வைகுண்ட உணவு வகைகள் - TopicsExpress



          

வைகுண்ட உணவு வகைகள் தாவர உணவு வகைகளில் இலை, தண்டு, பூ, காய், கனிகள் , பருப்பு வகைகள் மட்டுமே வைகுண்ட உணவாகும். தாவரங்களின் வேர்கள், கிழங்குகள், மற்றும் மண்ணிற்கு அடியில் வளரும் பகுதிகள் இவ்வகைகளில் சேராது. காளான்கள் வைகுண்ட உணவாகாது. எந்த மிருகத்தின் உடலும், உடலின் பகுதிகளும், இரத்தமும், சதையும், எலும்பும், தோலும் வைகுண்ட உணவாகாது. வீடுகளில் வளர்க்கும் ஆடு, மாடு போன்ற விலங்குகளை துன்புறுத்தாமல் பெறும் பால் வைகுண்ட உணவாகும். நாம் அவற்றிக்கு உணவை கொடுத்து அவைகளிடமிருந்து நமது உணவை எடுத்துக்கொள்வதால் இது ஒரு கைமாறு என எடுத்துக்கொள்ளப்படும். தேனீக்களையும், அவற்றின் கூட்டுப்புழுக்களையும் வதைக்காமல் பெறப்படும் தேன் மருந்தாக பயன் படுத்தும் போது அதனை வைகுண்ட உணவு எனக்கொள்ளலாம். அய்யா வழி அன்பர்களில் சிலர் வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகள் தவிர மற்ற நாட்களில் அசைவ உணவு வகைகளை உட்கொள்ளலாம் என கூறுவது சரியாகாது.ஏனென்றால் "கொல் என்ற வார்த்தை கூறாதே என் மகனே" என்று சொல்கிறது அகிலத்திரட்டு அம்மானை. கொல் என்ற வார்த்தையை கூட சொல்லக்கூடாது என்று சொல்லும் அகிலம் உயிரனங்களை கொன்று தின்பதை எப்படி ஏற்று கொள்ளும்? நிச்சயமாக அகிலதிரட்டும், அய்யா வழியும், அய்யா வைகுண்டரும் ஏற்பதில்லை. வைகுண்டர் தமக்கு ஏவலாக கொண்ட 5 வீரர்களை கூட ( பஞ்ச தேவர்கள் ) அசைவ உணவு பழக்கத்திலிருந்து வைகுண்ட உணவு பழக்கத்திற்கு மாற்றிய பின்னரே ஏற்றுகொண்டார். அய்யா அமைத்த பதிகளிலும் நிழல் தாங்கல்களிலும் அய்யாவிற்கு நியமிக்கும் பால் அன்னம், தவனப்பால், உண்பான் , பனை பொருள்கள்,அனைத்தும் வைகுண்ட உணவிற்கான மிகச்சரியான உதாரணங்கள். முழுவதுமாக தங்களை அய்யா வழிக்கு அர்பணிக்கும் அன்புக்கொடி மக்கள் பதனிட்ட விலங்குகளின் தோல் பொருள்களை ( பெல்ட், கைப்பைகள், காலணிகள் போன்றவை) பயன்படுத்தாமல் தவிர்க்கலாம். முக்கியமாக பட்டு (Silk) வஸ்திரங்களை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் ஆயிரக்கணக்கான பட்டு புழுக்களை கொன்றுதான் பட்டு நூல் தயாரிக்க படுகிறது . விவசாயம் பார்க்கும் அன்பர்களும் பட்டு பூச்சி வளர்த்து அழிக்கும் இந்த தொழிலை தவிர்ப்பது நலமாயிருக்கும். வைகுண்ட வழியில் வாழ்ந்து வைகுண்ட உணவை உண்டு வாழுவோம் பல நூறாண்டு. அய்யா உண்டு.
Posted on: Fri, 05 Jul 2013 12:23:40 +0000

Trending Topics




© 2015