முஹம்மதுவின் வஹி பற்றி - TopicsExpress



          

முஹம்மதுவின் வஹி பற்றி இஸ்லாமிய நம்பிக்கை: 1) இஸ்லாமியர்களின் படி முஹம்மது ஒரு தீர்க்கதரிசி ஆவார். 2) இவருக்கு இரண்டு வகையான வஹிகளை (வெளிப்பாடுகளை) அல்லாஹ் கொடுத்தார். 3) முதல் வகை வஹி - ஜிப்ராயீல் தூதன் குர்-ஆனை முஹம்மதுவிற்கு ஓதிக் காண்பிப்பார், அதனை முஹம்மது மக்களுக்கு ஒதிக்காண்பிப்பார், அதுவே குர்-ஆன். 4) இரண்டாவது வகையான வஹியை யார் கொண்டு வந்தார்கள் என்று தெரியாது, ஆனால் அதனை முஹம்மது பெற்று, அதன் படி தான் மற்றவர்களுக்கு கட்டளைகளை கொடுத்தார், தானும் அந்த வஹியின் படியே வாழ்ந்து காட்டினார். அதாவது, முஹம்மதுவின் பேச்சும், செயல்களும் இரண்டாவது வஹியின் படியே இருந்தது. சண்டைக்குச் செல்லும் படி, முஹம்மது சஹாபாக்களுக்கு கட்டளை கொடுத்தால், இவருக்கு அல்லாஹ்விடமிருந்து இரண்டாவது வகையான வஹி ஏற்கனவே வந்துள்ளது என்று பொருள். இதனை அடிப்படையாகக் கொண்டு முஹம்மது சஹாபாக்களை போருக்கு செல்லும் படி, குறைஷிகளின் வியாபாரிகளை தாக்கி, அவர்களின் பொருட்களை அபகரிக்கும் படி கூறியுள்ளார். 5) முஹம்மதுவின் சொல்லும் செயலும் அல்லாஹ்வின் வஹியாகும். ஆகையால் தான் முஸ்லிம்கள் முஹம்மதுவை அப்படியே காபி அடித்து வாழவேண்டும் என்று உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். முஹம்மது தாடி விட்டால், முஸ்லிம்களும் தாடி விடுகிறார்கள். இஸ்லாமின்படி, இப்படி முஹம்மதுவை முழுவதுமாக பின்பற்ற முஸ்லிம்கள் முயற்சிப்பது மிகவும் நல்ல விஷயம் ஆகும்.
Posted on: Wed, 24 Jul 2013 03:00:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015