டெண்டுல்கரின் பிரிவு - TopicsExpress



          

டெண்டுல்கரின் பிரிவு உபசார பேச்சை கேட்டேன். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த சச்சின் எவ்வளவு அழகாக ஆங்கிலம் பேசுகிறார்! ஒவ்வொருவரையும் நினைவு படுத்தி பேசினார். நடு நடுவே, பேச முடியாமல் எமோசனல் ஆனார். அவரது வாழ்வில் அவரது மனைவியின் பங்கையும், ஆதரவையும் சொல்லும் போது அவரது மனைவி கண் கலங்கினார். பார்த்த எனக்கும் கண் கலங்கியது... எனக்கு புரியாதது ஒன்றே ஒன்று தான்... ரஜினி, கமல் உணர்ச்சிகரமாக பேசினால் கண் கலங்குகிறது.... கலைஞர் கைது செய்யப்பட்ட போது, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் அவர் குரல் தழு தழுத்த போது, அழாதீர்கள் தலைவா என பல குரல்கள் கேட்டது... இப்போது சச்சினின் பிரிவுக்கு கண் கலங்கிகொண்டு இருக்கிறோம்..! நாம் அனைவரும் எமோசனல் இடியட்ஸ் என்று ஒரே வார்த்தையில் அடங்கி விடுகிறோமா? இந்த கண்ணீர் எல்லாமே நம்மை விட பெரியவர்கள் அல்லது திறமையானவர்களுக்கு தானா? நம் சக மனிதர்களுக்கா இங்கே எத்தனை பேர் கண்ணீர் சிந்துகிறோம்.. அல்லது அவர்களுக்காக குறைந்தபட்சம் பக்கத்தில் பேசவாவது செய்கிறோம்? பதில் கூற விரும்பினால் கூறுங்கள்... இல்லையென்றால், கமெண்டில் இருக்கும் சச்சின் வீடியோவை பார்த்து நீங்களும் கண் கலங்கலாம்! ;-)
Posted on: Sun, 17 Nov 2013 10:14:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015