‘‘ராஜா ராணி’’ - TopicsExpress



          

‘‘ராஜா ராணி’’ இயக்குநரிடம் சில கேள்விகள் 1.என்ன தான் ஆர்யாவுக்கு நயனைப்பிடிக்கலைன்னாலும் மேரேஜ் ஆகி 10 நாள் ஆகி அவர் பேரு , போன் நெம்பர் கூடத்தெரியாம இருக்குமா? ஹாஸ்பிடலில் நயன் பேரென்ன என டாக்டர் கேட்க ஆர்யா தெரியாது என்பது கேலிக்கூத்து 2. ஜெய் ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு வர்ரேன்னு சொல்லிட்டு வர்லை . 6 மணீக்கு ஆபீஸ் முடியுது . அப்போ அப்பா சத்யராஜ் கார்ல வந்து நயனை ஜெய் வீட்டுக்கு கூட்டிட்டுப்போறார் , அப்போ அவர் வாட்ச்ல மிட் நைட் 12 17 காட்டுது , அதுக்குள்ளே 6 மணி நேரம் ஆகி இருக்குமா? மீறி மீறிப்போனா 8 மணி தான் ஆகி இருக்கும் , பேக் கிரவுண்ட் ஷாட்டும் மிட் நைட் மாதிரியே கலரிங்க் 3. ஜெய் ரெஜிஸ்டர் மேரேஜ் வரை ஓக்கே சொன்னவர் பின் மனம் மாறுவதற்கு காட்சி ரீதியாக விளக்கம் வைத்திருக்கனும் . ஜஸ்ட் ஒரு டயலாக்கில் அப்பா எதிர்த்தார் என்பது எல்லாம் பத்தாது 4. நயன்தாரா தன் அப்பா மடியில் சாய்ந்து கண்ணீர் விடும்போது கண்ணீர் பச்சைக்கலரில் , நேவி புளூ கலரில் வருது . காட்சியின் சீரியசை காமெடி ஆக்குது . அந்த சோக சீனில் மட்டும் மேக்கப்பை குறைச்சு கண்ணீரை வெள்ளை ஆக்கி இருக்கலாம். 5. படம் முழுக்க கண்ணியமான் உடையில் வரும் நயன் முக்கியமான சோக காட்சியில் சிவப்புக்கலர் புடவையில் அவ்வளவு லோ ஹிப்பில் வர வேண்டுமா?
Posted on: Mon, 30 Sep 2013 17:56:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015