சிவபெருமான் - TopicsExpress



          

சிவபெருமான் நகத்துதித்த காலத்தின் காலபைரவரே நான்முஹனின் கபாலமதைக் கையில் கொண்டவரே சர்ப்பமே அணிகொண்ட ஸ்வர்னாகர்ஷண பைரவரே எட்டுத்திக்கின் காவல் தெய்வமாகிய அஷ்டபைரவரே -கோ.நந்தகுமார்...42 ---------------------------------------------------------------------------- Transliteration : ஒலிபெயர்ப்பு Sivaperumāṉ nakathutitha kālathiṉ kālabairavarē Nāṉmuhaṉiṉ kapālamathaik kaiyil koṇdavarē Sarppamē aṇikoṇṭa svarṉākarṣhaṇa bairavarē Eṭṭutthikkiṉ kāval deyvamākiya aṣhṭabairavarē -kō.Nandakumār...42 ---------------------------------------------------------------------------- Translation : மொழிபெயர்ப்பு Originated from the nail of Siva as times Terminator Who plucked & have in hand one skull of the Creator Wearing Serpent ornaments & gold attracting vairava On guard as protector of 8 directions Ashta-Bairava! -Dr.G.Nandakumar...42 ---------------------------------------------------------------------------- Bhairava (Sanskrit: भैरव, (Terrible or Frightful), sometimes known as Kala Bhairava, is the fierce manifestation of Shiva associated with annihilation. The origin of Bhairava can be traced to the conversation between Brahma and Vishnu recounted in the Shiv Mahapuran where Vishnu asked Brahma who is the supreme creator of the Universe. Arrogantly, Brahma tells Vishnu to worship him because he (Brahma) is the supreme creator. One day Brahma thought, I also have five heads, Shiva also has five heads. I can do everything whatever Shiva does and therefore I am Shiva Brahma had become a little egoistic. Not only he had became egoistic, he started to forge the work of Shiva. Brahma started interfering in what Shiva was supposed to do. Then Mahadeva threw a small nail from His finger which assumed the form of Kala Bhairava, and casually went to cut the head of Brahma. The skull of Brahma is only in the hands of Kala Bhairava; Brahma Kapala in the hands of Kala Bhairava and Brahma’s ego was destroyed and he became enlightened. Then onwards he became useful to himself and to the world and deeply grateful to Shiva. In the form of the Kaala Bhairava, Shiva is said to be guarding each of these Shaktipeeths. Each Shaktipeeth temple is accompanied by a temple dedicated to Bhairava. He is depicted ornamented with a range of twisted serpents, which serve as earrings, bracelets, anklets, and sacred thread (yajnopavita). He wears a tiger skin and a ritual apron composed of human bones. Bhairava has a dog (Shvan) as his divine vahana (vehicle). Bhairavi is a fierce and terrifying aspect of the Devi who is virtually indistinguishable from Kali, with the exception of her particular identification as the consort of Bhairava. Bhairava himself has eight manifestations i.e. Ashta Bhairava: Asithaanga Bhairava Ruru Bhairava Chanda Bhairava Krodha Bhairava Unmattha Bhairava Kapaala Bhairava Bheeshana Bhairava Samhaara Bhairava Kala Bhairava is conceptualized as the Guru of the planetary deity Shani (Saturn). Bhairava is known as Bhairavar or Vairavar in