முடக்கத்தான் கீரை - TopicsExpress



          

முடக்கத்தான் கீரை பொடி முடக்கத்தான் கீரை ஒரு கட்டு, நன்றாக அலம்பி இலைகளை மட்டும் ஆய்ந்து நிழல் உலர்த்தலாக ஒரு மணிநேரம் வரை உலர்த்தி வைக்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு, இரண்டு டேபிள் ஸ்பூன் முழு உளுந்து, ஆட்காட்டி விரல் நீளம் அளவு புளி, ஏழு-எட்டு வத்தமிளகாய், எண்ணெய் விடாமல் வெறும் வாணலியில் தனித் தனியாக பொன்னிறத்துக்கு வறுத்து ஆறவைக்கவும் ஒரு டீஸ்பூன் கல் உப்பு சேர்த்து மிக்சியில் பொடி செய்து கொள்ளவும். தேவைப்பட்டால் அலம்பி நிழல் உலர்த்தல் உலர்த்திய கருவேப்பிலை கூட சேர்த்து செய்து கொள்ளலாம். முடக்கத்தான் கீரை ரொம்ப கசக்கும் என்பதால், கசப்பு கொஞ்சம் மட்டுபடும் மேலும் கருவேப்பிலை வாசனை நன்றாக இருக்கும். தினசரி உணவுக்கு முன் ஒரு கைப்பிடி சுடும் சாதத்தில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, இந்தப் பொடியை கலந்து சாப்பிடலாம். இந்தப் பொடி எண்ணெய் சேர்க்காமல் வறுத்து செய்வதால், டப்பாவில் போட்டு fridge-ஜில் வைத்து இரண்டு வாரம் வரை உபயோகப்படுத்தலாம். முதுகு தண்டுவடம் தேய்ந்து அல்லது வலி, தோள்பட்டை/கழுத்து எலும்புகளில் வலி, மெனோபாஸ்சிற்கு பிறகு பெண்களுக்கு ஏற்படும் bone density குறைபாடுகள், மூட்டு எலும்பு சம்பந்த நோய்களால் உண்டாகும் உபாதைகள் குறையும். முதல் ஒன்று இரண்டு நாட்களுக்கு சிலருக்கு பேதி ஆகலாம். அதனால் ஆரோக்கியத்துக்கு எந்த பாதிப்பும் வராது. -ஆரோக்கியமான வாழ்வு
Posted on: Thu, 08 Aug 2013 13:39:57 +0000

Recently Viewed Topics




© 2015