தமிழ்நாட்டில் - TopicsExpress



          

தமிழ்நாட்டில் கைத்தட்டல்களுக்காக மட்டுமே பேசுவதற்கு அரசியல்வாதிகள் மட்டுமல்ல பெரும்பாலும் அனைத்து மேடைப் பேச்சாளர்களும் எழுத்தாளர்களும் ஆளாகிப் போனார்கள். பட்டிமன்றங்கள் சரியான ஒரு கருத்தை வெளிக் கொண்டு வருவதற்கான ஒரு விவாத மேடை என்ற நிலையில் இருந்து திரிந்து தடுமாறி, எந்த மோசமான கருத்தையும் இரண்டு மூன்று பேர் சப்பைக் கட்டுக்கட்டி சரியானது போல தூக்கிப் பிடித்துச் சரியானது போலக் காட்டவேண்டும் என்னும் போக்கு வளர்ந்து விட்டது. அதுபோலவே இந்த முகப் புத்தகத்திலும் நிறைய ‘லைக்ஸ்’ நிறைய ‘கமெண்ட்ஸ்’ பெறவேண்டும் என்பதற்காக தான் நெஞ்சில் சரியானதென்று நினைப்பதைக்கூட மறைத்துக் கொண்டு பிறர் நம்மை மெச்ச வேண்டும் என்பதற்காகவே, என்பதற்காகவே தவறானதைக்கூடத் துணிந்து முன்மொழிந்து கருத்துக்கள் பகிர்வதைக் காண்கிறோம். திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கும் முன்னர் “தன் நெஞ்சறிவது பொய்யற்க” என்று சொல்லியதையும் புறந்தள்ளி விட்டு திருவள்ளுவருக்க ு 2000 ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்த கற்கால மனிதரைப் போல சிலர் கருத்து வெளிபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். தான் சரியென்று நினைப்பதைக்கூட வெளிப்படையாகப் பேசமுடியாத, நெஞ்சில் பட்டதை நேராய்ச் சொல்லமுடியாத “நேர்படப் பேசு” என்றுரைத்த பாரதிக்கும் 100 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவர்களாய்த ்தான் பெரும்பாலோர் பிதற்றுவதை காண்கிறோம். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு உயர்கல்வித்துற ஆடை கட்டுப்பாடு கொண்டுவந்திருப் பதை விமர்சித்தும் கண்டணம் தெரிவித்தும் சிலர் கருத்துக்கள் வெளியிடுவதைப் பார்க்கும் போதும் இப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது. அரசு எடுக்கும் எந்த முடிவையும், தான் ஒரு சமூக அக்கறையுள்ள இந்தச் சமூகத்தின் உறுப்பினர் என்ற நோக்கில் அணுகாமல், தான் சார்ந்திருக்கும் அரசியல் கட்சியின் உறுப்பினர் / அரசியல் சித்தாந்ததின் பாதுகாவலர் என்ற நோக்கிலேயே பார்ப்பதும் எதிர்ப்பதும் ஒரு ஆரோக்கியமான சமூகச் சூழல் நிலவுவதற்கும் அரசியல் பண்பாடு வளர்ச்சி பெறுவதற்கும் வாய்ப்பில்லாமல் செய்துவிடும். I see the prevalence of Snobbery at its worst stage in Tamil Nadu which is not a good sign of intellectual society. There is a Dress Code in every society, organisation, institution etc. as to the occasion, function, place and so on even in the ultra modern west world. More over those people of the west world do so for the simple reason they need an inducement for each and every thing. But our people, the sons of our soil are so fiery, sharp and clever in every thing. It is sorry to note that People claim to be Progressive are so instant in expressing very generalized views floating on upcoming new waves without any analytic approach and mind. They limit their views to their own convenience with self centered interest without foresight for the betterment of the society.Let us try to inculcate a culture to think cutting across party political lines and on issue to issue basis. Friends, do contemplate on my random thoughts and reconsider your views.
Posted on: Thu, 05 Sep 2013 10:34:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015