”சரீர பலத்தை சதா - TopicsExpress



          

”சரீர பலத்தை சதா உபயோகித்து கஷ்டமான தொழில் செய்பவர்கள் கண்டிப்பாய் 100க்கு 90 பேர்கள் கள் குடிக்காமல் இருக்கவே மாட்டார்கள். இதற்கு தோழர் காந்தியார் வாக்கே ஆதாரமாகும். அதாவது 1931ஆம் வருடம் ஜுன் மாதம் 12ம் தேதி தோழர்கள் காந்தியார், பட்டேல், முஸ்லிம் காந்தி ஆகிய அப்துல்கபார்கான் ஆகியவர்கள் பரோடா சமஸ்தானத்தில் சென்றிருக்கையில் மதுவிலக்கு சம்பந்தமாய் அவர்களது வரவேற்பில் எழுந்த பிரச்சனைக்கு பதிலளிக்கும் போது காந்தியார் கூறியதாவது, “கதர் இல்லாமல் வெறும் மதுவிலக்கு ஒருநாளும் வெற்றி பெறாது. கள்ளு, சாராயக் கடைகளை மூடி விடுவது நம்முடைய வேலையல்ல. கள்ளு, சாராயக் கடைகள் மூடப்பட்டு விட்டாலும் இப்போது இருப்பதைப் போலவே திருட்டுத் தனமாய் கள் குடியும், சாராயக் குடியும் நடந்து கொண்டுதான் இருக்கும். குடி வழக்கம் நிற்க வேண்டும் என்றால் குடிகாரர்களுக்கு இலகுவான கைத்தொழில் கற்றுக் கொடுத்தால் தான் நிறுத்த முடியும். இல்லையாகில் அவர்கள் தாங்கள் குடிக்கும் வழக்கத்தை ஒரு நாளும் விட மாட்டார்கள். பெரிய தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தங்களது களைப்பையும், ஆயாசத்தையும் தீர்த்துக் கொள்ள மதுபானம் வேண்டியதாய் இருக்கிறது. நான் தென்னாப்பிரிக்காவில் இருந்தபொழுதும் வேலை செய்து களைத்துப் போனவர்களுக்கும் வெகு அன்புடன் சாராய வகைகள் வாங்கிக் கொடுத்து வந்திருக்கிறேன். அங்கு (தென்னாப்பிரிக்காவில்) என்னுடன் இருந்த கூலிகளுக்கும் அவர்கள் சாராயம் கேட்ட பொழுதெல்லாம் நானே கடைக்குப் போய் சாராய வகைகளை வாங்கி வந்து பிரியமாக கொடுத்திருக்கிறேன். மிருகங்களைப் போல் வேலை செய்யும் உழைப்பாளிகளுக்கு மது பானங்கள் அவசியமாய் வேண்டியிருக்கிறது” என்று கூறியிருக்கிறார். இந்த விதமான நிர்பந்தத்தையும் அவசியத்தையும் பெற்ற சாதனமான மதுவை ஒரு உத்தரவில் ஒரு நாளில் நிறுத்திவிடுகிறேன் என்பது அறிவுடைமையும் அனுபவ ஞானமுடைமையும் ஆகுமா என்று கேட்கிறோம்” (குடியரசு 3.10.37) sugunadiwakar.blogspot.in/2010/09/blog-post.html SPEECH AT MAROLI ,June 12, 1931 Mahatma Gandhi laid the foundation of the building of a Weaving School, started by Miss Mithubehn Petit. Addressing a big public meeting, he said that if he had been told ten years ago that Miss Mithubehn Petit, who belonged to a celebrated Parsi family of Bombay, would roam day and night in the villages barefooted and dressed in coarse khaddar, regardless of the heat and cold, to work among the poor people and teach their children spinning, weaving and other industries, he (Mr.Gandhi) would not have believed it. Althought he had appreciated the work of Parsis,even when the campaign of prohibition was launched, he had thought that prohibition alone would not succeed without propagation of khaddar. The closing of liquor shops was not the principal thing. If drunkards did not give up the habit of drink, they would prepare illicit liquor and there would be illicit sale of liquor as at present. Drunkards would not give up drink till they were taught some industry.Workers working in big factories required something to be relieved of the fatigue.The speaker, who had never tasted liquor, had affectionately given liquor to the exhausted in South Africa. The Kolis, who were with him, demanded liquor, and the speaker brought liquor from a canteen-keeper and gave it to them. Men who were made to work like beasts would require liquor, but those working in a peaceful atmosphere in their homes could easily give up drink. Page 324 Vol 52 Collected Works of Mahatma Gandhi gandhiserve.org/e/cwmg/cwmg.htm
Posted on: Mon, 26 Aug 2013 18:03:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015