தப்லீக் ஜமாஅத்தில் - TopicsExpress



          

தப்லீக் ஜமாஅத்தில் செல்பவர்கள் பீடி, சிகரெட் புகைப்பதை ஒரு பொருட்டாகக் கருதுவது கிடையாது. இதில் இருப்பவர்கள் பலர் சர்வ சாதாரணமாக பீடி, சிகரெட் புகைப்பதைக் காண முடியும். தப்லீக் ஜமாஅத்தில் செல்லும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் அங்கு தரப்படும் உணவுக்கும் ஓய்வுக்கும் அடிமையாகி படிப்பில் கோட்டை விடுவதைப் பார்க்கிறோம். அதுபோன்று தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலை ஒழுங்காகச் செய்யாமல் 40 நாள், 4 மாதம் 10 நாள் விடுமுறை விட்டுச் செல்வதால் திவாலாகி விடுவதையும், ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் தப்லீக் செல்வதால் வேலையை விட்டு வெளியேற்றப்படுவதையும் கண்கூடாகக் கண்டு வருகிறோம். இப்படி தப்லீக் என்ற பெயரில் மார்க்கத்தில் இவர்களது அறியாமையின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. அவை அனைத்தையும் சொல்வதற்கு இந்த இதழ் போதாது. விரிவான விளக்கங்களுக்கு தஃலீம் தொகுப்பு ஓர் ஆய்வு என்ற நூலைப் பார்க்கவும். தொடரும் ..... - ஏகத்துவம் மே 2013
Posted on: Tue, 01 Oct 2013 11:40:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015