வந்தவாசி நகராட்சியின் - TopicsExpress



          

வந்தவாசி நகராட்சியின் துப்புரவுத் தொழிலாளர்கள் அர்ஜுன் மற்றும் துப்புரவு வாகனம் ஓட்டும் வெங்கடேசன் என்ற இருவர் நகராட்சி குப்பை கிடங்கில் குப்பையை கொட்டிவிட்டு வரும் வழியில் பிளாஸ்டிக் கேன்கள் கிடப்பதை கண்டு திறக்க முயற்சி செய்தபோது அதே இடத்தில் வெடித்து சிதறி இறந்தனர்.சாதாரண மக்களின் குப்பையை அகற்றும் புனித பணியை செய்த ஊழியர்கள் இறந்த நிகழ்வு அறிந்து கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறோம்.இறந்த வெங்கடேசன் நகராட்சி ஆணையாளரின் ஜீப்பினை ஓட்டி வருபவர்.(குறிப்பு:நகராட்சிகளில் இரண்டு ஜீப்,4 லாரிகள் என்று இருந்தாலும் அதை இயக்குவதற்கு டிரைவர் பதவி ஒதுக்குவதில்லை,வாகனம் நன்கு ஓட்டத் தெரிந்த துப்புரவு தொழிலாளர்களையே மாற்று ஏற்பாட்டின் பேரில் பயன்படுத்துகிறோம்.)ஆபத்து தரும் வேதிப்பொருட்கள் அடங்கிய பொருட்களை பயன்படுத்துவோர்,தூக்கி எறிந்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.பொது மக்களுக்கு ஒரு வேண்டுகோள்-எனது குப்பை எனது பொறுப்பு என்பதை மனதில் வையுங்கள்.குப்பை கொட்டும் இடத்தில் இடத்தை வாங்கிவிட்டு குப்பை கிடங்கை மாற்றச்சொல்லும் மக்கள் உள்ள நாட்டில் என் குப்பைக்கு நானே பொறுப்பு என்பதை மனதில் கொள்வோம்.
Posted on: Sun, 31 Aug 2014 07:02:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015