Tamil where he is often presented as a Grama devata or village guardian who safeguards the devotee on all eight directions (ettu tikku). As Bahirawa, he protects treasures. Lord Bhairava is the main deity worshipped by the Aghora sect. ------------------- வைரவர் : ------------------- சிவபெருமானின் பஞ்ச குமாரர்களில் பைரவரும் ஒருவர். பைரவர் என்பதற்கு மிகவும் பயங்கரமானவர் என்பது பொருள். எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை நாடுபவர்களுக்கு அருள் செய்வதால் பைரவர் என்பது பெயராயிற்று. காலபைரவர் பாம்பைப் பூணுலாகக் கொண்டு, சந்திரனை சிரசில் வைத்து, சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருவார். காசி நகரமே பைரவரின் பிரதான தலம். இந்நகரின் பல்வேறு இடங்களிலும் பைரவர் கோயில்கள் உண்டு. காலமே உருவான பைரவரின் திருவுருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளன. தலையில் மேஷ ராசியும், வாய்ப் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப் பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் மகரமும், தொடையில் தனுசும், முழந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளன. பைரவர் நீலமேனி கொண்டவராய், சிலம்புகள் அணிந்த திருவடியைக் கொண்டவராய், பாம்புகள் பொருந்திய திருவரையும் மண்டை ஓட்டு மாலைகள் புரளும் திருமார்பும், சூலம், பாசம், உடுக்கை, மழு முதலியன தாங்கிய திருக்கரங்களை உடையவராய் கூறப்பட்டாலும் அஷ்டபைரவர் வடிவங்களாகக் கூறும்போது அவரின் வண்ணம் ஆயுதம், வாகனம் இவை மாறுபட்டுக் காணப்படும். பைரவரின் பொதுவான வாகனம் ஒற்றை நாய். நகரத்தார் கோயில்களில் பைரவர் வடிவத்தில் பெரும்பாலும் இரு நாய் வாகனங்கள். திருவான்மியூர், போரூர், வேதாரண்யம், திருவிற்கோலம் ஆகிய தலங்களில் நாய் வாகனம் இல்லை. அஷ்ட பைரவ வடிவங்களில் அன்னம், ரிஷபம், மயில், கருடன், குதிரை, யானை, சிம்மம், நாய் ஆகியவை வாகனங்களாகக் காட்டப்பட்டுள்ளன. பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினங்களில் பைரவ விரதம் இருந்து வழிபட்டால் எந்தத் துன்பமும் நம்மை அணுகாது. அந்த வகையில் ஒவ்வொரு அஷ்டமி திதிக்கும் ஒரு பெயர் உண்டு. இதில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி ருத்ராஷ் டமி என்றும் காலபைரவாஷ்டமி என்றும் சொல்லப்படுகிறது. சிவபெருமான் வீரச்செயல் களைச் செய்யும் காலங்களில் ஏற்கும் திருவுருவங்களை பைரவர் திருக் கோலம் என்று புராணம் சொல்லும். அகில உலகங்களையும் காத்து ரட்சிக்கும் சிவனாரின் கோயில்களுக்கு பைரவரே காவல் தெய்வம். உலகையும் அதில் அமைந்த திருத்தலங்கள் மற்றும் தீர்த்தங்களையும் காவல் புரியும் தெய்வம் ஆதலால், ÷க்ஷத்ரபாலகன் என்றும், தீர்த்தபாலகன் என்றும் பைரவரை பலவாறு போற்றுகின்றன புராணங்கள். ஞானிகளிடம் அறிவை வளர்க்கும் ஞான பைரவராகவும், யோகிகளுக்குக் காவலாக இருப்பதுடன், தாமே பெரிய யோகியாக விளங்கி யோக பைரவராகவும், வீரர்களிடம் உக்கிர பைரவராகவும், பஞ்சபூதங்களின் சீற்றங்களில் இருந்து பூமியைக் காப்பதால் பூத பைரவராகவும் கருதப்படுகிறார். --------------------------- அஷ்டபைரவர் : --------------------------- 1)அசிதாங்க பைரவர் பிராம்மி 2)ருரு பைரவர் மகேஸ்வரி 3)உன்மத்த பைரவர் வாராஹி 4)குரோதன பைரவர் வைஷ்ணவி 5)சண்டபைரவர் கவுமாரி 6)கபால பைரவர் இந்திராணி 7)பீஷண பைரவர் சாமுண்டி 8)சம்ஹார பைரவர் சண்டிகா --------------------------------------------------- -கோ.நந்தகுமார். (Dr.G.Nandakumar.)
Posted on: Fri, 24 Oct 2014 14:47:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015