பாரதீய ஜனதா பந்த்: - TopicsExpress



          

பாரதீய ஜனதா பந்த்: கல்வீச்சில் புதுவை பெண் என்ஜினீயர் முகம் சிதைந்தது புதுச்சேரி, ஜூலை.23 புதுவை வைத்திக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேஷ். புதுவை கருவூலத்தில் கேஷியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் சியாமளா (வயது 23). என்ஜினீயர். இவர் சென்னையில் காரப்பாக்கத்தில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவன்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். விடுமுறையில் அவர் ஊருக்கு வந்திருந்தார். நேற்று அதிகாலை 5.45 மணிக்கு அவர் புதுவையிலிருந்து சென்னைக்கு தமிழக அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். பந்த் போராட்டத்தையொட்டி பாரதீய ஜனதா கட்சியினர் நேற்று பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் பஸ் கோட்டக் குப்பம் அருகே சென்ற போது ஒரு கும்பல் சியாமளா சென்ற பஸ் மீது சரமாரியாக கல்வீசி தாக்கியது. இதில் கண்ணாடி உடைந்து பஸ்சில் ஜன்னலோரம் அமர்ந்து பயணம் செய்த சியாமாளவின் முகத்தில் குத்தி கிழித்தது. இதில் அவர் முகம் சிதைந்தது. உடனடியாக அவரை டிரைவர் முருகனும், கண்டக்டர் செல்வமும் காலாப்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக அவரை சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல தீர்மானித்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. maalaimalar/2013/07/23145515/BJP-Bandh-stone-threw-femal
Posted on: Tue, 23 Jul 2013 11:00:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015