MY life in bhutan நித்திரை இழந்த - TopicsExpress



          

MY life in bhutan நித்திரை இழந்த சித்திரை விழிகள். நினைந்தே உருகும் முத்திரை கிளிகள். எத்தனை விதமாய் குடும்ப சுமைகள். எரியாமல் கறுத்த கண்ணின் இமைகள்.... தேதியை தேடும் உழைப்பின் களைப்பு. தேவையை நினைத்தால் தேனும் கசப்பு. பாதி தான் மிஞ்சும் சம்பள இருப்பு. பறந்தே அனுப்பும் பாசத்தின் பொறுப்பு.... வியர்வை ரத்தம் உதிருது இங்கே,, விடியல் வந்தும், விடியல் எங்கே, விட்டில் பூச்சி ஆனது அன்பே.. வருடங்கள் ஓட வயோதிகமாகும்.. வாலிப வசந்தம் வறட்சியால் வேகும்.. பெருகிடும் ஆசை நெஞ்சில் காயம்... பொரியலில் மணக்கும் நாட்டு வெங்காயம்.. நெருப்பு காற்றில் கருகும் பூக்கள்.. நெறிஞ்சி முள்ளில் நடக்கும் கால்கள்.. நெருங்கி அழைக்கும் முதுமை நாட்கள்.. நிம்மதி தேடி பறக்கும் ஈக்கள்... ஒரு அறையில் படுப்பது ஒன்பது பேரு... ஒவ்வொரு நொடியும் தெரியுது ஊரு... எதுவரை என்பதை தெரிந்தவர் யாரு.. எதிர்காலம் உண்டு வேலையைப் பாரு.....
Posted on: Fri, 21 Jun 2013 11:59:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015