பாகிஸ்தான் மீண்டும் - TopicsExpress



          

பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்! இன்று மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் பூஞ்ஜ் பகுதியில் இந்திய ராணிவத்தினர் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது, நடப்பு ஆண்டில் மட்டும் 82 முறைக்கும் மேலாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியுள்ளது. இதுகுறித்து தொடர்ந்து மக்களவையில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தாலும் எந்த வித பேச்சுவார்த்தைக்கும் மத்திய அரசு முன்னெடுத்து செல்வதாக தெரியவில்லை. பாகிஸ்தான் அரசோ பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு பயந்து இரண்டு தீவிரவாதிகளின் மரண தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது, இது பாகிஸ்தான் அரசு சுயமாக மக்கள் நலனை குறித்து எந்த முடிவும் எடுப்பதில்லை என்றே காட்டுகிறது. பயங்கரவாதிகளின் பிடியில் இருக்கும் பாகிஸ்தான் அரசு, அவர்கள் தூண்டுதலின் பேரிலே இந்திய ராணுவத்தினர் மீது அத்துமீறி தாக்குதல் நடத்துவதை ஊக்குவித்தும், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது போலவே தோன்றுகிறது. இன்னும் மத்திய அரசு மெளனம் காத்தால் இந்தியாவின் பெரும் பகுதியை நாம் இழக்க வேண்டியிருக்கும்.
Posted on: Tue, 20 Aug 2013 09:05:02 +0000

Recently Viewed Topics




© 2015