பவர்பாய்ண்ட்: சில - TopicsExpress



          

பவர்பாய்ண்ட்: சில ஷார்ட்கட் கீகள் Ctrl + Shift + D: என்ற கீகள் அப்போது காட்டப்படும் ஸ்லைடின் டூப்ளிகேட் காப்பி ஒன்றை ஏற்படுத்தும். Ctrl + M: புதிய ஸ்லைட் ஒன்று செருகப் படும். ஸ்லைட் லே அவுட்டினைத் தேர்ந்தெடுக்க சந்தர்ப்பம் தரப்படும். Ctrl + K: ஆகிய கீகள் லிங்க் தொடர்பு ஒன்றை இடைச் செருக விண்டோ ஒன்று திறக்கப்படும். Page Up கீ உங்களை ஒரு ஸ்லைட் பின் நோக்கிக் கொண்டு செல்லும். Page Down கீ உங்களை ஒரு ஸ்லைட் முன் நோக்கிக் கொண்டு செல்லும். ஸ்லைட் ÷ஷாவினை இயக்கிக் கொண்டிருக்கையில் Enter அல்லது Down Arrow அல்லது N உங்கள் ஸ்லைட் ÷ஷாவில் ஒரு படி முன்னோக்கி செல்லும். Backspace அல்லது Up Arrow அல்லது P உங்கள் ஸ்லைட் ÷ஷாவில் ஒரு படி முன்னோக்கி செல்லும். Esc கீ உங்கள் ஸ்லைட் ÷ஷாவினை முடித்துவைக்கும். B கீ ஒரு கருப்பு திரையைக் காட்டும். அதே கீ கருப்பு திரையை விலக்கும். W கீ ஒரு வெள்ளை திரையைக் காட்டும். அதே கீ வெள்ளை திரையை விலக்கும். ஒரு எண்ணை அழுத்தி என்டர் தட்டினால் அந்த எண்ணுடைய ஸ்லைடுக்கு அழைத்துச் செல்லப் படுவீர்கள். இந்த ஷார்ட் கட் கீகள் கொஞ்சம் தான். ஸ்லைட் ÷ஷாவினை இயக்கிய பின் F1 கீயை அழுத்துங்கள். உங்கள் பயன்பாட்டிற்காக கீ போர்டு ஷார்ட் கட் கீகள் பட்டியல் உங்களுக்குக் கிடைக்கும். அன்புத்தோழி, உங்கள் காவ்யாஞ்சலி…
Posted on: Thu, 14 Nov 2013 11:30:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015