பெண்களே நீங்கள் மிகவும் - TopicsExpress



          

பெண்களே நீங்கள் மிகவும் கவனமாக இருங்கள் நீங்கள் அசையும் ஒவ்வொரு அசைவையும் புகைப்படம் எடுக்க ஒரு கூட்டமே இருக்கிறது... பொது இடங்களில் பெண்கள் நடக்கும் பொழுதும் பின்னாலேயே புகைப்படம் எடுக்கும் கருவியும் தெடர்கிறது. வேலைவெட்டி இல்லாத பைத்தியகாரர்கள் இந்த நாச வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள்... மிகவும் கவனமாக நடந்து கொள்ளுங்கள் உடுத்திக்கொள்ளும் துணி சற்று நகர்த்தல் போதும் உடனே புகைப்படம் எடுக்கும் கருவி இயங்க ஆரம்பித்துவிடும். சில முகநூல் தளங்களில் அப்பாவி பெண்களின் புகைப்படங்கள் தாறுமாறாக எடுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. பசியால் அழுது கொண்டு இருக்கும் பிள்ளைக்கு பால்கொடுக்கும் தாயை மறைந்து இருந்து புகைப்படம் எடுத்தவனும் முகநூலில் உலாவுகின்றான் கன்னிப்பெண்களை சும்மவிடுவானா? உங்கள் கைபேசிகளை யாரிடமும் தரவேண்டாம் கைபேசி பழுது பட்டால் திருத்த கொடுக்கும் பொழுது மறந்துவிடாமல் memory card அகற்றி விட்டு கொடுங்கள்... உங்கள் அறியாமையே மற்றவர்களின் பலம் இதை கருத்தில் கொண்டு செயல்படுங்கள். -Salem Mani
Posted on: Fri, 23 Aug 2013 04:06:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015