ரஜினி வழியில் தன் - TopicsExpress



          

ரஜினி வழியில் தன் வீட்டில் வேலைப் பார்ப்பவர்களுக்கு வீடு கட்டித் தரும் அஜீத்! ரஜினியை தன் வழிகாட்டியாக அறிவித்ததோடு நில்லாமல், உதவி செய்வதிலும் அவர் வழியையே கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளார் நடிகர் அஜீத். தனது வீட்டில் வேலை பார்க்கும் 10 பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்கிறார். ரஜினி வழியில் தன் வீட்டில் வேலைப் பார்ப்பவர்களுக்கு வீடு கட்டித் தரும் அஜீத்! அஜீத்திடம் நீண்டகாலமாக சமையல் வேலை, வீட்டு வேலை, தோட்ட வேலை செய்யும் 10 ஊழியர்களுக்கு சொந்தமாக வீடு இல்லை. இவர்களுக்கு உதவ முடிவு செய்த அஜீத், இதற்காக பழைய மாமல்லபுரம் (ஓஎம்ஆர்) சாலையில் உள்ள கேளம்பாக்கத்தில் நிலம் வாங்கினார். அந்த நிலம் வீட்டில் பணியாற்றும் 10 பேர் பெயருக்கும் தனித்தனியாக பத்திரப் பதிவு செய்யப்பட்டது. இதில் 10 பேருக்கும் அஜீத் சொந்த செலவிலேயே வீடுகள் கட்டி கொடுக்கிறார். இதற்கான பூமி பூஜை சமீபத்தில் நடந்தது. இந்த நேரம் பார்த்து படப்பிடிப்புக்காக அஜீத் ஹைதராபாத் சென்று விட்டார். தான் இல்லாவிட்டாலும் நல்ல காரியம் தடைப்படக்கூடாது என அஜீத் கூறியதால், அவர் சார்பில் அவரது மனைவி ஷாலினி கலந்து கொண்டார். விரைவில் வீட்டுக்கான கட்டுமான பணிகள் துவங்க உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் தன்னிடம் பணியாற்றிய 50 பேருக்கு கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணையில் 50 கிரவுண்ட் நிலம் ஒதுக்கி, அதில் வீடும் கட்டிக் கொடுத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி என்பது நினைவிருக்கலாம். Read more at: tamil.oneindia.in/movies/news/ajith-construct-free-houses-his-workers-183648.html ரஜினி வழியில் தன் வீட்டில் வேலைப் பார்ப்பவர்களுக்கு வீடு கட்டித் தரும் அஜீத்! ரஜினியை தன் வழிகாட்டியாக அறிவித்ததோடு நில்லாமல், உதவி செய்வதிலும் அவர் வழியையே கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளார் நடிகர் அஜீத். தனது வீட்டில் வேலை பார்க்கும் 10 பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்கிறார். ரஜினி வழியில் தன் வீட்டில் வேலைப் பார்ப்பவர்களுக்கு வீடு கட்டித் தரும் அஜீத்! அஜீத்திடம் நீண்டகாலமாக சமையல் வேலை, வீட்டு வேலை, தோட்ட வேலை செய்யும் 10 ஊழியர்களுக்கு சொந்தமாக வீடு இல்லை. இவர்களுக்கு உதவ முடிவு செய்த அஜீத், இதற்காக பழைய மாமல்லபுரம் (ஓஎம்ஆர்) சாலையில் உள்ள கேளம்பாக்கத்தில் நிலம் வாங்கினார். அந்த நிலம் வீட்டில் பணியாற்றும் 10 பேர் பெயருக்கும் தனித்தனியாக பத்திரப் பதிவு செய்யப்பட்டது. இதில் 10 பேருக்கும் அஜீத் சொந்த செலவிலேயே வீடுகள் கட்டி கொடுக்கிறார். இதற்கான பூமி பூஜை சமீபத்தில் நடந்தது. இந்த நேரம் பார்த்து படப்பிடிப்புக்காக அஜீத் ஹைதராபாத் சென்று விட்டார். தான் இல்லாவிட்டாலும் நல்ல காரியம் தடைப்படக்கூடாது என அஜீத் கூறியதால், அவர் சார்பில் அவரது மனைவி ஷாலினி கலந்து கொண்டார். விரைவில் வீட்டுக்கான கட்டுமான பணிகள் துவங்க உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் தன்னிடம் பணியாற்றிய 50 பேருக்கு கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணையில் 50 கிரவுண்ட் நிலம் ஒதுக்கி, அதில் வீடும் கட்டிக் கொடுத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி என்பது நினைவிருக்கலாம். Read more at: tamil.oneindia.in/movies/news/ajith-construct-free-houses-his-workers-183648.html
Posted on: Thu, 19 Sep 2013 12:51:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015