நடிகர் கார்த்தி - TopicsExpress



          

நடிகர் கார்த்தி அவர்களே... உங்ககிட்ட ஒரேயொரு கேள்வி? “இதையெல்லாம் எப்போ நிறுத்துவீங்க?” சூப்பர் ஸ்டாரோட ரொம்ப பிரபலமான #அலெக்ஷ்பாண்டியன் கேரக்டர் பேரை பட டைட்டில் ஆக வைக்குறது, காமெடி மன்னன் கவுண்டமணி’யோட உலக ஃபேமஸ் #ஆல்_இன்_ஆல்_அழகுராஜா கேரக்டர் பேரை பட டைட்டில் ஆக வைக்குறது.... ஒரு படத்துல #காட்டுப்பூச்சி காமெடி கூட்டணி ஹிட் ஆன ஒரே காரணத்துக்காக, தொடர்ந்து 4 நாலு படத்துல சந்தானத்தை நம்பி நிறைய காட்சிகள் வைக்குறது.. எப்போ பார்த்தாலும், எந்த சீன் ஆக இருந்தாலும் 32 பல்லும் தெரியுறமாதிரி சிரிச்சுட்டே இருக்குறது... இன்னைக்கு வரைக்கும், #பருத்திவீரன் பாடி லாங்குவேஜ்’லேயே நிறைய டயலாக் பேசுறது.. எல்லா படத்திலுமே உங்க கேரக்டர் மட்டும் அதிபுத்திசாலியாக இருக்குறது... #சிறுத்தை’ன்னு ஒரேயொரு ‘மாஸ்’ ஆக்ஷன் படம் தந்த ‘ஹிட்’ நம்பிக்கையில, எல்லா பெரிய நடிகர் கூடயும் மோதி bulb வாங்குறது.. #STUDIO_GREEN’ஐ மட்டுமே நம்பி படம் ரிலீஸ் பண்றது... உங்க கம்பெனி (Studio Green) படம் கூட எந்த படம் ரிலீஸ் ஆனாலும், அதை ரிலீஸ் பண்ணாவிடாம தடுக்குறது (#சமர் – பொங்கல் 2013)... இல்லாவிடில், முடிஞ்ச வரையும் தியேட்டர் எண்ணிக்கையை குறைக்குறது (#விஸ்வரூபம் – பொங்கல் 2013, #ஆரம்பம் – தீபாவளி 2013)... இதையெல்லாம் எப்போதான் நிறுத்தலாம்ன்னு இருக்கீங்க...?? இல்லைன்னா, இதெல்லாம் உங்களுக்கு பெரிய விஷயமாகவே தெரியலையா?? இதையெல்லாம் முன்னாடியே கேட்கணும்னு தோணினாலும், கேட்கல... இப்போ கேட்குறதுக்கு ஒரே காரணம், உங்களோட கடைசி இரண்டு படங்கள் தான்.. #அலெக்ஷ்பாண்டியன்_, #AAA_ராஜா... முழுக்க முழுக்க சந்தானம் காமெடி, காஜல் அகர்வாலின் தொப்புளை மட்டும் நம்பி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் உங்களுக்கு என்னதான் வேலை? இந்த படத்தில் நீங்கள் நடித்தால் என்ன, யார் நடித்தல் என்ன? 100 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்து தியேட்டருக்கு வர்ற ஒரு ரசிகனைப் பத்தி, நீங்க உங்க மனசுல என்ன நெனச்சுட்டு இருக்கீங்கன்னு தெரியல.. எங்களை மாதிரி middle class, upper class ரசிகனை எல்லாம் கூட விட்டுத்தள்ளுங்க.. ஆனா, நம்ம நாட்டுல தீபாவளி, பொங்கலுக்கு மட்டுமே லீவு கிடைச்சு தியேட்டருக்கு வந்து படம் பாக்குற பாமர ரசிகன் கூட இருக்கான்; அப்படி பண்டிகை நாள்’ல 10 ரூபாய்க்குக் கூட worth இல்லாத இந்த மாதிரி