ஹலோ எஃப். எம். 106.4-இன் - TopicsExpress



          

ஹலோ எஃப். எம். 106.4-இன் இன்றைய “பிகில்” நிகழ்ச்சியில்: * அதிகம் வளர்ச்சியடையாமல் இருக்கும் வட கிழக்கு மாநிலங்களில் இருந்து குழந்தைகளை கூட்டிக்கொண்டு வந்து, தமிழ்நாட்டில் விற்கும் அவலம் இப்போது மிகவும் அதிகரித்துள்ளது என ஐ.நா. அவையின் ஓர் அண்மை ஆய்வு கூறியுள்ளது... * அதாவது, நல்ல படிப்பு கிடைக்கும், நல்ல வசதி வாய்ப்புகள் தருவோம் என, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த குழந்தைகளை கூட்டிக்கொண்டு வந்து, தமிழகத்தில் உள்ள செங்கல் சூளைகள், உணவகங்களில் கொத்தடிமைகளாக வேலை பார்க்க வைக்கிறார்கள். * 2012ம் ஆண்டில் மட்டும் இது தொடர்பாக 528 வழக்குகள் பதிவாகியிருக்கு... * உண்மை நிலவரம் என்ன? உண்மை என்ன??? ** நாள்தோறும் நாம வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பலரை பார்க்கிறோம். இங்கே வந்து வேலை செய்து, அதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கைத்தரம் உயர்கிறது என்று நினைக்கிறீங்களா...??? ** இல்லை, இங்கே வேலைக்கு ஆள் கிடைக்காததால வடகிழக்கு மாநிலங்களிலிருந்து ஆட்களை வரவழைத்து அவர்களை நாம ஏமாற்றி Exploit செய்கிறோம்னு நினைக்கிறீங்களா...??? ** அவர்களால் நம்ம வேலைவாய்ப்புகளும், சட்ட ஒழுங்கும் பாதிக்கப்படுகிறதுன்னு நினைக்கிறீங்களா...?? சொல்லுங்க நண்பர்களே... நிகழ்ச்சியில் RJ சுரேஷுடன் உங்களோட கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள 044 - 44669999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்...
Posted on: Thu, 07 Nov 2013 12:23:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015