தன்னை - TopicsExpress



          

தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்(லூக்கா 18:14) பிரியமானவர்களே! சமீபத்தில் பெங்களூரிலிருந்து, ஒரு சகோதரி ‘ இப்படியாய் சாட்சி எழுதியிருந்தார்கள்: அவர்களுக்குத் திருமணமாகி, சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் கணவர் தினமும் வேலைக்குப்போவார், சாயங்காலம் வீட்டிற்கு வந்துவிடுவார். ஆனால், சில வருடங்களுக்குப்பின்பு, அவர் இரவில் வீட்டிற்கு வருவதற்கு சற்று காலதாமதமானது. மனைவி கேட்டார்கள், ஏனப்பா, திடீரென்று கால தாமதமாகி வருகிறீர்கள்? புது மேனேஜர் வந்திருக்கிறார், வேலை அதிகமாயிற்று என்றார். சில நாட்களுக்குள், இரண்டு, மூன்று நாட்கள் வீட்டிற்கு வருவதையே நிறுத்திவிட்டார். விசாரித்தபொழுது, அலுவலகத்தில் புது மேனேஜராக வந்த பெண்ணோடு அவர் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. அதைக்கேட்டால் குடும்பத்தில் சண்டை, சச்சரவு, வேதனை! அதற்குபின் அவர் தன் வீட்டிற்கு வருவதையே நிறுத்திவிட்டார். இந்த சகோதரிக்கு மிகுந்த வேதனை, கண்ணீர்! அப்பொழுதுதான், ‘ ஊழியத்தைக் குறித்து கேள்விப்பட்டு, ‘குடும்ப ஆசீர்வாதத்திட்டத்தில்’ சேர்ந்து, ஊழியத்திற்கு காணிக்கை அனுப்பினபோது, என்னுடைய செய்தி அடங்கிய சிடி ஒன்று அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சிடியிலிருந்த செய்தியைக் கேட்டார்கள். அந்த செய்தியில், கணவன் மனைவிக்குள் பிரிவினை இருந்தால், ஒருவருக்காக ஒருவர் ஜெபம் செய்யுங்கள், குறைகள், குற்றங்களை ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். ஒருவர் மற்றொருவருக்கு தீர்க்கதரிசனம் உரையுங்கள். அப்பொழுது சுத்திகரிக்கப்படுவீர்கள், விடுதலையாவீர்கள், சுகமாவீர்கள் என்று சொல்லியிருந்தேன். அந்த சகோதரி இந்த செய்தியைக் கேட்டதும், தன்னைத்தாழ்த்தி, முழங்காற்படியிட்டு, ஆண்டவரே, என் கணவர் இப்படி பிரிந்து போவதற்கு, நான் ஏதாவது தவறு செய்திருந்தால், என்னை மன்னியும் என்று கதறி ஜெபித்தார்கள். ஆண்டவர் அவர்களுக்கு ஒரு தெய்வீக சமாதானத்தைக் கொடுத்தார். அடுத்த நாள் காலையில் திடீரென்று கணவர் வந்து கதவைத்தட்டினார். திறந்தபோது மகிழ்ச்சியோடு உள்ளே வந்தார். அவர் புதிய மனிதனாக மாறியிருந்தார். மனைவியிடம் அன்போடு பேசினார். அவர்களை அதிகமாக நேசிக்க ஆரம்பித்தார், நாட்கள் கடந்தன! திரும்ப போய்விடுவாரோ என்று மனைவி திகைத்தார்கள். ஆனால், அவரோ போகவேயில்லை. என்ன நடந்தது? என்று மனைவி வினவியபோது, திடீரென அந்த அம்மாவுக்கும், எனக்கும் சண்டை வந்தது. அவள் என்னை தூக்கி எறிந்துவிட்டு போய்விட்டாள். அப்பொழுதுதான் நான் உன் அன்பை நினைவு கூர்ந்தேன். என்னை மன்னித்துவிடு, இனிமேல் நான் உன்னை விட்டு எங்கும் போகமாட்டேன் என்றார். ஆனந்த மகிழ்ச்சி அவர்களுக்குள் பிரவாகித்தது. கர்த்தர் அவர்கள் குடும்பத்தைகட்டி எழுப்பினார். …தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் (லூக்கா 18:14) என்ற வேத வாக்குதான் எத்தனை உண்மை! பிரியமானவர்களே மற்றவர்களையே குற்றப்படுத்திக் கொண்டிருக்கும் நம் கையில் இரத்தம் வந்துவிடுகிறது. ஆனால், குறைகள் இருக்கிறதோ இல்லையோ, ஆண்டவரே, என்னில் ஏதாவது குறையிருந்தால் தயவாய் என்னை மன்னித்துவிடும்; என் பாவங்களைக் கழுவும், என்னை மறுரூபமாக்கி குணமாக்கும், குடும்ப உறவுகளில் உள்ள நெரிசலை குணமாக்கும் என்று அவர் சமூகத்தில் தாழ்த்தி ஒப்புவித்து, இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்படும்பொழுது, உங்கள் உறவுகளை புதுப்பிப்பார். உங்கள் குடும்ப வாழ்க்கையைக் கட்டியெழுப்புவார். ஜெபம்: என் அன்பிற்குரிய தகப்பனே, என்னை முற்றிலுமாகத் தாழ்த்தி உம்மிடத்தில் அர்ப்பணிக்கிறேன். என் இருதயத்தை நன்றியுள்ள இருதயமாய் மாற்றும். தேவனே உம்முடைய கிருபையினாலே சகல குறைவுகளையும் என்னிலிருந்து நீக்கியருளும். என்னுடைய வாழ்க்கையில் உம்முடைய தெய்வீக சமாதானத்தையும், சந்தோஷத்தையும் அளவில்லாமல் கட்டளையிட்டருளும். உம்முடைய