சில வருடங்களுக்கு - TopicsExpress



          

சில வருடங்களுக்கு முன்பு The Guardian இல் ஒரு பேட்டி பார்த்த ஞாபகம். இந்தியா சென்று திரும்பியிருந்த ஒரு டென்னிஸ் வீராங்கனையின் செவ்வி அது. ( சரியாக நினைவில்லை. அது Maria sharapova என நினைக்கிறேன். ஆனால் செவ்வியின் வரிகள் இன்னும் அப்படியே மனதில் இருக்கிறது ) இந்திய பயணத்தில் மறக்க முடியாத அனுபவம் என்ன? என்ற கேள்விக்கு பதில் பின்வருமாறு அமைந்திருந்தது. ஊடகங்கள்தான். நான் செல்லுமிடமெல்லாம் என்னை செவ்வி கண்ட ஊடகவியலாளர்கள் தவறாமல் தொடர்ந்து சில கேள்விகளை கேட்டபடியே இருந்தார்கள். எனக்கு அதிர்ச்சி மட்டுமல்ல ஆச்சர்யமும் கூட. ஒரு விளையாட்டு வீராங்கனையிடம் ஏன் இப்படி கேள்வி கேட்கிறார்கள் என நினைத்தேன். நான் ஏன் நடிகையாகக்கூடாது என்று கேட்டார்கள். அது கூட பரவாயில்லை. எனது அரசியல் பிரவேசம் எப்போது ? என்று கேட்டபோது எனக்கு மயக்கமே வந்துவிட்டது. போதாததற்கு உலகின் சர்ச்சைக்குரிய விடயங்களில் என்னை தீர்ப்பு கூறுமாறு பணித்தார்கள். என்னிடம் கேட்க வேண்டிய - தெரிந்துகொள்ள வேண்டிய டென்னிஸ் தொடர்பான விடயங்களை விடுத்து எனக்கு சம்பந்தமில்லாத விடயங்களை கேட்கவே அவர்கள் முனைந்தார்கள். என்ன முட்டாள்தனம் இது? ஒரு டென்னிஸ் வீராங்கனை எப்படி நடிகையாக முடியும்? ஒரு விளையாட்டு வீரருக்கும் அரசியலுக்கும் எந்த அடிப்படையில் தொடர்பு ஏற்படும் என்று எனக்கு புரியவில்லை என்று ஒரு நீண்ட பதிலாக அது அமைந்திருந்த ஞாபகம். முத்தையா முரளிதனின் அண்மைய கருத்துக்களை ஊடகங்களில் பார்க்கும்போது மேற்படி செவ்விதான் ஞாபகத்திற்கு வந்தது. அந்த டென்னிஸ் வீராங்கனைக்கு தெரிந்த அறம் முரளிதரனுக்கு தெரியவில்லை. அது அவர் தப்பில்லை. நமது ஊடகங்களின் மனநோயை - கிறுக்குத்தனத்தை பயன்படுத்தி அவர் தொடர் வாந்தி எடுத்துக்கொண்டிருக்கிறார். . முரளிதரனின் செவ்வியை பார்க்கும்போதே தெரிகிறது. கிரிக்கெட்டை தவிர வேறு ஒரு கோதாரியும் அவருக்குதெரியாது என்று. இன அழிப்புக்கு வெள்ளையடிக்க பலரை களத்தில் இறக்கிக் கொண்டிருக்கும் சிங்களத்தின் கடைசி இன்னிங்சில் இப்போது இவர் இறக்கப்பட்டிருக்கிறது அப்பட்டமாகவே தெரிகிறது. இதற்கு ஏன் நாம் அலட்டிக்கொள்வான்? எனவே நாம் ஏன் அவருடன் அரசியல் கதைக்க வேண்டும்.? எனவே எனது அறிவுக்குபட்டவரை முரளிதரனிடம் அவரது துறை சார்ந்து கேட்கப்படவேண்டிய ஒரு கேள்வி இன்னும் கேட்கப்படாமலே இருக்கிறது. அதைக் கேட்போம். அது இதுதான். நீங்கள் எறிபந்தை வீசியும் ஒரு சுழற்பந்து வீச்சளாராக வலம் வரும் மர்மம்தான் என்ன?
Posted on: Wed, 20 Nov 2013 11:34:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015