள "இருடா உன்னை வச்சுக்கிறேன்" னு கருவிக்கிறான். அடுத்த நாள் பெஸ்டிவல் ஆரம்பிச்சாச்சு. ஒவ்வொரு காலேஜும் அவங்களோட புரோகிராம நடத்தறாங்க. நம்ம பசங்களோட நாடகமும் ஆரம்பிக்குது. துச்சாதனன் துகில் உரியற காட்சியும் வந்தது. துச்சாதனனா நடிக்கிற பையன் சிவப்பு சாரி வந்த உடனே ஆக் ஷன் காமிக்காம புடிச்சு உருவிடறான். பாஞ்சாலியா நடிக்கிற பையன் ஸ்டேஜ்ல அண்டர்வேரோட நிக்கிறான். ஆடிட்டோரியம்லயா பசங்க ஒரே விசில். உடனே பாஞ்சாலியா நடிக்கிற பையன் ...... "கண்ணா பெண்ணாக இருந்தால்தான் மானபங்கப் படுத்துவார்கள் என்று என்னை ஆணாக மாற்றி விட்டாயே.............நின் கருணையே கருணை. " என்று சொல்ல...................பயங்கர கைத்தட்டல்.......................... எதிலோ படித்தது................. ☯☯☯osmeb.blogspot.in/ ☯☯☯
Posted on: Sat, 06 Jul 2013 08:26:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015