குப்பை படத்தை எல்லா தியேட்டர்’லயும் ரிலீஸ் பண்ணிங்கன்னா ஒரு ரசிகன் எவ்வளவு ஏமாந்து போவான், கடுப்பு ஆவான்? நியாயமாகப் பார்த்தா, நீங்கள்லாம் இந்த ரெண்டு படம் பார்த்த ஒவ்வொரு ரசிகன் வீட்டுக்குப் போய் டிக்கெட் காசைத் திருப்பித் தர்றதுதான் மனுஷத்தனம். மத்த எத்தனையோ நடிகர்கள் மொக்க படம் நடிக்குறாங்க, ஏன் கார்த்தியை மட்டும்ன்னு கேட்டீங்கன்னா... கார்த்தி-Studio Green படங்கள் ரிலீஸின் பொழுது, தியேட்டர்கள் block செய்யப்படுவதைப் போல, பட ரிலீசுக்கு பல நாள் முன்னரே டி‌வி – ரேடியோ - நியூஸ்பேப்பர் – முக்குச்சந்து போஸ்டர் வரை எல்லா இடத்திலும் எக்கச்சக்க விளம்பரம் செய்வது போல வேறு எந்த நடிகரின் படத்திற்கும் தமிழ் சினிமா வரலாற்றிலேயே கண்டிருக்க முடியாது. வெளியாவதற்கு முன்னரே நீங்கள் நடித்த ஒரு படம் கேவலமாக இருக்கிறது எனத் தெரிந்தால், நஷ்டமாகிவிடும் எனத் தெரிந்தால் நஷ்டமாகிவிட்டுப் போகட்டுமே; அதை விட்டுவிட்டு, விளம்பரம் மூலம் மட்டுமே ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வந்துவிடலாம் என நினைப்பதும், லட்சக்கணக்கான மக்களின் 100 ரூபாய் நஷ்டமானால் பரவாயில்லை என நினைப்பதும் கெட்ட கேவலம். ஒரு நடிகனாக #பருத்தி_வீரன், #ஆயிரத்தில்_ஒருவன் போன்ற படங்களில் உங்களை நிரூபித்திருந்தாலும், அதைத் தவிர #நான்_மகான்_அல்ல என்றவொரு படத்தில் மட்டுமே உங்கள் நடிப்பு ரசிக்கும்படி இருந்தது. #சிறுத்தை படம் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக நீங்கள் நிரூபித்திருந்தாலும், இன்று வரை சூர்யா-சிவகுமார் குடும்ப ஸ்டார் என்ற அடையாளம் மற்றும் எல்லா படத்தையும் STUDIO GREENஇன் தியேட்டர் பலத்தாலேயே ரிலீஸ் செய்வது என ஒரு செல்வாக்கு நிழலிலேயே, தேவையே இல்லாத விளம்பரம் கொண்டு வளரும் நடிகர் #கார்த்தி என்பதும் மறுக்க முடியாத, நிதர்சனமான உண்மை. #சகுனி திரைப்படம் ரிலீஸ் ஆன சமயத்தில், ‘THE NEW SOUTH INDIAN BOX OFFICE KING’ என்று உங்களை நீங்களே அழைத்துக் கொண்டதெல்லாம் உச்சக்கட்ட கொடுமை! உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா, இல்லையா என்று தெரியவில்லை. எல்லா நடிகருக்கும் haters கண்டிப்பாக உண்டு, அது சூப்பர் ஸ்டார் ஆக இருந்தாலும் உலகநாயகன் ஆக இருந்தாலும்; ஆனால், இன்றைய தேதியில் எந்த நடிகருக்கு அதிக haters உண்டு என ஒரு சர்வே எடுத்தால
Posted on: Mon, 04 Nov 2013 06:49:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015