I, Robot மற்றும் - TopicsExpress



          

I, Robot மற்றும் எந்திரன் நல்லவேளையாக, நான் முதலில் எந்திரன் பார்த்துவிட்டு தான் Will Smith நடித்த I, Robot பார்த்தேன். மாற்றி பார்த்திருந்தால் எந்திரன் பிடித்திருக்காது.. நிறைய இடங்கள் ஷங்கர் காப்பி அடித்திருக்கிறார். (ஷங்கர் ரசிகர்கள் Inspire என மாற்றி படித்துக்கொள்ளவும்) கதாநாயகன் வில்லனை தேடி வரும் போது, அவன் செத்துக் கிடக்கும் காட்சி ஒரு முக்கியமான ட்விஸ்ட். அது I, Robot ட்டிலும் வருகிறது.. அதே போல ரோபோக்கு உணர்ச்சிக் கொடுத்தால் என்னாகும் என்ற சிந்தனை.. கொத்து கொத்தாக சண்டைக்கு வரும் ரோபோக்கள் என பல காட்சிகள் சாலிடாக உருவியிருக்கிறார்கள். ஆனாலும் ஷங்கர் சாமர்த்தியமாக காதல், ஐஸ்வர்யா, ஃபாரின் டூயட் எல்லாம் சேர்த்து வேறு படம் போலவே மாற்றிவிட்டார். (இட்லி வேறு, இட்லி உப்புமா வேறு என்றால் ஆத்துக்காரர் முறைக்கிறார். ஷங்கருக்கு அந்தக்கவலை இல்லை) ஒரிஜினலில் இல்லாத ஒரு காட்சி, எனக்கு எந்திரனில் பிடித்த காட்சியும் கூட - “உயிர் என்றால் என்ன?” ரோபோக்கு உணர்ச்சிகள் வர ரஜினி போராடும் காட்சியில் கேட்கப்படும் கேள்வி. யாரால் பதிலளிக்கமுடியும்? ஷங்கர் இவ்வாறு காட்சியமைத்திருப்பார் - சரியாக அச்சமயம் ஒரு மின்னல் ரோபோ மேல் பாய்ந்து முற்றிலுமாக அதன் இயக்கத்தை நிறுத்தும். ரஜினி மீண்டும் சீரமைப்பார். எழுந்ததும் ரோபோ சொல்லும் - ”புரிந்தது”
Posted on: Thu, 12 Sep 2013 17:41:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015