கரத்தில் என்னை தாழ்த்தி ஒப்படைக்கிறேன், பரிசுத்த ஜீவியத்தை எனக்கு கட்டளையிட்டு என்னை உயர்த்தியருளும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே, ஆமென்! For everyone who exalts himself will be humbled, and he who humbles himself will be exalted. (Luke 18:14) Dearly beloved, Recently, a sister from Bengaluru sent a letter to sharing her testimony thus: She was leading a happy married life. Her husband used to go to work regularly and return in the evening. In due course, he started coming home late at night. When she asked the reason, he said he had got a new manager and hence there was a heavy work load. After a few days, he did not come home for three consecutive days. When she made further inquiries, she found that he was having an affair with that new lady manager. Arguments, fights and strife filled their home after which he completely stopped coming home. This sister was in tears and agony. All her hopes were cut off! It was then that she heard about the ministry and enrolled herself in the Family Blessing Plan. A CD containing one of my messages was sent to her as a compliment for her offering. I had spoken in the message, “If there’s division between the husband and wife, you ought to pray for one another. Forgive each others’ trespasses; say prophecy for one another; then you shall be cleansed; you shall be delivered and healed.” On hearing that, she humbled herself and knelt down and prayed with tears, “Lord, if I had done anything wrong and caused my husband to go away from me, please forgive me.” The Lord filled her with a divine peace. The next morning, her husband came to the house all of a sudden and knocked at the door. When she opened the door, he stepped in joyously for he had become a new man. He spoke to her lovingly and began to love her genuinely. Days passed by! The wife was apprehensive that he may again go back to his sinful life. But it was not so. When she asked him what had happened, he said, “Suddenly that woman and I had a big fight and she threw me out. Only then I was reminded of your love. I now fully trust you. Please forgive me. I will never go away from you.” She was filled with joy! The Lord built up their family life. Dearly beloved, you should not blame or accuse others. Whether you are at fault or not, when you humble ourselves in the presence of God and tell Him, “Lord, if there is any transgression in me, please forgive me. Cleanse my sins and transform me,’ and are cleansed by His blood, He will heal you. He will renew your life. He will build up your family life. There shall be healing for you. How true is the Scripture verse, “He who humbles himself will be exalted (Luke 18:14)! Hence humble yourself before God and forgive the shortcomings of one another and love one another with a pure heart. Then you will have divine blessings and peace in your life. Prayer: Loving Lord Jesus, I humble myself before your presence and seek You with all my heart. Please fill my heart with your divine love. Enable me to forgive others’ shortcomings and love them with a pure heart. Give me the grace to pray for them. May I have divine blessings and peace in my life. Your matchless name I pray. Amen. ----
Posted on: Wed, 23 Oct 2013 14:48:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015